Published:Updated:

எஸ்.எம்.இ. எதிர்பார்ப்பு: தொழில் வளர்ச்சிக்கு வழி செய்யுங்கள் !

இரா.ரூபாவதி.படங்கள்: ஜெ.வேங்கடராஜ், பா.கார்த்திக்.

எஸ்.எம்.இ. எதிர்பார்ப்பு: தொழில் வளர்ச்சிக்கு வழி செய்யுங்கள் !

இரா.ரூபாவதி.படங்கள்: ஜெ.வேங்கடராஜ், பா.கார்த்திக்.

Published:Updated:

தேவைகள்

##~##

ஒரு நாடு வளர்ச்சி பெறவேண்டுமெனில் தொழில்துறை வளர்ச்சி அடையவேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே தொழில்துறை சுபிட்சமாக இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு, மூலப் பொருட்கள் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு, அரசின் பல்வேறு வரி விதிப்புகள் என பல பிரச்னைகளில் மாட்டித் தவிக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் இந்த வருட பட்ஜெட்டிலாவது தீர்வு கிடைக்குமா என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்ஜெட்டில் சிறு மற்றும் குறுந் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து சிலரிடம் பேசினோம். ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் ஆர்.சுப்ரமணியன் தரும் பட்டியல் இனி:

கடனுக்கான வட்டியைக் குறையுங்கள்!

''பெரிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான உதிரிபாகங்களை சிறு மற்றும் குறு நிறுவனங்கள்தான் உற்பத்தி செய்கின்றன. இதற்குத் தேவையான முதலீடு அவர்களுக்குக் கிடைப்பதில் பிரச்னை நிறையவே இருக்கிறது. முதலீட்டிற்கு கடன் வழங்கும் வங்கிகள் கடனுக்கு ஈடாக அதிக செக்யூரிட்டி  கேட்கின்றன.

பெரும்பாலான சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு முதலீட்டுத் தேவை 2-லிருந்து 3 கோடி ரூபாய் வரைதான் இருக்கும். இதில் வங்கிகள் 2 கோடி ரூபாய் வரை நீண்ட கால கடனாகவும், 1 கோடி ரூபாய்க்கு கேஷ் கிரெடிட்டாகவும் தரவேண்டும். இது ஓரளவிற்கு தொழில் நிறுவனங்களின் நிதி பற்றாக்குறையைக் குறைக்க உதவும்.

எஸ்.எம்.இ. எதிர்பார்ப்பு: தொழில் வளர்ச்சிக்கு வழி செய்யுங்கள் !

மேலும், இக்கடனுக்கான வட்டி விகிதம் 11 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதம் வரை தற்போது உள்ளது. இந்த வட்டி விகிதத்தில் 2 சதவிகிதம் மானியம் தரவேண்டும். வாட் (க்ஷிகிஜி) வசூலிக்கும் தொகையிலிருந்து வட்டி இல்லாத கடனை நிறுவனங்களுக்குத் தந்தால்தான் அவர்களின் பணப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும். மேலும், மாநில அரசும், மத்திய அரசும் சேர்த்து அதிகப்படியான வரியை வசூல் செய்கின்றன. இதை ஓரளவுக்காவது  குறைக்கவேண்டும்'' என்றவர், பிரச்னைக்கான தீர்வுகளையும் சொன்னார்.

''வரி விதிப்பு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே தொழில்துறையின் பிரச்னைகள் தீர்ந்து உற்பத்தி பெருகிவிடாது. உள்கட்டமைப்பு வசதிகளையும், தகுதியான தொழிலாளர்களையும் உருவாக்குவது அரசின் கடமை. உள்கட்டமைப்பு வசதிகள்கொண்ட தொழில் பூங்காக்களையும், அதில் தொழிற் கல்வி சார்ந்த பயிற்சி மையங்களையும் உருவாக்கி திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கலாம்'' என்றார்.

அரசே பொருட்களை வாங்கவேண்டும்!

அடுத்து, எஃப்.ஐ.சி.சி.ஐ. அமைப்பின் ஆலோசகர் பி.முராரியிடம் பேசினோம். ''ஒரு வருடத்தில் 196 நாட்கள் எஸ்.எம்.இ. தொழிற்சாலைகளில் இன்ஸ்பெக்ஷன்தான் நடக்கிறது. அப்போது அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை தயார் செய்வதே பெரும் வேலையாக உள்ளது. மானியம் மற்றும் கடன் ஆகியவற்றை எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு எந்தவிதமான பாக்கியும் இல்லாமல் கொடுத்துவிடவேண்டும் என்பது சட்டம். ஆனால், அரசு அதிகாரிகள் இதைச் செய்வதில்லை. அதேபோல இந்நிறுவனங்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யவேண்டும். வங்கிகள் தனிப்பட்ட முறையில் வட்டி விகிதங்களை குறைக்க அவற்றுக்கு அரசு அதிகாரம் அளிக்கவேண்டும்'' என்றார்.

எஸ்.எம்.இ. எதிர்பார்ப்பு: தொழில் வளர்ச்சிக்கு வழி செய்யுங்கள் !

அரசு மானியம் வேண்டும் !

கோவை மாவட்ட தொழில் துறை அமைப்பான கொடீசியாவின் முன்னாள் தலைவர் கே.இளங்கோவிடம் பேசினோம்.  ''விதிமுறைகள் என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.  கஸ்டம்ஸ் பிரச்னையால் பொருட்களை எடுக்கவே பத்து நாட்களுக்கு மேல் ஆவதால்,  குறித்த நேரத்திற்கு டெலிவரி தரமுடியவில்லை. அந்த பத்து நாட்களுக்குத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமலேயே சம்பளம் தரவேண்டிய கட்டாயம்.

இதை சரிக்கட்ட விலையை உயர்த்தவேண்டியுள்ளது. தனியார் நிறுவனங்களின் முதலீட்டை அரசு மானியம் தந்து ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் முதலீடு அதிகம் வரும். வட்டி விகிதம் என்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வட்டி விகிதங்களையும், வரி விதிப்பையும் குறைத்தால்தான் தொழில் துறையில் வளர்ச்சி என்பது இருக்கும்'' என்றார்.      

பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் சிறு மற்றும் குறுந் தொழில் துறையின் பிரகாசமான எதிர்காலத்திற்கு பட்ஜெட் கைகொடுக்க வேண்டும். இதை சிதம்பரம் நிறைவேற்றுவாரா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism