Published:Updated:

இனி கமாடிட்டிக்கும் வரி ! - கலக்கத்தில் டிரேடர்கள்

இனி கமாடிட்டிக்கும் வரி ! - கலக்கத்தில் டிரேடர்கள்

இனி கமாடிட்டிக்கும் வரி ! - கலக்கத்தில் டிரேடர்கள்

இனி கமாடிட்டிக்கும் வரி ! - கலக்கத்தில் டிரேடர்கள்

Published:Updated:

பிரச்னை

##~##

எதையாவது செய்து வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது மத்திய அரசாங்கம். தங்கத்துக்கான இறக்குமதி வரியை 6 சதவிகிதமாக உயர்த்திய மத்திய அரசாங்கம், அடுத்தபடியாக கமாடிட்டி வர்த்தகத்துக்கும் வரி விதிக்கலாமா என்று யோசித்து வருகிறது. என்ன ஆச்சு மத்திய அரசாங்கத்துக்கு? ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு 0.017 சதவிகிதம் வரி (securities transaction tax)விதிக்கப்படுகிறது. அதாவது, பங்குகளை வாங்கினாலும் சரி, விற்றாலும் சரி பரிவர்த்தனை வரிச் செலுத்த வேண்டும். ஆனால், கமாடிட்டி வர்த்தகத்துக்கு இதுவரை இந்த மாதிரி பரிவர்த்தனை வரி என எதுவும் இல்லை. கடந்த 2009 -ம் ஆண்டு இதுபோன்ற ஒரு வரியை கமாடிட்டி வர்த்தகத்துக்கு விதிக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், பிரதமரின் பொருளாதார ஆலோசகரான சி.ரங்கராஜன் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததால், அந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டது.

இப்போது கமாடிட்டியில் வர்த்தகம் அதிகமாக இருப்பதன் காரணமாக அதற்கும் வர்த்தக வரி விதிக்க வேண்டும் என்று பங்குச் சந்தை தரப்பில் இருந்து நெருக்கடி பிறந்திருப்பதாகத் தெரிகிறது. ஒன்று, கமாடிட்டி வர்த்தகத்துக்கு வரி விதிக்க வேண்டும். இல்லை எனில், பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு இருக்கும் வரியை நீக்க வேண்டும் என்ற பேச்சு பலமாக எழுந்திருக்கிறது. கமாடிட்டி வர்த்தகத்துக்கு வரிவிதித்தால் என்ன விளைவுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷனிடம் கேட்டிருக்கிறது மத்திய நிதி அமைச்சகம்.

இனி கமாடிட்டிக்கும் வரி ! - கலக்கத்தில் டிரேடர்கள்

இதை கேள்விப்பட்டவுடன், கமாடிட்டி எக்ஸ்சேஞ்சைச் சேர்ந்தவர்கள் இது கூடவே கூடாது. இது ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் பாதிக்கும் என்கிற ரீதியில் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள எம்.சி.எக்ஸ்-ன் தென் மண்டல மேலாளர் டி.ஜி.செந்தில்வேலனுடன் பேசினோம்.

''இந்த வரியைக் கொண்டுவருவது நிச்சயம் தேவையற்றது. பங்குச் சந்தையில் இருப்பவர்கள் வேறு; கமாடிட்டி சந்தையில் இருப்பவர்கள் வேறு. பங்குச் சந்தையில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட்கள், வங்கிகள், அந்நிய முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர்கள் முதலீடு செய்ய முடியும், ஆனால், கமாடிட்டி சந்தையில் இவர்கள் வர்த்தகம் செய்ய முடியாது. மேலும், பங்குச் சந்தை பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. ஆனால், கமாடிட்டி சந்தை இப்போதுதான் வளர்ந்து வருகிறது.

மேலும், இங்கு விவசாயிகள், வர்த்தகர்கள் போன்றவர்கள் தங்கள் எதிர்காலத்தை ஹெட்ஜ் செய்வதற்காகவே வருகிறார்கள். ஆனால், இது போல அதிகளவு வரி விதிக்கும்போது மொத்தமாக அவர்கள் சந்தையை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இருக்கிறது. கடைசியில் கமாடிட்டி சந்தையில் வர்த்தகர்களும், ஊக வணிகம் செய்பவர்களுமே இருப்பார்கள். இது சந்தைக்கு நல்லதல்ல. மேலும், ஏற்கெனவே டெலிவரிக்கு வாட் வரி, விற்பனை வரி உள்ளிட்ட பல வரிகளைச் செலுத்திவரும் சூழ்நிலையில் இந்த வரி தேவை இல்லாதது.

இனி கமாடிட்டிக்கும் வரி ! - கலக்கத்தில் டிரேடர்கள்

இதுமட்டுமல்லாமல், கமாடிட்டிக்கு வரி விதிக்கும்பட்சத்தில் 'டப்பா வர்த்தகம்’ அதாவது, முறையற்ற வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்போதே பல வட இந்திய மாநிலங்களில் இது போன்ற வர்த்தகம் நடந்து வருகிறது. (டப்பா வர்த்தகம் என்பது, எந்தவிதமான கணக்கும் இல்லாமல் வர்த்தகம் செய்வது. உதாரணத்துக்கு, கமாடிட்டி டெர்மினலுக்கு சென்று முறையான ஆர்டர்களைப் போடாமல் வாங்கியதாகக் குறித்துக்கொள்வது; லாபம் வந்தால் புரோக்கிங் நிறுவனமோ அல்லது தனிநபரோ வாங்கியவருக்கு லாபத்தைக் கொடுப்பது, நஷ்டம் வந்தால் வாடிக்கையாளர் புரோக்கிங் நிறுவனத்துக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்புவது. இதில் எந்தவிதமான கணக்குவழக்கும் இல்லை). இப்போது வர்த்தகத்துக்கு வரியை விதிக்கும்பட்சத்தில் இந்த 'டப்பா வர்த்தகம்’ இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது'' என்று முடித்துக்கொண்டார்.

பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு வரி இருப்பதால் வர்த்தகர்கள், கமாடிட்டி வர்த்தகத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். இதனால் பங்குச் சந்தையின் வால்யூம் குறைகிறது என்று வெளிப்படையாகவே பி.எஸ்.இ. தலைவர் சொல்லி இருந்தார். இது குறித்து மும்பை பங்குச் சந்தையின் முக்கியமான ஒரு

இனி கமாடிட்டிக்கும் வரி ! - கலக்கத்தில் டிரேடர்கள்

உயரதிகாரியிடம் பேசினோம். ''பங்குச் சந்தையின் வர்த்தகத்துக்கு வரியை நீக்க சொல்லி நீண்ட நாட்களாகக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை நடக்கவில்லை, ஒன்று எங்களுக்கு வரி நீக்க வேண்டும், இல்லை எனில் கமாடிட்டிக்கு வரியை அமல்படுத்தி, சமமான போட்டியை உருவாக்க வேண்டும்'' என்றார்.

இதற்கிடையில் பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு வரி விதிக்கப்பட்டது ஏன் என்பதை தெரிந்துகொள்வோம். இந்த வரியைக் கொண்டு வருவதற்கு முன்பு அந்நிய முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பெரிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளவு முதலீடு செய்து, பிறகு லாபத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

மேலும், எந்தவிதமான வரியையும் செலுத்தாமல் இருப்பதால், அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் வாங்கும்போதும், விற்கும்போதும் ஒவ்வொரு வர்த்தகத்துக்கும் வரியை விதித்து வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதே போல கமாடிட்டி சந்தைக்கு விரிவுபடுத்த மத்திய அரசு நினைக்கிறது.

கமாடிட்டி மற்றும் ஈக்விட்டி சந்தைகளிலும் நிபுணராக இருக்கும் இ.எம்.சி.பழனியப்பனிடம் இந்த வரிப் பற்றி கேட்டோம். ''கமாடிட்டி வர்த்தகத்திற்கு வரியைக் கொண்டு வருவது வேண்டாம் என்றே தோன்றுகிறது.  பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு விதிக்கும் வரியும்கூட நீக்கலாம் என்பதுதான் என் யோசனை. வரி இருக்கும் பட்சத்தில் நிச்சயமான வர்த்தகம் குறையும்; வர்த்தகம் குறையும்போது லிக்விடிட்டி (எளிதில் விற்க முடியாத சூழ்நிலை) குறைய வாய்ப்பு இருக்கிறது.

மேலும், இப்போது இந்திய சந்தையில் வெளிநாட்டில் (சிங்கப்பூரில் நிஃப்டியில் வர்த்தகம் செய்ய முடியும்)  இருந்துகூட வர்த்தகம் செய்ய முடியும். நம்மைவிட வெளிநாடுகளில் கட்டணம் குறைவு. இப்படி ஒரு வசதி இருக்கிறபட்சத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இங்கு வர்த்தகம் செய்வதைவிட வெளிநாட்டில் வர்த்தகம் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுவும் ஒரு

இனி கமாடிட்டிக்கும் வரி ! - கலக்கத்தில் டிரேடர்கள்

இழப்புதான்.

மேலும்,  லாபம் வந்தாலும் சரி, நஷ்டம் வந்தாலும் சரி ஒவ்வொரு வர்த்தகத்துக்கும் வரிச் செலுத்த வேண்டும் என்று சொல்வது சரியாகப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்று செலுத்தும் வரியை, நாம் செலுத்தும் வருமான வரியில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளும் சலுகை இருந்தது. அந்த சலுகையையும் மத்திய அரசு நிறுத்திவிட்டது. வரி விதிக்க முடிவு செய்துவிட்டால், குறைந்தபட்சம் இந்த சலுகையையாவது மத்திய அரசு கொடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கையுடன் முடித்தார்.

வருகிற பட்ஜெட்டில் வருமான வரிக்குச் சலுகை கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், கமாடிட்டி வர்த்தகத்துக்கு வரி விதிக்க முடிவு செய்துவிட்டது போலவே தெரிகிறது.

ஆனாலும் பட்ஜெட்டுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. எந்த 'லாபி’ ஜெயிக்க போகிறது என்று பார்ப்போம்.

-வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism