Published:Updated:

இறக்குமதிக்கு கூடுதல் வரி...

விலை இன்னும் ஏறும்! இரா.ரூபாவதி. படங்கள்: ஆ.முத்துக்குமார்.

இறக்குமதிக்கு கூடுதல் வரி...

விலை இன்னும் ஏறும்! இரா.ரூபாவதி. படங்கள்: ஆ.முத்துக்குமார்.

Published:Updated:
##~##

எவ்வளவு விலை ஏறினாலும் தங்கத்தின் மீதுள்ள ஆர்வம் மட்டும் நம்மூரில் குறைந்தபாடில்லை. மக்கள் தங்கம் வாங்குவதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என அரசாங்கமும் பல வகையில் யோசித்துப் பார்த்துவிட்டு, இப்போதைக்கு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 4-லிருந்து 6 சதவிகிதமாக உயர்த்த முடிவு செய்திருக்கிறது. இந்த கூடுதல் வரியால் தங்கத்தின் விலை ஜிவ்வென உயர்ந்திருப்பதோடு, இனி இந்தியா முழுக்க கள்ளத் தங்கம் களைகட்டும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருட்களில் அதிக மதிப்பு கொண்டவை தங்கமும், கச்சா எண்ணெய்யும். இதனால் நம் வசமிருக்கும் டாலர் கணக்குவழக்கில்லாமல் வெளியே செல்கிறது.  ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்குமான இடைவெளி அதிகரிக்கிறது. இப்பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை இன்னும் 2% அதிகரித்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி செய்தாலாவது மக்கள், தங்கம் வாங்குவது குறையுமா என்று நினைக்கிறது மத்திய அரசாங்கம். ஆனால், கடந்த ஓராண்டு காலத்தில் ஏற்கெனவே இரண்டு முறை இறக்குமதியை உயர்த்திய பின்பும் மக்களின் தங்க மோகம் குறையவே இல்லை. எனவே, இப்போது மூன்றாவது முறையும் வரியை உயர்த்தி இருக்கிறது.  

இந்த வரி உயர்வு குறித்து பிரின்ஸ் ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் பிரின்ஸன் ஜோஸிடம் பேசினோம். ''தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதால், யாரும் தங்கம் வாங்காமல் இருக்கப் போவதில்லை. தினமும் விலை ஏறி, இறங்குவதைப் போலவே இதையும் எடுத்துக்கொள்வர்கள். இந்த வரி உயர்வினால் ஒரு கிலோ தங்கத்தை இறக்குமதி செய்ய கூடுதலாக 1,25,000 ரூபாய் கூடுதலாகச் செலவாகும். இந்த பணம் மக்கள் தலை மீது விழும்.  

இறக்குமதிக்கு கூடுதல் வரி...

இந்த வரி ஏற்றம் கள்ள சந்தையைத்தான் உருவாக்கும். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், தங்களின் பணத்தை லாபத்துடன் கூடிய முதலீடாக மாற்றிக்கொள்வார்கள். இதனால் தங்க மார்க்கெட் இனி தாறுமாறாக இயங்கத் தொடங்கும்'' என்று எச்சரித்தார்.

தங்க இறக்குமதிக்கான வரியை அரசாங்கம் ஏன் இப்படி உயர்த்திக்கொண்டே போகிறது என பெஞ்ச்மார்க் அட்வைஸரி சர்வீஸஸ் நிறுவனத்தின் இயக்குநர் சண்முகநாதன் நாகசுந்தரத்திடம் கேட்டோம்.

''அரசாங்கம் இப்படி வரியை உயர்த்துவதை விட்டுவிட்டு செலவுகளைக் குறைக்க திட்டமிட வேண்டும். அதோடு வட்டி விகிதங்களை உயர்த்தி, பணவீக்கத்தைக் குறைப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும். இந்த வட்டி விகிதங்களும் உண்மையான வட்டி விகிதமாக இருக்க வேண்டும். பணவீக்க விகிதம் 9 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. ஆனால், வட்டி 7 - 8 சதவிகிதத்துக்குள்தான். இந்த வட்டி விகிதத்தினால் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்து மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள். இதனால்தான் நாம் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.

இறக்குமதிக்கு கூடுதல் வரி...

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைவதால், அரசின் பாண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டியைவிட தங்கத்தில் அதிக வருமானம் கிடைக்கிறது. அரசு மறுசீரமைக்கும் தங்கத் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்றுத் (பொன்சி) திட்டங்களாகவே இருக்கின்றன. இதனால் நடுத்தர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை'' என்றார் அவர்.

தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசாங்கம் வேறு சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதில் ஒன்று, அரசு கோல்டு டெபாசிட் ஸ்கீமில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது. முதலில் இத்திட்டத்தில் அடிப்படையான சில விஷயங்களைப் பார்த்துவிடுவோம்.

அரசு கோல்டு டெபாசிட் ஸ்கீம் என்பது பொதுமக்கள், நிறுவனங்கள், கோயில்கள் அனைத்தும் தங்கள் கையில் இருக்கும் கோல்டு பார், ஆபரணமாக இருந்தால் அதை உருக்கி 24 கேரட் தங்கமாக மாற்றி அதை வங்கியில் டெபாசிட் செய்யலாம். இதற்கு ஒரு சதவிகித வட்டி கிடைக்கும். இந்த வட்டியைத் தங்கமாகவும், பணமாகவும் பெற்றுக்கொள்ளலாம். இப்படி டெபாசிட் செய்யும் கோல்டு பார்களை வங்கிகள் தங்க நகை வியாபாரிகளுக்குக் கடனாகக் கொடுக்கும். இதனாலும் இறக்குமதி குறையும் என மத்திய அரசாங்கம் நினைக்கிறது.

இறக்குமதிக்கு கூடுதல் வரி...

இத்திட்டத்தின் நடைமுறைகள் பற்றி வங்கித் துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். ''இந்த டெபாசிட் ஸ்கீமில் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கத்துக்கு மேலேதான் டெபாசிட் செய்ய முடியும். (இந்த அளவை அரசு 200 கிராமாக குறைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.) இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் தங்கத்தை குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் வரை வைத்திருக்க வேண்டும் (குறைந்தபட்ச காலத்தை ஆறு மாதமாக குறைப்பது பரிசீலினையில் உள்ளது). டெபாசிட் செய்யும் தங்கத்தின் மதிப்பில் 75 சதவிகிதம் வரை கடனும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி விகிதம் நகைக் கடன் வட்டி விகிதத்தைவிட குறைவாகவே இருக்கும். இடைப்பட்ட காலத்தில் நமக்கு பணமாகத் தேவைப்பட்டால் 15 நாட்கள் முன்பாகவும், தங்கமாக எனில் ஒரு மாதம் முன்பாகவே வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.

இத்திட்டத்தை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியபிறகு கோயில்கள்தான் அதிக அளவிலான தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தன. அதற்கடுத்து நிறுவனங்கள்தான் இத்திட்டத்தை அதிகமாக பயன்படுத்தின. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 1,500 கிலோ தங்கம் இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் ஆனது. இதில் 650 கிலோ தங்கத்தைக் கடனாகக் கொடுத்துள்ளன

இறக்குமதிக்கு கூடுதல் வரி...

வங்கிகள்'' என்று விளக்கமளித்தார்கள்.

'இந்தத் திட்டத்தின் கீழ் வங்கியில் தங்கத்தை டெபாசிட் செய்தவர்கள், தாங்கள் டெபாசிட் செய்த தங்கத்தை ஒரே நாளில் திரும்ப கேட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று வங்கி அதிகாரிகளிடம் கேட்டோம். ''அதற்குதான் முப்பது நாள் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறோமே! அந்த சமயத்தில் தேவைப்படும் தங்கத்தை இறக்குமதி செய்து கொடுத்துவிடுவோம்'' என்றார்கள். என்றாலும், அவர்கள் சொல்கிறபடி செயலில் நடந்துவிடுமா என்பது சந்தேகமாக இருந்தது.

தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க அரசாங்கம் பரிசீலிக்கும் இன்னொரு நடவடிக்கை, கோல்டு இ.டி.எஃப்.களில் இருக்கும் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்பது. இ.டி.எஃப். நிறுவனங்களிடம் இருக்கும் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் கூடுதலாக வட்டி கிடைக்கும். ஆனால், நிறுவனங்கள் தங்கள் கையில் இருக்கும் இ.டி.எஃப்-தங்கத்தில் 20 சதவிகிதம் வரைதான் வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும்.

தங்கத்தின் இறக்குமதியை குறைக்க நினைக்கும் அரசு கடைசியில் நடுத்தர மக்களின் மடியில் கை வைப்பது அநியாயமே.

* கடந்த 2011-2012 -ம் நிதி ஆண்டில் இந்தியா வெளிநாட்டில் இருந்து சுமார் ரூ. 3,10,750 கோடி (5,650 கோடி டாலர்) மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்தது. நடப்பு 2012-2013 -ம்

நிதி ஆண்டில் டிசம்பர் வரையில் சுமார் ரூ.2,00,900 கோடி (3,800 கோடி டாலருக்கு) தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.

இறக்குமதிக்கு கூடுதல் வரி...

* உலகின் தங்க உற்பத்தியில் 33% இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் தங்கத்தை முதலீடு நோக்கத்தில் (கோல்டு இ.டி.எஃப்.) வாங்குபவர்களின் எண்ணிக்கை 18 சதவிகிதமும், ஆபரணமாக வாங்குபவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதமாகவும் உள்ளன. மற்றும் தொழிற்துறையில் 12 சதவிகிதமும், மத்திய ரிசர்வ் வங்கிகள் 18 சதவிகிதமும் வைத்துள்ளன. அதோடு இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் வாழ்நாளில் 15 முதல் 80 லட்சம் வரை தங்கம் வாங்குகிறார்கள். தற்போது இந்தியாவில் வீடுகளில் வைத்திருக்கும் தங்கத்தின் மொத்த அளவு சுமார் 15 ஆயிரம் டன் ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism