Published:Updated:

ஷேர்லக் - வாங்கும் எஃப்.ஐ.ஐ.கள்! விற்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் !

ஷேர்லக் - வாங்கும் எஃப்.ஐ.ஐ.கள்! விற்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் !

ஷேர்லக் - வாங்கும் எஃப்.ஐ.ஐ.கள்! விற்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் !

ஷேர்லக் - வாங்கும் எஃப்.ஐ.ஐ.கள்! விற்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் !

Published:Updated:
##~##

''மாலையில் கன்னிமாரா ஓட்டலில் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் பேசுகிறார். அந்த மீட்டிங் அட்டன்ட் செய்துவிட்டு, அப்படியே உம் அலுவலகத்துக்கு வருகிறேன்'' என்று காலையிலேயே போன் செய்து சொன்னார் ஷேர்லக். இரவு எட்டு மணி சுமாருக்கு மீட்டிங் முடித்துவிட்டு, நம் கேபினுக்குள் நுழைந்தார். ''மீட்டிங்கில் என்ன விசேஷம்?'' என்று பேச்சை ஆரம்பித்தோம்.

''நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, பணவீக்கம் என பல விஷயங்களைப் பேசினார். நம் பொருளாதாரம் நல்ல நிலைமையில்தான் இருக்கிறது என்பதை பல புள்ளிவிவரங்களைச் சொல்லி நிரூபிக்க முயன்றார். மீட்டிங் முடிந்தவுடன் சில பத்திரிகையாளர்கள் தனி பேட்டி என்று கேட்டுப் பார்த்தார்கள். ''பட்ஜெட் முடிந்தபிறகு தருகிறேனே!'' என்று நயமாகச் சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார்'' என்று மீட்டிங் விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போனார் ஷேர்லக். அவருக்கு ஏலக்காய் டீ தந்து, சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும் என்று கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சந்தையை நோக்கி எஃப்.ஐ.ஐ.களின் முதலீடு தொடர்ந்து வந்தபடிதான் உள்ளது. முடிந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஈக்விட்டியில் ரூ.22,059.20 கோடிகளும், கடன் சந்தையில் 2,947.10 கோடிகளும் வந்திருக்கின்றன. 2012 ஜனவரி 10,357 கோடி வந்தது. ஆனால் 2011 ஜனவரியில் 4,813 கோடி, 2010 ஜனவரியில் 500 கோடி, 2009 ஜனவரியில் 4,245 கோடி, 2008 ஜனவரியில் 13,035 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்றார்கள். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஜனவரி எவ்வளவோ பரவாயில்லைதான். ஆனாலும், நம்மூர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சகட்டுமேனிக்கு பங்குகளை விற்று வருகின்றன. நம் முதலீட்டாளர்களுக்கு சந்தை மீதான நம்பிக்கை குறைந்து வருவதே இதற்கு காரணம். இப்போதைக்கு நிஃப்டி 5900 என்பது முக்கியமான சப்போர்ட். அதை உடைத்துக்கொண்டு கீழே போகும்பட்சத்தில் 5500 புள்ளிகள் வரைகூட சந்தை இறங்க வாய்ப்புண்டு என்கிறார்கள் அனலிஸ்ட் நண்பர்கள். எதற்கும் உஷாராக இருப்பது நல்லது!'' என்றார்.    

''எல்.ஐ.சி. சில பங்குகளை வேகமாக விற்று வருகிறதே?'' என்று வினவினோம்.

''இந்திய பங்குச் சந்தை, வேகமாக இறங்கி வரும்போது, அது மேலே செல்லவும் பொதுத்துறை நிறுவனங்களின் ஐ.பி.ஓ. வெற்றி பெறவும் எல்.ஐ.சி. ஒத்தாசையாக இருந்தது. இப்போது பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றத்துக்கும் உதவி செய்யப்போகிறது. இதற்காக அதன் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் சில தனியார் நிறுவனப் பங்குகளை விற்றிருக்கிறது. உதாரணத்துக்கு, ஆயில் இந்தியா பங்குகளை வாங்குவதற்காக  எல் அண்ட் டி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகளை விற்றிருக்கிறது. இதேமுறையில் என்.டி.பி.சி., பி.ஹெச்.இ.எல். பங்குகளை வாங்கவும் எல்.ஐ.சி. தயாராகி வருகிறது'' என்கிற ரகசியத் தகவலை எடுத்துச் சொன்னார்.    

ஷேர்லக் - வாங்கும் எஃப்.ஐ.ஐ.கள்! விற்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் !

''மஹிந்திரா சத்யம் நிறுவனம் நிகர லாபம் 74% குறைந்துவிட்டதே..?'' என்றோம்.

''அதுபற்றி கவலைகொள்ள தேவையில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த அபெடீன் நிறுவனத்துக்குத் தரவேண்டிய 294 கோடி ரூபாயை முடிந்த காலாண்டில் தந்ததால்தான் நிகர லாபம் குறைந் திருக்கிறது. இதைத் தவிர்த்துப் பார்த்தால் டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 35% அதிகரித்துள்ளது'' என்றார்.

''ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அடித்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தீரா?'' என்றோம்.

''ஜெட் ஏர்வேஸுக்கு அதிர்ஷ்டமா, இல்லை எதியட் நிறுவனத்துக்கு துரதிருஷ்டமா என்பதைக்  காலம்தான் முடிவு செய்யவேண்டும். ஏற்கெனவே இத்துறை படு டல்லாக இருக்கிறது. கிங்ஃபிஷர் நிறுவனத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் எந்த தைரியத்தில் எதியட் நிறுவனம் ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்கிறது என்று தெரியவில்லை. கூந்தல் இருப்பவர் அள்ளி முடிந்துகொள்ளட்டும். சிறுமுதலீட்டாளர்களும் அவர்களை காப்பி அடிக்க வேண்டாம்!'' என்று அட்வைஸ் தந்தார் ஷேர்லக்.

''ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் விலை கடந்த மூன்று மாதங்களில் 30 முதல் 50% உயர்ந் துள்ளதே..?'' என்று இழுத்தோம்.

''டி.எல்.எஃப்., யூனிடெக், போனிக்ஸ் மில்ஸ், டி.பி. ரியால்டி, இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட், புருவங்காரா புராஜெக்ட் போன்ற பங்குகளின் விலை கணிசமாக ஏறியுள்ளன. நடப்பு ஆண்டில் அதிக எண்ணிக்கையில் ஃப்ளாட்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைக்கப் போவது மற்றும் சொகுசு கட்டுமானத் திட்டங்களில் உள்ள வீடுகள் ஓரிரு தினங்களில் விற்றுப்போவது போன்ற காரணங்களால் இந்த ரியல் நிறுவனப் பங்குகளுக்கு திடீர் தேவை ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டு வருவதால் இந்த விலை ஏற்றம் சிறிது காலத்துக்குத் தொடரும், அதேசமயம் இவர்களின் கடன் நிலைமையையும் கவனத்தில்கொள்ள வேண்டும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்'' என்றவர், ''இன்ட்ரஸ்ட்டிங்கான ஒரு டெவலப்மென்டை கவனித்தீரா?'' என்று கேட்டார். ''என்ன டெவலப்மென்ட்?'' என்று நாம் கேட்க, அதைச் சொல்ல ஆரம்பித்தார்.

''மத்திய அரசு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ.) கொண்டுவந்தது. ஆனால், நான்கு மாதங்களாகியும் எந்த ஒரு வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் நிறுவனமும் இந்தியாவில் முதலீட்டுத் திட்டத்துடன் இதுவரை வரவில்லை..! வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம், எஃப்.டி.ஐ. குறித்த மத்திய அரசின் நிபந்தனைகளை எல்லாம் முழுமையாக அறிந்தபிறகே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வால்மார்ட் இந்தியாவில் அனுமதி இல்லாமல் செய்த முதலீடு சிக்கலுக்கு உள்ளாகி இருப்பதும் வெளிநாட்டு நிறுவனங்களை கூடுதலாக யோசிக்க வைத்திருக்கிறது'' என்றவர், வெங்காய விலை திடீரென உயர்ந்து வருவதைப் பற்றி

ஷேர்லக் - வாங்கும் எஃப்.ஐ.ஐ.கள்! விற்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் !

சொன்னார்.

''14 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாததால் பாரதிய ஜனதா ஆட்சியை இழந்தது. தற்போது அதே வெங்காயம் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைக் கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மஹாராஷ்ட்ரா லாசால்கான் சந்தையில் ஒரு குவிண்டால் வெங்காய விலை  கடந்த ஓராண்டில் சுமார் 525% அதிகரித்து ரூ.2,224 ஆக உயர்ந்துள்ளது. காரீப் பருவத்தில் மழை சரியாகப் பெய்யாததே இதற்கு முக்கிய காரணம். அடுத்து கல்யாண சீஸன் என்பது வெங்காய விலையை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பு என்கிறார்கள். எனவே, விலை குறைந்தால் மொத்தமாக ஒரு மூட்டை வெங்காயம் வாங்கி வைத்துவிடலாம் என்றிருக்கிறேன்'' என்றார் ஷேர்லக்.

''சுஸ்லான் தலைவர் துல்சி ஆர் தண்டிக்கு செபி 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதே..?'' என்றோம்.

''இன்சைடர் டிரேடிங் தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்துவதில் தாமதம் செய்ததே இதற்கு காரணம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்'' என்று புறப்படத் தயாரானவர், கடைசியில் ஒரு ரகசியத் தகவலையும் சொன்னார்.

''பத்தாண்டுக்கு மேலாக இயங்கிவரும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நிதி திரட்ட ஐ.ஆர்.டி.ஏ. வழி ஏற்படுத்தித் தந்தது. இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு நான்கு பொதுத்துறை நிறுவனங்களை ஐ.பி.ஓ.க்கு களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் நிதி நிலையை ஆய்வு செய்ததில், அவை வலிமையாக இல்லையாம். குறிப்பாக, 2011-12-ம் ஆண்டில் இந்த நான்கு நிறுவனங்களின் இழப்பு 6,000 கோடி ரூபாய்க்கு அதிகமாம். இந்நிறுவனங்களில் இரண்டு டிவிடெண்ட்கூட தரமுடியாத நிலையில் இருக்கும்போது எப்படி ஐ.பி.ஓ. வருவது? அப்படியே வந்தாலும் மக்கள் ஆதரவு கிடைக்குமா? என தயக்கம் காட்டுகிறதாம்'' என்றவர், ''சந்தை கலங்கலாக இருப்பதால் ஷேர்டிப்ஸ் வேண்டாமே!'' என்று சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism