Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

பானுமதி அருணாசலம், செ.கார்த்திகேயன்.

அக்ரி கமாடிட்டி!

பானுமதி அருணாசலம், செ.கார்த்திகேயன்.

Published:Updated:

வர்த்தகம்

##~##

இந்த வாரம் மிளகு குறித்து விளக்கமாக ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஜோனல் புராடக்ட் இன்சார்ஜ் முருகேஷ்குமார் சொல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 மிளகு (Pepper)

அக்ரி கமாடிட்டி!

''பொதுவாக மிளகு வரத்து ஜனவரி முதல் வாரம் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை வரத்து இருக்கும். ஆனால், இந்த வருடம் ஜனவரி மாதம் முடியும் தருவாயிலும் வரத்து வரத் துவங்கவில்லை. இதற்கு காரணம், காலநிலை சரியில்லாததே. இதனால் அறுவடையும் தாமதமானது.

பொதுவாக, இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில்தான் மிளகு உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த வருடம் இந்த இரண்டு மாநிலங்களிலிருந்தும் 55,000 மெட்ரிக் டன் மிளகு எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கர்நாடகாவிலிருந்து பிப்ரவரி மாத இறுதிக்குள் 30,000 மெட்ரிக் டன்னும், கேரளாவிலிருந்து பிப்ரவரி நடுவில் 25,000 மெட்ரிக் டன்னும் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

தற்போதையச் சூழ்நிலையில் சப்ளை குறைவாக இருக்கிறது. கடந்த அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சர்வதேச சந்தைகளில் மற்ற நாட்டு மிளகைவிட இந்திய மிளகின் விலை அதிகமாக இருந்தது. அதாவது, இந்திய மிளகு ஒரு டன்னுக்கு 8,350 டாலரும், அதேநேரத்தில் மற்ற நாட்டு மிளகு 7,100 டாலர் விலைக்கும் விற்கப்பட்டது. இந்திய மிளகின் விலை அதிகமாக இருந்ததின் காரணத்தினால் வர்த்தகர்கள் அதை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

மேலும், என்.சி.டி. இ.எக்ஸ் கிடங்கில் 8,000 மெட்ரிக் டன் மிளகு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் தரம் குறித்த பிரச்னையை ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன் மற்றும் உணவுத் துறை விசாரித்து வருகிறது. அடுத்த வாரம் இந்த விசாரணையின் அறிக்கை வெளியாகும். அப்போது இந்த மிளகின் தரம் குறித்த சந்தேகம் தீர்ந்து, 8,000 மெட்ரிக் டன் மிளகு வெளியில் வந்தால் மிளகு விலை குறையும். பிப்ரவரி மாத நடுவில் வரத்து அதிகமானாலும் விலை குறையும். மார்ச் கான்ட்ராக்ட் 352-390 ரூபாய் வரை வர்த்தகம் செய்யலாம்.'

ஜீரகம் (JERAA)

அக்ரி கமாடிட்டி!

ஏற்றுமதி தேவை குறைந்த தால், கடந்த வாரம் ஜீரகம் விலை 1.36 சதவிகிதம் விலை குறைந்து வர்த்தகமானது. என்.சி.டி.இ.எக்ஸ். கமாடிட்டி சந்தையில் மார்ச் மாதத்திற்கான கான்ட்ராக்ட் 185 ரூபாய் குறைந்துள்ளது. இதன் விலை குவிண்டாலுக்கு 13,420 ரூபாயாக இருந்தது. அதேபோல ஏப்ரல் மாதத்திற்கான கான்ட்ராக்ட் 180 ரூபாய் குறைந்துள்ளது. இது ஒரு குவிண்டாலுக்கு 13,480 ரூபாய். சென்ற வாரத்தில் உஞ்ஹா சந்தையில் 20 கிலோ ஜீரகம் 20 முதல் 25 ரூபாய் வரை விலை குறைந்து 2,210- 2,310 ரூபாய் வரை வர்த்தகமானது. இந்த விலை குறைவிற்கு காரணம், அதிகமான தேவை இல்லாததும், இன்னும் தரமான ஜீரகம் விரைவில் சந்தைக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பினாலும்தான். இதனால் வரும் வாரத்திலும் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமாகலாம்.

 மஞ்சள் (TURMERIC)

அக்ரி கமாடிட்டி!

சென்ற வாரம் ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் வரத்து குறைவாகவே இருந்தது. என்றாலும், விலை உயரவில்லை. இதற்கு வட இந்தியாவிலிருந்து ஆர்டர்கள் வராததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. வட இந்தியாவைச் சேர்ந்த சில வர்த்தகர்கள் நிஜாமாபாத் மற்றும் சங்லியில் புதிய வரத்து மஞ்சள் குறைந்த விலையில் கிடைப்பதால் அதை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த சந்தைகளில் மொத்தம் புதிய உயர் ரக மஞ்சள் வரத்து 2,400 பைகள் வந்தன. அதில் 1,167 பைகள் குறைந்த விலைக்கு விற்பனையானது. சென்ற வாரத்தில் ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் 4,399-6,274 ரூபாய் வரை வர்த்தகமானது. ஒரு குவிண்டால் குண்டு மஞ்சள் 4,019-5,585 ரூபாய் வரை வர்த்தகமானது.

 சோயாபீன் SOYBEAN

அக்ரி கமாடிட்டி!

சென்ற வாரத்தில் சோயாபீன் விலை அதிகரித்து வர்த்தகமானது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக தேவை மற்றும் விவசாயிகள் இருப்பை அதிகரித்தது ஆகியவையே சோயாபீன் விலை உயர்விற்கு காரணம். ஐ.ஜி.சி. அமைப்பின் சமீபத்திய தகவல்படி, சீனாவின் உணவு பயன்பாட்டுத் தேவை அதிகரிப்பால் சீன இறக்குமதியின் அளவு 6.8 சதவிகிதம் அதிகரிக்கும். பிரேசிலில் பருவநிலை சரியில்லாத காரணத்தினாலும், அதிக தேவையின் காரணத்தினாலும் இன்னும் சோயாபீன் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism