Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

பானுமதி அருணாசலம்.

அக்ரி கமாடிட்டி!

பானுமதி அருணாசலம்.

Published:Updated:

வர்த்தகம்

##~##
சென்ற

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாரத்தில் வரத்து குறைவாக இருந்ததால் மிளகு விலை அதிகரித்து வர்த்தகமானது. பயிர் சேதம் மற்றும் தாமதமான அறுவடை போன்றவையும் விலை அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும். கர்நாடகாவிலிருந்தும் கேரளாவிலிருந்தும் மிகக் குறைந்த அளவிலேயே மிளகு வரத்து இருக்கிறது. விலை ஏறும் என்ற எதிர்பார்ப்பில் சந்தையில் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

பிரேசிலில் இருந்து கடந்த ஆண்டு 29,080 டன் அளவிலான மிளகு சுமார் 192 மில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுவே 2011-ம் ஆண்டில் 32,640 டன், 207 மில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பிரேசிலில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகை அதிகமாக நுகர்வது அமெரிக்காதான். அங்கு மட்டும் 9,660 டன் சென்ற வருடத்தில் பிரேசிலில் இருந்து ஏற்றுமதியாகி உள்ளன.

அக்ரி கமாடிட்டி!

மேலும், என்.சி.டி.இ.எக்ஸ். எக்ஸ்சேஞ்சில் ஜூன் 2013 கான்ட்ராக்ட் பிப்ரவரி 11-ம் தேதி துவங்க வேண்டும்.  இது தள்ளிப்போடப்பட்டு உள்ளதாக எக்ஸ்சேஞ்ச் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் வரும் வாரத்திலும் மிளகு விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

அதிக வரத்து இருக்கும் என்ற எதிர்பார்ப் பினால் ஜீரகத்தின் விலை குறைந்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. வர்த்தகர்கள் புதிய ஜீரக வரத்துக்காக காத்திருப்பதால் பழைய

ஜீரகத்தை வாங்க அதிகமாக ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், குஜராத் மாநிலத்தில் அதிகப்படியான பரப்பளவில் ஜீரகம் பயிரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருவதும் விலையில் பிரதிபலிப்பை உண்டாக்கியது.

அக்ரி கமாடிட்டி!

இந்த மாத இறுதியில் புதிய வரத்து இருக்கு மென கூறப்படுகிறது. சென்ற வாரம் புதன் அன்று உஞ்ஹா சந்தைக்கு 4,200 பைகள் வரத்து வந்தன. (ஒரு பை என்பது 55 கிலோ). சென்ற வாரத்தில்  நூறு கிலோ ஜீரகம் 13,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. புதிய வரத்து சந்தையை எட்டும் வரை விலை குறைந்தே வர்த்தகமாகும்.

புதிய வரத்து சந்தைக்கு வருமென்பதால் மஞ்சளின் விலை குறைந்து வர்த்தகமாகும். சென்ற வியாழன் அன்று அதிக தேவை காரணமாக விலையில் ஏற்றம் இருந்தது. புதிய வரத்து

மஞ்சள் சந்தைக்கு எட்டினாலும், இன்னும் வர்த்தகம் சூடுபிடிக்கவில்லை என்றே கூறப் படுகிறது. மஞ்சள் பயிர்கள் சேதமடைந்திருப்பதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. எனினும், அசாம் மாநிலத்திலிருந்து வந்த மஞ்சளுக்கான டிமாண்ட் அதிகரித்ததைத் தொடர்ந்து விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. பிப்ரவரி மாத இறுதியில் வரத்து அதிகரிக்கும் என்று விவசாயிகள் மத்தியில் கூறப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

சென்ற வியாழன் அன்று ஈரோடு மற்றும் நிஜாமாபாத் சந்தைக்கு 3,000 மற்றும் 7,000 பைகள் வரத்து வந்தன. (ஒரு பை என்பது 70 கிலோ). விரலி மஞ்சள் நூறு கிலோ நிஜாமாபாத் சந்தையில் 5,400 ரூபாயும், ஈரோடு சந்தையில் 6,200 ரூபாய்க்கும் வர்த்தகமானது. மஞ்சளின் வரத்தைப் பொறுத்தே இந்த வாரத்தில் விலை இருக்கும்.

சென்ற வாரத்தில் முக்கிய சந்தைகளில் சப்ளை அதிகமாக இருந்தது. ஏலக்காய் விலையில் அது பிரதிபலித்தது. எக்ஸ்சேஞ்சு களில் அதிகப்படியான இருப்பு இருந்ததும் விலை குறைவிற்கு காரணமாக அமைந்தது. தற்போதைய குறைந்த விலை ஏற்றுமதிக்கான தேவையை அதிகப்படுத்தலாம். புதிய வரத்து சந்தையை வந்தடைவதற்கு முன்பே வாங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.

அக்ரி கமாடிட்டி!

எனினும், வடமாநிலங்களிலிருந்து வரும் ஆர்டர்கள் குறைந்தே காணப்படுகிறது. இது மொத்த விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய் கிலோ 17 டாலர் அளவில் விற்பனையாகிறது. இடுக்கி சந்தை ஏலத்திற்கு சென்ற வியாழன் அன்று 52 டன் வந்தது. ஒரு கிலோ ஸ்பாட் சராசரி விலையாக 729 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 994 ரூபாய்க்கும் வர்த்தகமானது. வரும் வாரத்தில் ஏலக்காய் விலை நடுநிலையாக வர்த்தகமாக வாய்ப்புண்டு.

வர்த்தகர்கள் குறைவான ஸ்டாக் எடுத்ததன் காரணமாக சென்ற வாரத்தில் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமானது. இன்னும் சில நாட்களில் தரமான மிளகாய் சந்தைக்கு வரும் என்று வர்த்தகர்கள் காத்திருக்கின்றனர்.

குண்டூர் சந்தைக்கு சென்ற வியாழன் அன்று 37,000 பைகள் வந்தன. மேலும், குளிர்பதன கிடங்கிலிருந்து 10,000 பைகள் வந்தன. புதிய தரமான மிளகாய் வரத்தை எதிர்பார்ப்பதால் விலை குறைப்பு தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறுவடையில் மிளகாய் உற்பத்தி குறையும் என்பதாலும் அதிக அளவில் விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது.

அக்ரி கமாடிட்டி!

ஆந்திராவில் இந்த வருடம் 20% வரை உற்பத்தி குறையும். இந்த வருடம் அங்கு 44,335 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டிருக்கிறது. இதுவே, சென்ற வருடம் 49,760 ஹெக்டேராக இருந்தது. வரத்தைப் பொறுத்து இந்த வாரம் மிளகாய் வர்த்தகம் இருக்கும்.

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism