Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் !

அமர்க்களமான ஐ.டி. பங்குகள்!

செக்டார் அனாலிசிஸ் !

அமர்க்களமான ஐ.டி. பங்குகள்!

Published:Updated:
##~##

ஐ.டி. துறையில் முதலீட்டிற்கு ஏற்ற  நிறுவனப் பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை இனி பார்ப்போம். போட்டிகளை சமாளிக்கவும் புதிது புதிதாகக் கண்டுபிடிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தவும் திறமையான நிர்வாகம் அவசியம். சில ஆண்டுகளாகவே டாலர் மதிப்பு அதீத ஏற்ற இறக்கங்களோடு இருப்பதை அவதானித்த டாடா கன்சல்டன்சி, வளர்ந்துவரும் உள்ளூர் சந்தையில் கவனத்தைத் திருப்பியது.

இன்று ஓரளவு வருவாயை ஈட்டித் தருவதோடு, சர்வதேசச் சந்தை களோடு சம்பந்தப்பட்ட ரிஸ்க்கும் கணிசமாகக் குறைத்தது. முதலீட்டிற்கு உகந்த நிறுவனம் இது. எல்லாத் துறைப் பங்குகளுக்கும் திறமையான நிர்வாகம் அவசியம் என்றாலும், ஐ.டி. துறைக்கு மிக அவசியம். ஏற்றுமதி சார்ந்த துறை என்பதாலும், சேவைத் துறை என்பதாலும் மதிப்பீடு செய்வது கடினம். சுமார் பத்து, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு இலக்க விலையில் சந்தையில் வர்த்தகமான பங்குகள் பல இன்று ஒற்றை இலக்க விலையில் வர்த்தகமாவதைப் பார்க்கலாம். சில, பங்குச் சந்தை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுவிட்டது இன்னும் கொடுமை (பென்டஃபோர், சில்வர்லைன், டி.எஸ்.க்யூ.)!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முழுவதும் ஏற்றுமதியையோ அல்லது உள்ளூர் சந்தையையோ நம்பி இருக்காமல், பரவலாக பல சந்தைகளைச் சார்ந்து இருப்பது நல்லது; ரிஸ்க் குறைவு.  தன்னுடைய வருவாய்க்கு ஒருசில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களையே சார்ந்திருக்காமல், பல வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கும் நிறுவனங்களே பெட்டர். ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டுமே சேவை செய்யாமல் பலதரப்பட்ட துறைகளுக்கு சேவை செய்யும் நிறுவனமாக இருப்பது நல்லது.

செக்டார் அனாலிசிஸ் !

குறைந்த லாபம் ஈட்டும் வெறும் 'பாடி ஷாப்பிங்’ நிறுவனமாக இல்லாமல், அதிக லாபம் ஈட்டக்கூடிய மென்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களே முதலீட்டிற்கு ஏற்றவை.

அதிக வேலைப்பளுவின்போது அதைச் சுளுவாகச் சமாளிக்கும் 'ஸ்கேலப்லிட்டி’ உள்ள நிறுவனங்கள் நல்லவை.

'எம்ப்ளாயி ரிடென்ஷன்’ முக்கியம்; கஷ்டப்பட்டு நிறைய நேரம் செலவு செய்து பயிற்சி அளித்தபின், வேலை தெரிந்த அனுபவமிக்க ஊழியர்களை இழக்காமல் இருப்பது ஒரு கலை. போட்டி நிறுவனத்திற்குச் செல்லாமல் அவர்களை தன் வசம் வைத்திருக்கும் நிறுவனங்கள், சந்தையில் போட்டியைச் சவாலாகச் சந்திக்கமுடியும்.

செக்டார் அனாலிசிஸ் !

1993-ம் ஆண்டு, பங்கு ஒன்று ரூ.95-க்கு வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம். ஆறே ஆண்டுகளில் அதன் விலை 85 மடங்கு அதிகரித்து ரூ.8,000-த்தைத் தாண்டியது! இன்ஃபோசிஸ் ஐ.பி.ஓ. வந்தபோது அதன் மார்க்கெட் கேப் எனும் மொத்த சந்தை மதிப்பே சுமார் ரூ.30 கோடி! இன்று அதன் சந்தை மதிப்பு ரூ.20,000 கோடிகளுக்கு மேல். ரொக்கம் கையிருப்பாக வைத்திருக்கும் இன்ஃபோசிஸ், 2006-ம் ஆண்டிற்குப் பின்னர் போனஸ் பங்குகள் வழங்கவில்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிகிறது. வரும் நாட்களுக்கான கைடன்ஸும் பாசிட்டிவ்வாகத் தந்திருக்கிறார்கள். என்ன ஒன்று; ஓரிரு நாட்களிலேயே

20% அதிகரித்துவிட்டதால், காத்திருந்து சந்தை இறக்கத்தில் முதலீடு செய்வது நல்லது. விப்ரோ மற்றும் டாடா கன்சல்டன்சிக்கும் இது பொருந்தும்.

கவனிக்க வேண்டிய முன்னணிப் பங்குகள்: டி.சி.எஸ்., விப்ரோ, இன்ஃபோசிஸ், ஃபைனான்ஷியல் டெக்னாலஜி, டெக் மஹிந்திரா, ஆரக்கிள், என்.ஐ.ஐ.டி. மற்றும் ஹெச்.சி.எல். டெக்னாலஜி. இவற்றில், பி.எஸ்.இ. ஐ.டி. குறியீட்டில், இன்ஃபோசிஸ் மற்றும் டி.சி.எஸ். ஆகிய இரண்டு பங்குகளின் வெயிட்டேஜ் மட்டுமே 75 சதவிகிதமாக இருப்பதைக் கவனிக்கவும்.

பார்மா மற்றும் வங்கித் துறைகளைப் போலவே, ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிலும் கட்டாயம் இருக்க வேண்டிய துறை ஐ.டி..  

பி.எஸ்.இ. – ஐ.டி. இண்டெக்ஸ்: (6413)

10 பங்குகளை உள்ளடக்கி, 1000 புள்ளிகள் துவக்கப் புள்ளிகளாக, பிப்ரவரி 1, 1999-ல் ஆரம்ப அடிப்படைத் தேதியாகக்கொண்டு, ஆகஸ்ட்9, 1999-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே ஆண்டில் 8 மடங்கிற்கு மேல் அதிகரித்து 2,000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8600-க்கு மேல் சென்றது.

செக்டார் அனாலிசிஸ் !

மீண்டும் ஒரே ஆண்டில், படு பாதாளத்திற்கு இறங்கி 850-க்குக் கீழே வந்தது,

2001 செப்டம்பரில்!

கடந்த ஓராண்டில் சுமார் 17 சதவிகித ஆதாயத்தை சராசரியாகக் கொடுத்துள்ளது இக்குறியீட்டில் உள்ள பங்குகள். இக்குறியீட்டின் தற்போதைய பி.இ. 19 ; இதை அதிகம் எனச் சொல்ல முடியாது; ஆனால், இக்குறியீட்டின் பி.பி. ரேஷியோ (புத்தக மதிப்பில் விலையின் மடங்கு) 6 மடங்குக்கு மேல் வர்த்தகமாகிறது. நிச்சயமாக இது கொஞ்சம் அதிகம்தான்.

மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள பங்குகளின் மொத்தச் சந்தை மதிப்பில் சுமார் 9 சதவிகிதம் இக்குறியீட்டின் பங்களிப்பு என்பது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது (ரூ.6.43 லட்சம் கோடிகள்).

செக்டார் அனாலிசிஸ் !

என்.எஸ்.இ. – சி.என்.எக்ஸ். ஐ.டி.:

துவக்க நாள் : ஜனவரி 1, 1996 துவக்க கால அடிப்படைக் குறியீடு 1000 மே 28, 2004-ம் ஆண்டு இந்த அடிப்படைக் குறியீடு 1000-ல் இருந்து 100-ஆக மாற்றி அமைக்கப்பட்டது. தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஐ.டி. பங்குகளில் மொத்தச் சந்தை மதிப்பில் சுமார் 94 %, இக்குறியீட்டில் உள்ளது. தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துப் பங்குகளின் மொத்தச் சந்தை மதிப்பில் சுமார் 9.50% இக்குறியீட்டில் பிரதிபலிக்கிறது.

மொத்தம் 20 பங்குகள் உள்ளன இக்குறியீட்டில். அவை:

1. சி.எம்.சி. லிமிடெட்.

2. கோர் எஜுகேஷன் அண்ட் டெக்னாலஜீஸ் லிமிடெட்

3. எஜுகாம் சொல்யூஷன்ஸ் லிமிடெட்

4. ஃபைனான்ஷியல் (இந்தியா) லிமிடெட்

5. ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் லிமிடெட்

6. ஹெக்ஸாவேர் டெக்னாலஜீஸ் லிமிடெட்

7. இன்ஃபோ எட்ஜ் (இந்தியா) லிமிடெட்

8. இன்ஃபோசிஸ் லிமிடெட்

9. கே.பி.ஐ.டி. கும்மின்ஸ் இன்ஃபோசிஸ்டம்  

10. மைண்ட்ட்ரீ லிமிடெட்

11. எம்பசிஸ் லிமிடெட்

12. என்.ஐ.ஐ.டி. டெக்னாலஜீஸ் லிமிடெட்

13. ஆரக்கிள் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் சாஃப்ட்வேர் லிமிடெட்

14. பொலாரிஸ் ஃபைனான்ஷியல் டெக்னாலஜி லிமிடெட்

15. ரோல்டா இந்தியா லிமிடெட்

16. டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் லிமிடெட்

17. டெக் மஹிந்திரா லிமிடெட்

18. வக்ராங்கி சாஃப்ட்வேர் லிமிடெட்

19. விப்ரோ லிமிடெட்

20. இ-கிளெர்க்ஸ் சர்வீஸஸ் லிமிடெட்

(அலசுவோம்)