Published:Updated:

நிதி ஆலோசகர்களுக்கான விதிமுறைகள் : ஓட்டைகள் இருக்கும் வலை!

வா.கார்த்திகேயன்.

நிதி ஆலோசகர்களுக்கான விதிமுறைகள் : ஓட்டைகள் இருக்கும் வலை!

வா.கார்த்திகேயன்.

Published:Updated:

பாதுகாப்பு

##~##

அடுத்த மூன்று மாதத்துக்குள் நிதி ஆலோசகர்கள் அனைவரும் பதிவு செய்யவேண்டும் என கெடு பிறப்பித்திருக்கிறது செபி. கடந்த சில ஆண்டுகளாகவே இதை சொல்லிவந்த செபி, இப்போது கெடு காலத்தைக் குறிக்க என்ன காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த ஒரு முதலீட்டுத் திட்டத்தையும் நாமே அலசி ஆராய்ந்து வாங்குகிற அதேவேளையில், அதற்கென இருக்கும் முறையான ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனை செய்துவிட்டு வாங்குவதே நல்லது. ஆனால், முறையான ஆலோசகர்கள் என்பதற்கு கறாரான விதிமுறைகள் எதுவும் இல்லை.

தற்போது இருக்கும் நிதி ஆலோசகர்கள் பல்வேறு நிறுவனங்களின் நிதித் திட்டங்களை விற்பதில் காட்டும் அக்கறையை, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தத் திட்டம் சரியாக இருக்கும் என்று யோசிப்பதில் காட்டுவதில்லை. தவிர, நிதித் திட்டங்களை விற்பவர்களே ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் எந்தத் திட்டத்துக்கு அதிக கமிஷன் வருமானமாக கிடைக்கிறதோ, அதையே விற்கும் போக்கு இருக்கிறது.

இதிலிருந்து சிறு முதலீட்டாளர் களை பாதுகாப்பதற்காக அடுத்த மூன்று மாதத்துக்குள் நிதி ஆலோசகர்கள் அனைவரும் செபியிடம் பதிவு செய்யவேண்டும் என்று சொன்னதோடு அதற்கான விதிமுறைகளை 25 பக்கத்தில் விலாவாரியாக எடுத்துச் சொல்லி இருக்கிறது பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி.  அந்த விதிமுறைகளில் சிலவற்றை ஒரு சாம்பிளுக்குப் பார்ப்போமா?

* நிதி ஆலோசகராக இருப்பவர்கள் செபியிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

நிதி ஆலோசகர்களுக்கான விதிமுறைகள் : ஓட்டைகள் இருக்கும் வலை!

* நிதி ஆலோசனை சொல்பவர் களாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் எந்த நிதித் திட்டங் களையும் விற்கக் கூடாது.

* நிதி ஆலோசகராக இருப்பவர்கள் பொருளாதாரம், நிதி, வங்கி இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். அல்லது நிதிச் சந்தையில் ஐந்து வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* என்.ஐ.எஸ்.எம். தேர்வினை முடித்திருக்க வேண்டும்.

* ஒரு முதலீட்டாளருக்கு அந்த முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் குறித்து கட்டாயம் சொல்லவேண்டும்.

* ஒரு முதலீட்டு ஆலோசகருக்கு ஒரு முதலீட்டில் கிடைக்கும் கமிஷன் எவ்வளவு? அந்த முதலீட்டின் மூலம் ஆலோசகருக்கு ஏதாவது ஆதாயம் இருக்கிறதா? என்பதைச் சொல்லவேண்டும்.

* வாடிக்கையாளர்களின் தகவல்களை குறைந்தபட்சம் ஐந்து வருடம் பாதுகாக்கவேண்டும். மேலும், ஒவ்வொரு வருடமும் ஆடிட் செய்யவேண்டும்.

இதுபோன்ற பல விதிமுறைகளைச் சொல்லி இருக்கிறது செபி. இது தனிநபர் ஆலோசகர்களுக்கு மட்டுமல்லாமல் நிதி ஆலோசனை வழங்கும் வங்கிகள், வங்கி அல்லாத நிறுவனங்கள், வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இவ்வளவு விதிகளை உருவாக்கி இருக்கும் செபி, இந்த விதிமுறைகளிலிருந்து பலருக்கு விலக்கும் அளித்திருக்கிறது. ஐ.ஆர்.டி.ஏ.வில் பதிவு செய்யப்பட்ட இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்கள், அங்கீகரிக்கப்பட்ட பென்ஷன் ஏஜென்ட்கள், அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்கள், வழக்கறிஞர்கள், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்கள், செபியிடம் பதிவு செய்துகொண்ட புரோக்கர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்று சொல்லி இருக்கிறது.

செபியின் இந்த விதிமுறைகள் குறித்து சென்னையில் இருக்கும் முக்கியமான நிதி ஆலோசகரிடம் பேசினோம். வெளிப்படையாக தனது பெயரை வெளியிட விரும்பாத அவர் சொன்ன கருத்துகள் இனி:

''செபி கொண்டு வந்திருக்கும் இந்தப் புதிய விதிமுறைகள் நல்லது என்றாலும், நடைமுறையில் இவை சாத்தியப்படாது. நிதி ஆலோசகர்கள் அனைவரும் செபியிடம் பதிவு செய்யவேண்டும் என்று சொல்லி இருந்தால், அத்தனைபேரும் அதை செய்வார்கள். ஆனால், இத்தனை விதிவிலக்குகள் இருக்கும்போது யாரும் செபியிடம் பதிவு செய்ய வாய்ப்பே இல்லை.  

செபியிடம் பதிவு செய்த சப்-புரோக்கர்கள், சர்ட்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்களாக இருக்கிறார்கள். தவிர, இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் எதற்காக செபியிடம் பதிவு செய்து, அவர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பவேண்டும்? இதனால் பல பிரச்னைகள் வருமே!  செபி சொல்லியிருக்கும் விதிவிலக்குகளை பயன்படுத்தி, அவர்கள் எல்லோரும் பதிவு செய்யாமலே இருந்துவிடலாமே! ஆனால், பெரிய நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை செபியிடம் பதிவு செய்திருக்கும் விஷயத்தையே பாசிட்டிவ்-ஆக எடுத்துச் சொல்லி அதிக வாடிக்கையாளர்களை கவர வாய்ப்பு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை, இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்பதால், இப்போதைக்கு நாங்கள் இதுபற்றி கவலைப்படவில்லை'' என்றார்.

முதலீட்டாளர்களை காக்க நினைக்கும் செபி, தனது வலையை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக அமைத்திருக்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism