Published:Updated:

முடக்கப்பட்ட நிறுவனங்கள்: முடங்கிக் கிடக்கும் ரூ.60,000 கோடி!

வா.கார்த்திகேயன்.

முடக்கப்பட்ட நிறுவனங்கள்: முடங்கிக் கிடக்கும் ரூ.60,000 கோடி!

வா.கார்த்திகேயன்.

Published:Updated:

செபி நடவடிக்கை

##~##
சிறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலீட்டாளர்கள் மீதிருக்கும் அக்கறையின் காரணமாக 'செபி’ பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் ஒன்றுதான் சஸ்பென்சன் (தற்காலிக ரத்து) நடவடிக்கை. அதாவது, விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்களை பங்குச் சந்தையின் தினசரி வர்த்தகத்தில் இருந்து நீக்குவது. இதுபோன்ற நடவடிக்கை தேவை என்றாலும், இதன் இன்னொருப் பக்கமாக சிறுமுதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகை சுமார் 61,000 கோடி ரூபாய் எதுவும் செய்யமுடியாமல் முடங்கி இருக்கிறது. இதுகூட தோராயமான தொகைதான். உள்ளபடி சொல்லவேண்டுமெனில், இது 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலே இருக்கும் என்கிறார்கள். இது இந்திய ஜி.டி.பி.யில் சுமார் 2 சதவிகிதம்.

சமீபத்தில் சி.என்.ஐ. ரிசர்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில், 1,450 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதில் 574 நிறுவனங்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. வர்த்தகத்திலிருந்து நீக்கப்பட்ட இந்த நிறுவனங்களின் மூலம் முடங்கிப் போன 60,000 கோடியில் புரமோட்டர்களின் பங்கு சுமார் 5 சதவிகிதம்தான். அதாவது, சுமார் ரூ.2,975 கோடி. பெரிய நிறுவனங்களின் முதலீடுகூட ரூ.145 கோடி மட்டுமே. மீதமுள்ள ரூ.57,500 கோடி ரூபாய் சிறுமுதலீட்டாளர்களின் பணம்தான். இதில் சுமார் இருபது நிறுவனங் களில் புரமோட்டர்களின் பங்கு ஒரு சத விகிதத்துக்குள்தான். சில நிறுவனங்களில் புரமோட்டர்களின் பங்கு ஒன்றுகூட இல்லை.

முடக்கப்பட்ட நிறுவனங்கள்: முடங்கிக் கிடக்கும்  ரூ.60,000 கோடி!

நிறுவனங்களை முடக்குவதன் மூலம் சிறுமுதலீட்டாளர்களின் பணத்தை எக்ஸ்சேஞ்சுகள் முடக்குவது சரியா, இது மாதிரியான பங்குகளில் முதலீட்டாளர்கள் சிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என பங்குச் சந்தை ஆலோசகர் விக்னேஷிடம் பேசினோம்.  

''சிறுமுதலீட்டாளர்களின் பணம் ரூ.60,000 கோடிக்கு மேல் முடங்கிக் கிடப்பது வருந்தத்தக்க விஷயம் என்றாலும், இதுபோன்ற தரமற்ற நிறுவனங்களின் வர்த்தகத்தை மேலும் தொடர அனுமதித்தால் இன்னும் பல முதலீட்டாளர்கள் இந்த வலையில் விழுந்து பணத்தை இழப்பார்கள். எனவே, இவ்விஷயத்தில் எக்ஸ்சேஞ்சுகளின் முடிவு சரியானது.

முடக்கப்பட்ட நிறுவனங்கள்: முடங்கிக் கிடக்கும்  ரூ.60,000 கோடி!

இதுமாதிரியான நிறுவனங்களில் இருந்து தப்பிக்க தரமான நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர, முதலீட்டாளர்களுக்கு வேறு வழி இல்லை. இ.பி.எஸ்., பி.இ. விகிதம், புத்தக மதிப்பு, டிவிடெண்ட் யீல்டு போன்ற விகிதங்களைப் பார்ப்பதோடு 'கார்ப்பரேட் கவர்னன்ஸ்’ எப்படி இருக்கிறது என்று பார்ப்பதும் முக்கியம்.

முடக்கப்பட்ட நிறுவனங்கள்: முடங்கிக் கிடக்கும்  ரூ.60,000 கோடி!

சமீபத்தில் முன்னணி பத்திரிகை நிறுவனம் ஒன்றின் புரமோட்டர்கள், ஆடம்பரமாகச் செலவு செய்து அந்த நிறுவனத்தைக் கிட்டத்தட்ட ஒழித்துக் கட்டினார்கள்.  இன்னும் சில நிறுவனங்களின் புரமோட்டர்கள் முதலீட்டாளர்களின் பணத்தில் அகலக்கால் வைத்து நாசமாக்கு கிறார்கள். ஒரு கட்டுமான நிறுவனம், அகலக்கால் வைத்து வெளிநாட்டில் ஒரு சுரங்கத்தை வாங்கியது. ஆனால், அதை வெட்டி எடுக்கப் பணமில்லாமல் தடுமாறியது.

ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புரமோட்டர்களின் பங்கே மிகக் குறைந்த சத விகிதத்தில்தான் இருக்கிறது. அந்தப் பங்கும் அடமானத்தில் இருக்கிறது. இதுபோன்ற ஒழுங்கு இல்லாத நிறுவனங்களிலிருந்து முதலீட்டாளர்கள் விலகி இருப்பதே நல்லது.

கிடைக்கிற லாபத்தை சிறு முதலீட்டாளர்களுக்குப் பிரித்துத் தரும், சிறுமுதலீட்டாளர்களின் நலனில் அக்கறை இருக்கும் நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்தால் அசலுக்கு என்றும் மோசம் வராது!'' என்றார்.

நல்ல, தரமான பங்கில் பணத்தைப் போட்டு, அடிக்கடி கண்காணித்து வந்தால், ஏமாற்றம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism