Published:Updated:

வீட்டுக் கடன் டாப் அப்... எப்படி பெறுவது?

வீட்டுக் கடன் டாப் அப்... எப்படி பெறுவது?

வீட்டுக் கடன் டாப் அப்... எப்படி பெறுவது?

வீட்டுக் கடன் டாப் அப்... எப்படி பெறுவது?

Published:Updated:
##~##

?நான்கு வருடங்களாக வீட்டுக் கடன் தவணை தவறாமல் கட்டி வருகிறேன். தற்போது வீட்டை புதுப்பிக்க டாப் அப் லோன் கேட்டு விண்ணப் பித்தால் எந்தப் பதிலும் இல்லை. கடன் இல்லை என்று மறுக்கவும் இல்லை. என்ன செய்வது?

-செந்தூரன், திருவண்ணாமலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிருஷ்ணன், முதன்மை மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி, நொளம்பூர், சென்னை.

''வீட்டுக் கடன் தவணையைத் தொடர்ந்து நிலுவை இல்லாமல் கட்டிவரும்பட்சத்தில் டாப் அப் கடன் பெறுவதில் சிக்கல் இருக்காது. டாப் அப் லோனுக்குப் போகும்போது ஏற்கெனவே கடனுக்கு திரும்பச் செலுத்தும் தொகையோடு ஒப்பிட்டுபார்ப்பார்கள்; திருப்பிச் செலுத்தும் தொகை குறைவாக இருந்தால் மீண்டும் கடன் தருவதற்கு யோசிக்கலாம். இதனைத் தவிர்க்க  உங்கள் வீட்டின் மதிப்பு உயர்ந்திருப்பதையும், உங்களது வருமானம் அதிகரித் திருப்பதற்கான ஆதாரங்களையும் வங்கி அதிகாரிகளிடம் கொடுத் தால், உங்களுக்கு டாப் அப் கடன் கிடைக்க வாய்ப்புண்டு. அல்லது என்ன காரணத்திற்காக உங்கள் விண்ணப்பத்திற்கு பதில் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட கிளையை நேரில் அல்லது போன் மூலம் அணுகி அறிந்துகொள்ளவும்''.

வீட்டுக் கடன் டாப் அப்... எப்படி பெறுவது?

?பத்திரம் எழுத உரிமம் வாங்க வேண்டுமா, எங்கு வாங்குவது?

- இரா.கண்ணன், துடியலூர்.

ஜீவா, வழக்கறிஞர்.

''பத்திரம் எழுத முறையான உரிமம் வாங்கவேண்டியது அவசியம். அதற்காக அரசு முறையான அங்கீகாரம் வழங்குகிறது. இதற்காக ஐ.ஜி. ஆஃப் ரிஜிஸ்டர் சென்னை அலுவலகம் மூலம் செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும். அவற்றுக்கான தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பிக்கவேண்டும். குறிப்பாக, பட்டப்படிப்பு மற்றும் தமிழ், ஆங்கிலம் டைப்பிங், கணினி அறிவு போன்றவை அடிப்படைத் தகுதிகளாக எடுத்துக்கொள்ளப்படும். பத்திரப் பதிவுத் துறை நடத்தும் தேர்வில் வெற்றிபெற்றால் பத்திர எழுத்தாளர் உரிமம் வழங்கப்படும். இது அந்தந்த மாவட்டத்தின்

வீட்டுக் கடன் டாப் அப்... எப்படி பெறுவது?

தேவைகேற்ற எண்ணிக்கையில்  வழங்கப்படும். இந்த அறிவிப்பு செய்தித்தாள்களில் வெளியிடப்படுவதைக் கவனித்து விண்ணப்பிக்கவேண்டும். இந்த அறிவிப்பு அரசின் ஆணைக்கேற்ப பத்திரப் பதிவு துறையால் வெளியிடப்படும் என்பதால், எப்போது வெளியிடப்படும் என்பதைக் குறிப்பிட முடியாது. தொடர்ந்து செய்தித்தாள்களை கவனிக்கவும்.''

?குளோபல் ஃபண்ட் என்றால் என்ன?

- செந்தில்குமார், நாகர்கோவில்.

ராமகிருஷ்ணன் வி. நாயக், முதன்மை துணைத் தலைவர், பஜாஜ் கேப்பிட்டல்.

''இந்திய பங்குச் சந்தை தவிர்த்து பிற உலக நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளை குளோபல் ஃபண்டுகள் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது கண்டம் என்று முதலீடு செய்யும் ஃபண்டுகளும் இவ்வாறு குறிப்பிடப்படும். ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் பொருளாதார வளர்ச்சி மற்றும் காலநிலைகளுக்கேற்ப பங்குகளில் செய்திருக்கும் முதலீடு வளர்ச்சி

வீட்டுக் கடன் டாப் அப்... எப்படி பெறுவது?

இருக்கும். பொதுவாக ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் 5 முதல் 10 சதவிகிதம் இந்த வகை ஃபண்டுகள் இடம்பெற்றால் போதும்.''

?மியூச்சுவல் ஃபண்டிலும் பவர் ஆஃப் அட்டர்னி இருக்கிறதா? இதை எப்படி பயன்படுத்துவது?

- கதிரவன், சிதம்பரம்.

ராமலிங்கம், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்.

''மியூச்சுவல் ஃபண்டுகளிலும் பவர் ஆஃப் அட்டர்னி இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சேரும்போதே விண்ணப்பத்தில் பவர் ஆஃப் அட்டர்னியின் பெயரும் குறிப்பிடப் பட்டால் உங்கள் சார்பாக அவர் உங்களது போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்க முடியும். அவர் ஃபண்டுகளை வாங்கவோ, விற்கவோ செய்யலாம். ஆனால், பவர் வாங்குபவரும் கே.ஒய்.சி. படிவம் தரவேண்டும். போர்ட்ஃபோலியோ தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகு பவர் ஆஃப் அட்டர்னி தரலாம். ஆனால், அந்த பவரை உங்களது ஃபண்ட் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தி ஒப்புதல் வாங்கினால் மட்டுமே அவர்

வீட்டுக் கடன் டாப் அப்... எப்படி பெறுவது?

அந்த பவரை பயன்படுத்த முடியும்.''

?ஜி.ஏ.ஆர்.பி. (முதலீட்டு முறை) என்றால் என்ன?

- சீதாராமன், நாகப்பட்டினம்.

வெங்கடேஸ்வரன், இயக்குநர், மெக்கனோசி அண்ட் கோ.

''பங்குச் சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையில் குறைந்த விலைக்குக் கிடைக்கும் வளர்ச்சி உள்ள நிறுவனப் பங்குகளாகப் பார்த்து வாங்குவதுதான் ஜி.ஏ.ஆர்.பி. (Growth at a reasonable price)   முதலீட்டு முறை. ஒரு நிறுவனம் எதிர்காலத்தில் சிறந்த வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், தற்போது அதன் பங்குகள் மிகவும் குறைந்த விலைக்கு கைமாறிக்கொண்டிருக்கும். இந்தப் பங்குகளை சரியாக அடையாளம் கண்டு அவற்றில் முதலீடு செய்வது. இந்தப் பங்குகளின் வளர்ச்சி சராசரியாக அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பதால், நீண்டகால நோக்கில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்க முடியும்.''

வீட்டுக் கடன் டாப் அப்... எப்படி பெறுவது?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism