Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

பானுமதி அருணாசலம்.

அக்ரி கமாடிட்டி!

பானுமதி அருணாசலம்.

Published:Updated:

தேவை அதிகமாக இருப்பதால் வரும் வாரத்திலும் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

ஜீரகம்! (Jeera)

அக்ரி கமாடிட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

சென்ற வாரம் வியாழன் அன்று வரத்து குறைந்ததன் காரணமாக ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது. இதற்கு முந்தைய வாரத்தில் 3,400 பைகளாக இருந்த வரத்து, சென்ற வாரத்தில் 2,150 பைகளாகக் குறைந்ததே இதற்கு காரணம். மேலும், வரத்துக்கு மீறிய தேவை இருந்ததும் விலை உயர்வுக்கு இன்னொரு காரணம். இந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் 3.35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ஜீரகம் பயிரிடப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது 9 சதவிகிதம் குறைவு என விவசாயிகள் மத்தியில் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ பரப்பளவு குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சென்ற வெள்ளியன்று, வரத்து அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஏப்ரல் ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட் விலை குறைந்து வர்த்தகமானது. வரும் வாரத்திலும் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

 மிளகு! (Pepper))

அக்ரி கமாடிட்டி!

வரத்து தாமதமானதும், தேவை அதிகரித்ததனாலும் மிளகின் விலை சென்ற வாரத்தில் மட்டும் மூன்று சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமானது. ஸ்பாட் மார்க்கெட்டில் வர்த்தகர்கள் அதிக ஆர்வத்துடன்  வர்த்தகத்தில் ஈடுபட்டனர். சென்ற வருடத்தைவிட இந்த வருடத்தில் மிளகு உற்பத்தி அதிகமாகப் பயிரிடப்பட்டிருந்தது. எனினும், போதிய மழை இல்லாத காரணத்தால் சந்தைக்கு இன்னும் புது மிளகு வரவில்லை. இந்த மாதத்தில் சந்தைக்கு விற்பனைக்கு வரவேண்டிய மிளகு இன்னும் வராமல் இருப்பதும், தேவை அதிகமாக இருப்பதும் வரும் வாரத்தில் மிளகு அதிக விலைக்கு வர்த்தகமாகும். விலை அதிகரிப்பின் காரணமாக பிராஃபிட் புக்கிங் செய்தால், 36,800 என்னும் சப்போர்ட் லெவலுக்குப் பிறகு சந்தை சூடுபிடிக்கும்.

 சோயா எண்ணெய்! (Soybean oil)

அக்ரி கமாடிட்டி!

இரண்டாம் முறையாக அரசு இறக்குமதி வரியை அதிகரிக்கும் என்ற தகவல் சோயா எண்ணெய் விலையில் பிரதிபலித்தது. சோயாபீன் விலை அதிகரிக்க இந்த வாரம் பல காரணங்கள் கூறப்படுகிறது. பிரேசில் நாட்டில் அறுவடை தாமதமாவதும், அர்ஜென்டினா நாட்டில் பயிருக்குத் தேவையான சீதோஷ்ண நிலை சரியில்லாத காரணத்தாலும் உற்பத்தி குறையும் என கூறப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வர்த்தகமானது. சீனா இரண்டாவது காலாண்டில் 15 மில்லியன் டன் சோயாபீனை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதல் காலாண்டைவிட 36 சதவிகிதம் அதிகம் என கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் ரீஃபைண்ட் ஆகாத சோயா ஆயில் இறக்குமதி வரி பத்து சதவிகிதமும், ரீஃபைண்ட் சோயா ஆயிலுக்கான இறக்குமதி வரி 17.5 சதவிகிதமுமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்களால் சோயா எண்ணெய் கான்ட்ராக்ட்கள் அதிக விலைக்கு வர்த்தகமானது. வரும் வாரத்திலும் விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

 மஞ்சள்! (Turmeric)

அக்ரி கமாடிட்டி!

வர்த்தகர்களிடமிருந்தும், ஏற்றுமதியாளர்களிடமிருந்தும் ஆர்டர்கள் வராமலிருந்தும், வரத்து குறைந்ததால் ஸ்பாட் மஞ்சளின் விலை அதிகரித்து வர்த்தகமானது. சென்ற வாரம் 3,000 பைகள் வரை வரத்து வந்தது. விற்பனைக்கு வரத்து வந்த சரக்கில் 75 சதவிகிதம் வர்த்தகர்களிடம் விற்றுவிட்டது. புதிய வரத்து இன்னும் சில நாட்களில் சந்தைக்கு வந்து சேரும். வடமாநிலங்களில் வறட்சி நிலவுவதால் அங்கிருக்கும் வர்த்தகர்களிடமிருந்து வரும் ஏற்றுமதி ஆர்டர்கள் வராமல் போனது. சில வடமாநில வர்த்தகர்கள் குவிண்டால் 5,000 ரூபாய்க்கு மஞ்சளை வாங்கிச் சென்றனர். ஈரோடு

மஞ்சள் சந்தையில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் 4,399 - 6,174 ரூபாய்க்கும், மற்றொரு வகை மஞ்சள் 4,156 - 5,509 ரூபாய்க்கும் சென்ற வாரத்தில் வர்த்தகமானது. தேவை அதிகமாக இருப்பதால் வரும் வாரத்திலும் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism