Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

பானுமதி அருணாசலம்.

வர்த்தகம்

##~##

இந்த வாரம் தங்கம், கச்சா எண்ணெய், இயற்கை ரப்பர் மற்றும் காரீயம் குறித்து சொல்கிறார் கமாடிட்டி சந்தை நிபுணர் ஷியாம் சுந்தர்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தங்கம்!

''இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு சாதகமான செய்திகள் வந்ததன் காரணமாக கடந்த வியாழக்கிழமை அன்று 22 டாலர்கள் உயர்ந்தது. சீனாவின் டிசம்பர் மாத ஏற்றுமதி எதிர்பார்த்ததைவிட அதிகரித்தது முக்கியமான காரணம்.

இதற்கிடையில் ஐரோப்பிய மத்திய வங்கி தனது கடன் கொள்கையில் எந்தவித மாற்றமும் செய்யாது எனவும் ஐரோப்பிய பொருளாதாரத்தில் தற்போது இருக்கிற மந்தநிலை 2013 கடைசியில் ஓரளவுக்கு விலக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து டாலர், யூரோவிற்கு நிகராகச் சரிந்தது. 2012 மார்ச்சுக்குப் பிறகு முதல்முறையாக ஸ்பெயின் நாட்டின் 5 சதவிகித முதிர்வுகொண்ட பத்து வருட கடன் பத்திரங்களை விற்று முடித்ததால் யூரோவின் மதிப்பு டாலருக்கு நிகராக அதிகரித்தது.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

அடுத்து, அமெரிக்காவில் ஜனவரி 5-ம் தேதி முடிவடைந்த வாரத்தில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகரித்து காணப்பட்டதும் இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இப்போது உள்ள நிலையில் டாலரின் மதிப்பு குறைவு, விழாக்கால தேவை, அடுத்த மாதம் வரவிருக்கும் சீனாவின் புதிய வருட துவக்கத்தை ஒட்டி ஏற்படும் தேவைகள் போன்றவை சர்வதேச அளவில் தங்கத்தின் விலைச்சரிவை தடுக்கும் காரணிகளாக அமையும்.

இந்தியாவில், அரசாங்கம் எடுக்கக்கூடிய இறக்குமதி மீதான வரி உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படுகிற ஏற்ற, இறக்கம் தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை, சர்வதேச அளவில் கடந்த மூன்று மாதங்களில் பெரிய விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள். வியாழன் அன்று வெளியிடப்பட்ட சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி குறித்த புள்ளிவிவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி, ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்கிற அறிவிப்பு. 2012-ல் சீனா 6.8 சதவிகிதம், அதாவது, 271 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிற்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இதனால் வியாழக்கிழமை அன்று என்.ஒய்.எம்.இ. (ழிசீவிணி) கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கிடையே 94.70 அமெரிக்க டாலரைத் தொட்டது.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

மேலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் அறிவிப்பால் யூரோவின் மதிப்பு  டாலருக்கு நிகராக அதிகரித்தது. அது மட்டுமல்லாமல், எண்ணெய் உற்பத்தி ஏற்றுமதி செய்யும் 'ஒபேக்’ நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா தனது டிசம்பர் மாத உற்பத்தியில் 4,65,000 பேரல்களை குறைத்துள்ளது. 2008 நவம்பருக்குப் பிறகு இந்த அளவிற்கு உற்பத்தியைக் குறைத்து, சந்தையில் தேவையை உருவாக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையில் பெரிய சரிவு இருக்க வாய்ப்பில்லை.

இயற்கை ரப்பர்!

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

உற்பத்திக்கும், தேவைக்கும் உள்ள இடைவெளி பெருமளவு அதிகரித்து வருகின்ற காரணத்தால், டயர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து ரப்பரை இறக்குமதி செய்து வருகின்றன. மேலும், உள்நாட்டு உற்பத்தியானது சென்ற வருடம் 2011 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2012 அக்டோபரில் 3.4 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த நிதியாண்டில் முதன்முறையாக இப்போதுதான் இந்தளவுக்குக் குறைந்துள்ளது என்றாலும், வரும் மாதங்களில் இது சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயத்தில், உள்நாட்டுத் தேவையோ 1.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு ரப்பர் உற்பத்தியில் சுமார் 46 சதவிகிதம் வரை டயர் நிறுவனங்களின் பங்களிப்பு காணப்படுகின்றன.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

2011-2012 நிதியாண்டு முழுவதும் இந்தியா 2,05,050 டன்கள் ரப்பரை இறக்குமதி செய்தது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 8.8 சதவிகிதம் அதிகம். ஆனால், இந்த நிதியாண்டில் ஏப்ரல் தொடங்கி அக்டோபர் மாதத்திற்குள்ளாகவே 1,30,966 டன்கள் இறக்குமதி செய்துள்ளது. இதே நிலைமை நீடிக்கும்பட்சத்தில் இந்த நிதியாண்டு முழுமைக்கும் 2,50,000 டன்களைத் தாண்டக்கூடும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி அதிகம் செய்வதற்கு சொல்லப்படுகின்ற முக்கிய இரண்டு காரணங்கள் என்னவெனில்,

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

உள்நாட்டு ரப்பர் விலையைவிட சர்வதேச விலை குறைவாகவே காணப்படுவது, அடுத்த முதல்/ இரண்டாவது காலாண்டில் டயர் தேவை அதிகரிக்கக்கூடும் என்று கருதுவது. இதன் காரணமாக இப்போது டயர் நிறுவனங்கள் பெருமளவு இறக்குமதி செய்து வருகின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யும்போது ரூபாயின் மதிப்பில் காணப்படுகின்ற ஏற்ற, இறக்கங்களும் ரப்பரின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில்கொள்ளவேண்டும்.

காரீயம்!

2012-க்குப் பிறகு அடிப்படை உலோகமான காரீயத்தின் கையிருப்புக்கும் தேவைக்குமான விகிதாசாரம் குறைந்துள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தொழில் சார்ந்த தேவையும் வாகனத் துறைகளின் தேவைகளும் காரீயத்தின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. எல்.எம்.இ. கிடங்குகளிலிருந்து அனுப்புவதில் ஏற்படுள்ள தாமதம், சிறிய அளவில் தயாரிக்கும் நிறுவனங்களின் சப்ளை குறைவு, பருவகாலத்து தேவைகள், பராமரிப்பு காரணமாக பெரு போன்ற நாடுகளில் உருக்காலைகள் மூடப்படுவது இவைகளின் காரணமாக காரீயத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட சாண்டி புயல் காரணமாக பேட்டரி தேவை அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வருட காலத்தில் காரீயத்தின் விலை 9 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அடிப்படை உலோகங்களில் காப்பர், அலுமினியம் இவற்றைக்காட்டிலும் காரீயத்தின் தேவை ஊகத்தின் அடிப்படையில் இல்லாமல் பயன்பாட்டின் தேவை காரணமாக விலை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார்கள்.''  

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)