Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

Published:Updated:

வர்த்தகம்

தங்கம்!

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகப் பொருளாதாரம் சீராகி வருவதை அடுத்து தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கும் முதலீட்டாளர்களின் கவனம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவிகிதமாக அதிகரிக்கும் என ராய்ட்டர்ஸ் சர்வே மூலம் தெரியவந்துள்ளது. இந்த வளர்ச்சிக்குக் காரணம், ஆசிய கண்டத்தில் ஏற்பட்டுவரும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள்தான் எனச் சொல்லப்படுகிறது.

சீனாவில் வெளியிடப்பட்ட தயாரிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு ஜனவரியில் அதிகரித்துள்ளது. சீனாவில் பொருளாதாரம் முன்னேறி வருவதையே இது காட்டுகிறது. சீனாவில் அடுத்த மாதம் சீன வருடப் பிறப்பு வருவதையட்டி பிஸிக்கல் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, தங்க பார்கள் மீதான இறக்குமதி வரியை தற்போதிருக்கும் 4 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. தங்கத்தின் மீதான மோகத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வரும் வாரத்தில் அமெரிக்காவில் ஃபெடரல் பாலிசி மீட்டிங் நடைபெற இருக்கிறது. இந்த மீட்டிங்கை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த மீட்டிங் முடிவைப் பொறுத்தே தங்கத்தின் விலைப்போக்கு இருக்கும்.  

கச்சா எண்ணெய்!

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வர்த்தகமானது. கச்சா எண்ணெய் இன்வென்ட்டரி மத்திய மேற்கு பகுதிகளில் அதிகரித்துள்ளதும் இந்த விலை குறைவுக்குக் காரணம். எனினும், சர்வதேச பொருளாதார நிலைமைகள் சரியாகி வருவதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜப்பானில் கச்சா எண்ணெய் இறக்குமதி சென்ற வருடத்தைவிட 11.2 சதவிகிதம் அதிகரித்து 87.31 மில்லியன் டன்னாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது. அங்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியின்போது அணுஉலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் மூலம் மின்சாரத் தயாரிப்பு அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்தாலும், எதிர்பார்த்த அளவைவிட இன்வென்ட்டரி அதிகரித்திருப்பதால் வரும் வாரத்தில் விலை குறையும்.

இயற்கை எரிவாயு!

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

சென்ற வாரத்தில் ஏற்றம், இறக்கம் என இரண்டையுமே இயற்கை எரிவாயு கண்டது. முதலில், பிராஃபிட் புக்கிங் செய்ததன் விளைவாக விலை அதிகரித்தது. வரும் வாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குளிர் குறையும் என்கிற செய்தி வெளியானதால், இயற்கை எரிவாயு விலை குறைந்தது. இனி வரவிருப்பது வெப்பமான காலநிலை என்பதால் இயற்கை எரிவாயுக்கான டிமாண்ட் குறையும். இதனால் வரும் வாரத்தில் விலை குறைந்தே வர்த்தகமாக வாய்ப்புண்டு.

அடிப்படை உலோகங்கள்!

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

காப்பர்: சென்ற வாரத்தில் காப்பர் விலை குறைந்து வர்த்தகமானது. காப்பரைத் தயாரிக்கும் சுரங்க நிறுவனங்கள் அதிகப்படியான சப்ளை வைத்துள்ளதாகக் கூறுகிறது. மேலும், சீன வர்த்தகர்கள் அதிக அளவில் காப்பரை ஸ்டாக் செய்துள்ளனர். இது சீனாவிலிருந்து ஏற்படும் டிமாண்டை சரிகட்டும் என கூறப்படுகிறது. சீனாவிலும், ஜெர்மனியிலும் தயாரிப்பு குறித்த விவரங்களும் சாதகமாகவே இருக்கிறது. ஐரோப்பாவில் பொருளாதாரம் மீண்டு வருவதாகச் சொல்லப்படுவதால் காப்பரின் தேவை அதிகரிக்கலாம். இதனால் வரும் வாரத்தில் காப்பரின் விலை உயர்ந்து வர்த்தகமாகும்.

அலுமினியம்: சீனாவில் அலுமினியம் உற்பத்தி கடந்த டிசம்பரில் 56,800 டன்னாகவும், நவம்பர் மாதத்தில் 55,400 டன்னாகவும் உள்ளதாக சர்வதேச அலுமினிய இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரித்தாலும் சர்வதேசப் பொருளாதார நிலவரங்களை வைத்து பார்க்கும்போது அலுமினியத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. இவ்வாரம் அலுமினியத்தின் விலை அதிகரிக்க  வாய்ப்புண்டு.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

நிக்கல்: தென் கொரியாவில் 500 டன் நிக்கலை வாங்குவதற்கான டெண்டர் ரத்தாகியுள்ளது. சில டெக்னிக்கல் பிரச்னை காரணமாக இந்த டெண்டரை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மறுசுழற்சி மூலம் பயன்படுத்தப்படும் நிக்கல் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் மூலம் தெரிகிறது. நிக்கலுக்கான தேவையையே இது காட்டுகிறது. வரும் வாரத்தில் நிக்கலின் விலை அதிகரித்து வர்த்தகமாகும். குறிப்பாக, அடிப்படை உலோகங்களை அதிகமாகப் பயன்படுத்தும் சீனாவில் பொருளாதாரம் குறித்த புள்ளிவிவரங்கள் பாசிட்டிவ்வாக வருவதால் அது அடிப்படை உலோகங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. எனவே, வரும் வாரத்தில் அடிப்படை உலோகங்களின் விலை அதிகரித்தே வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism