Published:Updated:

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்: 17% வருமானம் சாத்தியமா?

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்: 17% வருமானம் சாத்தியமா?

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்: 17% வருமானம் சாத்தியமா?

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்: 17% வருமானம் சாத்தியமா?

Published:Updated:
##~##

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் 17 சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என பல வங்கிகள் பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரம் தந்து வருகின்றன. மிகவும் பாதுகாப்பான ஃபிக்ஸட் டெபாசிட்டில் 17 சதவிகிதம் வருமானம் கிடைக்கிறதா என்கிற ஆச்சரியத்துடன் பலர் இத்திட்டங்களில் பணத்தைப் போட யோசித்து வருகின்றனர். இது எப்படி சாத்தியம் என்று பார்க்கும்முன், இந்த வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்-ன் முக்கிய அம்சங்கள் பற்றி பார்ப்போம்.

முக்கிய அம்சங்கள்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1. முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி பிரிவு 80சி-ன் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ஓராண்டில் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வருமான வரிச் சலுகை உண்டு.

2. குறைந்தபட்சம் ரூ.100-லிருந்து அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

3. முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள்.

4. முதிர்வுக் காலத்திற்கு முன் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற இயலாது.

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்: 17% வருமானம் சாத்தியமா?

5. டெபாசிட் ரசீதை ஜாமீனாக கொண்டு கடன் பெற இயலாது.

6. முதலீட்டு மீதான வட்டியை மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது முதிர்வின்போதோ வாங்கிக்கொள்ளலாம்.

7. வட்டி வருமானத்திற்கு வரிச் செலுத்த வேண்டும். ஓராண்டில் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்கு மேல் சென்றால், வரிப் பிடித்தம் (TDS) செய்யப்படும்.

8. வரிப் பிடித்தம் தவிர்க்க ஃபார்ம் 15ஜி, மூத்த குடிமக்கள் என்றால் ஃபார்ம் 15ஹெச் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் வங்கியில் கொடுக்கவேண்டும்.

9. பான் நம்பர் தர வேண்டும். இல்லை என்றால் 20% வரிப் பிடிக்கப்பட்டுவிடும்.

10. வாரிசுதாரர் நியமன வசதியுண்டு.

17% வருமானம் சாத்தியமா?

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்: 17% வருமானம் சாத்தியமா?

ஃபிக்ஸட் டெபாசிட்டில் ஆண்டுக்கு 9% வட்டி இருக்கும்போது, நமக்கு எப்படி 17% வட்டி கிடைக்கும் என்பது நியாயமான கேள்வி. இந்த முதலீட்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் வருமான வரிச் சலுகையையும், வரிச் சேமிப்பையும் ஒரு வருமானமாகச் சேர்த்துகொண்டு 17% வரை வட்டி கிடைக்கும் என விளம்பரம் செய்கிறார்கள்.

அதாவது, ஒருவர் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் 30% வருமான வரம்பில் இருந்தால் வரிச் சலுகையாக 30,900 ரூபாய் கிடைக்கும். இதனையும் வருமானமாக எடுத்துக்கொண்டு, முதலீட்டு தொகையான 1,00,000-க்குக் கிடைக்கும் 9% வட்டி வருமானத்தைச் சேர்த்து முதிர்வு வரையிலான வருமானத்தைக் கணக்கிடுகிறார்கள். அதுதான் 17 சதவிகிதமாக வருகிறது. அதே சமயத்தில், ஏற்கெனவே ஒருவருக்கு 80சி- ஷரத்தின் கீழ் பி.எஃப்., இன்ஷூரன்ஸ் பிரீமியம், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் (டியூஷன் ஃபீஸ்)  போன்றவற்றால் வருமான வரி ஆதாயம் கிடைக்குமென்றால், இவைபோக ஒரு லட்சத்தில் மீதமுள்ள தொகைக்கு மட்டுமே இந்த வரிச் சேமிப்பு வங்கி வைப்புநிதி திட்டத்தில் வரிச் சலுகை கிடைக்கும் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு ஒருவருக்கு பி.எஃப்., இன்ஷூரன்ஸ் பிரீமியம் மற்றும் உள்ள இதர 80சி சலுகைகளின் மூலம் மொத்தம் 70,000 ரூபாய்க்கு வரிச் சலுகை கிடைக்குமென்றால், மீதி 30,000 ரூபாய் வரைதான் இந்த ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் வரிச் சலுகை கிடைக்கும்.    

இதனைப் பார்த்து இதில் போடும் பணத்திற்கு 17% வட்டியை வங்கி தரும் என்று தப்பாக நினைக்கக் கூடாது. தவிர, இந்த 17% ஆதாயம் வருமான வரி வரம்புக்கு ஏற்றவாறு மாறுபடும். இதுவே 10 சதவிகித வரி வரம்பில் இருந்தால் முதிர்வு வரையிலான வருமானம் 11.39 சத விகிதம்தான் கிடைக்கும்.

வரிச் சலுகை என்பது நீங்கள் போட்ட முதலீட்டை ஐந்தாண்டுகளுக்கு எடுக்க முடியாது என்பதற்காகத் தரப்படுவதே. இந்த வருமானத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை மேலே உள்ள அட்டவணை மூலம் அறியலாம்.

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்: 17% வருமானம் சாத்தியமா?

யாருக்கு ஏற்ற முதலீடு?

* நிலையான வருமானம் பெற விரும்புகிற, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்ற முதலீடு.

* மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் என்பதால், அவர்களும் முதலீடு செய்யலாம்.

* முதலீடு செய்த தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரிச் செலுத்தவேண்டும் என்பதால் குறைந்த வருமான வரி வரம்புக்குள் இருப்பவர்களுக்கு ஏற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism