Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

பானுமதி அருணாசலம்.

அக்ரி கமாடிட்டி !

பானுமதி அருணாசலம்.

Published:Updated:
##~##

இந்த வாரம் மிளகாய் குறித்து விளக்கமாக கூறுகிறார் ஐ.எஃப்.ஐ.என். நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் நேஹா.

'இந்த வாரம் மிளகாய் விலை இரண்டு சதவிகிதம் வரை குறைந்து வர்த்தகமானது. இதற்கு காரணம், சீஸன் உச்சத்தில் இருப்பதும், குளிர்பதனக் கிடங்குகளில் அதிக இருப்பு இருப்பதுமே. சென்ற வியாழக்கிழமை குண்டூர் சந்தைக்கு 30,000 பைகள் வரை மிளகாய் வரத்து வந்தது. குளிர்பதனக் கிடங்குகளிலிருந்து 20,000 பைகள் சந்தைக்கு வந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உற்பத்திக் குறையும் என்ற எதிர்பார்ப்பால் விலை மேலும் குறைவது தடுக்கப்படலாம். 2012-2013-ல் (ஜூன் முதல் ஜூலை) சென்ற வருடத்தைவிட, உற்பத்தி 20 முதல் 25 சதவிகிதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீஸனில் உற்பத்தி குறையக் காரணம், பயிரிடப்பட்டிருக்கும் பரப்பளவு குறைந்துள்ளதே. கடந்த சில வாரங்களில் வரத்து அதிகமாக இல்லாமல் இருப்பது உற்பத்திக் குறையும் என்பதை ஊர்ஜிதப்படுத்துவதுபோல் தெரிகிறது.

சென்ற வருடத்தில் ஆந்திர மாநிலத்தில் ராபி பருவத்தில் 50,000 ஹெக்டேர் வரை மிளகாய் பயிரிடப்பட்டிருந்தது. அது தற்போது 41,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளது. காரீஃப் பருவத்தில் சென்ற வருடத்தில் 1,26,461 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப் பட்டிருந்த மிளகாய், இந்த வருடத்தில் 1,12,472 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாத மத்தியிலும் சென்ற வார இறுதியிலும், குண்டூர் சந்தைக்கு சராசரியாக 44,000 முதல் 45,000 பைகள் வரை வரத்து வந்தது. இதே காலகட்டத்தில் சென்ற வருடத்தில் 60,000 முதல் 65,000 பைகள் வரை வரத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அக்ரி கமாடிட்டி !

மொத்தத்தில் பார்க்கும்போது, ஆந்திராவில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது இந்த வருடம் குறைவாகவும், அதேநேரத்தில் தண்ணீர் குறைவால் பயிர்கள் நன்றாக வளராமலும் இருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

மிளகாய் வரத்து இருக்கும் பருவம் என்பதால் விலை 6,600-6,500 ரூபாய்க்கு வர்த்தகமாகும். வரும் நாட்களில் விலை அதிகரிப்பதற்கான காரணிகள் காணப்படுகின்றன.

உற்பத்திக் குறைவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கான ஏற்றுமதி டிமாண்ட் மற்றும் பிற நாட்டுத் தேவை ஆகியவற்றால் இன்னும் மூன்று மாதங்களில் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், விலை குறையும்போது வாங்கினால், மார்ச் மாத கான்ட்ராக்ட் 7,000-7,100 வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. இதற்கு சப்போர்ட் லெவல் 6,550-6,450 ரூபாய். இந்த சப்போர்ட் லெவலை கொண்டு மார்ச் மாத என்.சி.டி.இ.எக்ஸ். கான்ட்ராக்ட்டை வாங்கலாம்'' என்றார்.

ஜீரகம் (JEERA)

அக்ரி கமாடிட்டி !

சென்ற வாரத்தில் வர்த்தகர்கள் ஷார்ட் கவரேஜ் செய்த காரணத்தால் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது. எனினும், வரத்து அதிகரிப்பு மற்றும் டிமாண்ட் குறைவு காரணமாக விலை குறைந்தது. சென்ற வாரத்தில் ஏற்றுமதி டிமாண்ட் குறைந்திருந்தது. தவிர, வரும் பிப்ரவரி மாத இறுதியில் புதிய வரத்து இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 5,00,000 முதல் 6,00,000 பைகள் வரை இருப்பு உள்ளது. டெக்னிக்கல் அடிப்படையில் வர்த்தகர் கள் ஜீரகத்தை வாங்குவதாலும், புதிய பயிர் வரத்து குறித்த தகவல்கள் காரணமாகவும் வரும் வாரத்தில் ரேஞ்ச் பவுண்ட் நிலையில் ஜீரகம் வர்த்தகமாகும். 13,700 ரூபாய்க்கு மேல் சென்றால்தான் விலையில் ஏற்றம் வரும்.

மிளகு (PEPPER)

அக்ரி கமாடிட்டி !

ஏற்றுமதி டிமாண்ட் குறைந்தது, உற்பத்தி அதிகமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு, விற்கும் மனநிலை உள்ளிட்ட காரணங்களால் மிளகு விலை சென்ற வாரத்தில் 1.5 சதவிகிதம் வரை குறைந்து வர்த்தகமானது. மிளகு அறுவடை அதிகரித்திருப்பதால் வரத்து அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் காணப்படுகின்றது. வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மிளகு விலை குறைய வாய்ப்புண்டு.

இந்த வருட மிளகு உற்பத்தி 50,000 டன்களாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே சென்ற வருடத்தில் 48,000 டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. டெக்னிக்கலாக விற்பனை செய்வதும், உற்பத்தி அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினாலும் மிளகு விலை வரும் வாரத்தில் குறைந்தே வர்த்தகமாகும்.

மார்ச் மாத கான்ட்ராக்ட் 36,500 ரூபாய்க்குக் கீழ் விற்பனையாவதால் சந்தை இறங்கும் என்பதற்கான அறிகுறியாகக்கொள்ளலாம்.

‑கடுகு(RM SEED)  

அக்ரி கமாடிட்டி !

உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் கடுகு விலை சென்ற வாரத்தில் குறைந்தே வர்த்தகமானது. புதிய கடுகு சப்ளை அதிகரித்ததே விலை குறைய காரணமாக அமைந்தது. ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் சில இடங்களில் புதிய கடுகு விற்பனைக்கு வந்துவிட்டது. ஜனவரி 24, 2013 நிலவரப்படி, 67.11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கடுகு பயிரிடப்பட்டுள்ளது. இதுவே சென்ற வருடத்தில் இதேசமயம் 65.35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் கடுகு உற்பத்தி 7.75 மில்லியன் மெட்ரிக் டன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உற்பத்தி அதிகமாகவும், டிமாண்ட் அதிகமாகவும் இருப்பதால் கடுகு வரும் வாரத்தில் ரேஞ்ச் பவுண்ட் நிலையில் வர்த்தகமாகும்.

மஞ்சள்(TURMERIC)

அக்ரி கமாடிட்டி !

கடந்த வாரம் கமாடிட்டி சந்தையில் மஞ்சள் குறிப்பிட்ட விலைக்குள் வர்த்தகமானது. மஞ்சளின் தேவை குறைவாக இருந்ததும் விலை ஏற்றம் தடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம். சென்ற வாரம் உள்நாட்டு, வெளிநாட்டு மஞ்சள் தேவை மந்தமாக இருந்ததால் ஸ்பாட் விலை குறைவாக இருந்தது. சந்தை நிலவரப்படி, புதிய மஞ்சள் வரத்து சந்தைக்கு வர ஆரம்பித்திருக்கின்றது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் விற்பனை மந்தமாக உள்ளது. புதிய பயிர் வருகை பிப்ரவரி இறுதியில் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வாரத்தில் ஈரோடு மற்றும் நிஜாமாபாத் சந்தைக்கு வந்த மஞ்சள் வரத்து முறையே 3,100 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) மற்றும் 7,000 பைகள். சென்ற வாரம் நிஜாமாபாத் சந்தையில் 100 கிலோ விரலி மஞ்சள் 5,400 ரூபாய்க்கும், ஈரோடு சந்தையில் 6,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism