##~## |
இந்த வாரம் அடிப்படை உலோகங்கள் குறித்து விளக்கமாக கூறுகிறார் வெல்த் டெரிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணன்.
''அமெரிக்காவின் மானிட்டரி பாலிசி முடிவுகள், இந்தியாவில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது, அமெரிக்கா மற்றும் சீனாவில் பொருளாதாரம் முன்னேறி வருவதற்கான சமிக்ஞைகள் தெரிவதால் அடிப்படை உலோகங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அதிலும் காப்பர் மற்றும் நிக்கல் நல்ல விலை ஏற்றம் வரும் நாட்களில் காணும் வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காப்பரை பொறுத்தவரை சர்வதேச சார்ட் லெவல் பிரேக் ஆனதால் விலை அதிகரித்தது. எனினும், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால், இங்கு அந்த விலை அதிகரிப்பு பிரதிபலிக்கவில்லை. தற்போது ரூ.440 என்ற ரீதியில் வர்த்தகமாகி வரும் ஒரு கிலோ காப்பரை 444, 448 என்ற இலக்கு விலைக்கு வாங்கலாம். இதற்கு ஸ்டாப்லாஸ் 432 ரூபாயாகக்கொள்ளவும்.


நிக்கலைப் பொறுத்தவரை, தற்போது 930-935 (ஒரு கிலோ) என்ற ரீதியில் வர்த்தகமாகிவந்த நிலையில் 983 ரூபாய் வரை அதிகரித்தது. இதனைத் தாண்டி 993 என்ற ரெஸிஸ்டன்ஸ் லெவலைத் தாண்டினால் 1,014, 1,024 ரூபாய் வரை போக வாய்ப்புள்ளது. இதற்கான சப்போர்ட் லெவல் 963 ரூபாய்.
கடந்த ஒன்றரை மாதங்களாக 963 ரூபாயிலே நிலை கொண்டு இருந்த நிக்கல் இப்போதுதான் அந்த லெவலைத் தாண்டி வர்த்தகமாகத் தொடங்கியுள்ளது. அடிப்படை உலோகங்களில் ஒன்றான லெட் தற்போது 129 ரூபாய் என்ற ரீதியில் வர்த்தகமாகி வருகிறது.
இதிலிருந்து 133-135 ரூபாய்க்கு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கான ஸ்டாப்லாஸ் 124 ரூபாய். மொத்தமாகப் பார்க்கும்போது, வரும் வாரம் அடிப்படை உலோகங்களின் விலை அதிகரித்து வர்த்தகமாகவே வாய்ப்புள்ளது. அதனால் வர்த்தகர்கள் தாராளமாக வாங்கலாம்'' என்றார்.
தங்கம்!

சென்ற வாரத்தில் தங்கத்தின் விலை ஒரு சதவிகிதம் வரை குறைந்து வர்த்தகமானது. டெக்னிக்கல் அடிப்படையில் வர்த்தகர்கள் தங்கள் வசமிருந்த கான்ட்ராக்ட்களை விற்றதன் காரணமாக இந்த விலை குறைந்தது. அமெரிக்காவின் ஜி.டி.பி. புள்ளிவிவரங்கள் 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது. இது 2009 வருடத்துக்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். ஃபெடரல் ரிசர்வ்-ன் மீட்டிங் மற்றும் கரன்சியின் ஏற்ற, இறக்கங்கள் விலையில் பிரதிபலித்தது.
கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு அதிகரித்தது. அதேநேரத்தில் டாலருக்கு எதிரான ஜப்பான் யென் மதிப்பு கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. சீனாவில் புது வருடப் பிறப்பு வரவிருப்பதையட்டி அங்கு விடுமுறை வரவிருப்பதால் தங்கத்தின் மீதான டிமாண்ட் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் தயாரிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் அமெரிக்காவின் வேலையில்லா நபர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாவதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை வரும் வாரத்தில் இருக்கும்.
கச்சா எண்ணெய் !
கச்சா எண்ணெய் விலை கடந்த வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. அமெரிக்காவில் வேலையில்லா நபர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், பிராஃபிட் புக்கிங் செய்ததுமே விலை குறைவிற்கு காரணம். எனினும், கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு வருட ஆரம்பத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் விலை இந்த வருட ஆரம்பத்தில் விலை அதிகமாகவே உள்ளது.

மேலும், அமெரிக்க கச்சா எண்ணெய்யைவிட, பிரன்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதிகளில் அதிகப்படியான வர்த்தகம் நடைபெற்றதே பிரன்ட் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க காரணமானது.
இயற்கை எரிவாயு !
சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயு விலை மந்தமாக வர்த்தகமானது. எதிர்பார்த்ததைவிட கையிருப்பு அளவு குறைந்ததன் காரணமாக விலையும் சரிந்தது. மேலும் சீனா, மற்றும் அமெரிக்காவில் தயாரிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் குறைந்ததும் விலையில் பிரதிபலித்தது. வரும் வாரத்தில் இயற்கை எரிவாயுவின் விலை மந்தமான நிலையில் இருக்க வாய்ப்புண்டு.