Published:Updated:

ஷேர்லக் - விப்ரோவை வெளியேற்றிய நிஃப்டி !

ஷேர்லக் - விப்ரோவை வெளியேற்றிய நிஃப்டி !

ஷேர்லக் - விப்ரோவை வெளியேற்றிய நிஃப்டி !

ஷேர்லக் - விப்ரோவை வெளியேற்றிய நிஃப்டி !

Published:Updated:
##~##

''ஐ.ஓ.சி. நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.50 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 45 காசுகளும் உயர்த்தி இருக்கிறது'' - உள்ளே வரும்போதே செய்திகளுடன் வந்தார் ஷேர்லக். அவரை உட்காரவைத்து செய்திகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

''கிட்டத்தட்ட கிங்ஃபிஷர் கடன் பிரச்னையின் முடிவு தெரிந்து விட்டது. வங்கிகள் தந்த பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் 25% திரும்ப வந்தாலே அதிகம் என்கிறார்கள். ஐரோப்பிய கம்பெனியான டியாஜியோவுக்கு  யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகளை விற்றதன் மூலம் கிடைக்கும் சுமார் 2.4 பில்லியன் டாலர் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்குக் கிடைக்கப் போகிறது. இந்தப் பணத்தை அப்படியே எடுத்துக் கொண்டு விடலாம் என்று கனவுக் கோட்டை கட்டியிருந்தன கடன் தந்த வங்கிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இப்படி வரும் பணத்தில் யுனைடெட் புரூவரீஸ் நிறுவனத்துக்கு இருக்கும் கடனைக் கட்ட, கிங்ஃபிஷரைக் காப்பாற்ற அடகு வைத்திருந்த யூ.பி. நிறுவனத்தின் பங்குகளை மீட்க, ஏர்போர்ட் அத்தாரிட்டிக்கு பாக்கி வைத்திருந்தக் கட்டணம், எரிபொருள் நிறுவனங்களுக்கு வைத்திருந்த பாக்கி, ஊழியர் சம்பளம் என எல்லாம்போக, கடைசியில் வங்கிக்கு மிஞ்சப்போவது சொற்பத் தொகை தான் என்பதை அறிந்து வங்கிகள் நொந்து போயிருக்கின்றன.

ஷேர்லக் - விப்ரோவை வெளியேற்றிய நிஃப்டி !

கிங்ஃபிஷர் விஷயத்தில் பொதுத் துறை வங்கிகள் ஏமாந்துபோய் நிற்க, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மட்டும் விவரமாகத் தப்பித்துக்கொண்டது ஆச்சரியமான விஷயம்தான். கிங்ஃபிஷர் நிறுவனத்தில் ஏதோ பிரச்னை என்பது தெரிந்த மாத்திரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் உடனே உஷாராகி, அந்த நிறுவனத்துக்குத் தந்திருந்த கடனை அப்படியே வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்றுவிட்டது! பொதுத் துறை வங்கிகள் இன்னும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையே இது காட்டுகிறது!'' என்று சொல்லிவிட்டு, அடுத்த சப்ஜெக்ட்க்குத் தாவினார்.

''கடந்த வாரம் முக்கியமான பல நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு ரிசல்ட்கள் வந்தன. அதில் முக்கியமானதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

முதலில், டாடா மோட்டார்ஸ். நிகர லாபம் மட்டும் 52 சதவிகிதத்துக்கு மேல் குறைந் திருக்கிறது. வாகனங்களின் தேவை குறைந்தது, உற்பத்திச் செலவு அதிகரித்தது போன்ற காரணங்களால்தான் இந்த இழப்பு வந்திருக்கிறது. பொருளாதாரம் படிப்படியாக மோசமான நிலையை நோக்கிப் போகிறது என்பதையே இது காட்டுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் வெறும் 4% மட்டுமே அதிகரித்திருக்கிறது. எஸ்.பி.ஐ.யின் வாராக்கடன்தான் லாபம் குறைவதற்கு முக்கிய காரணம். நிகர வாராக்கடன் கடந்த காலாண்டில் 2.59  சதவிகிதமாக இருந்தது. இது அதற்கு முந்தைய காலாண்டில் 2.22 சத விகிதமாகத்தான் இருந்தது. அதேபோல நெட் இன்ட்ரஸ்ட் மார்ஜினும் 4.07 சதவிகிதத்திலிருந்து 3.31 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இதெல்லாம் நல்லதற்கில்லை என்பதே நிபுணர்களின் கருத்து.

ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப். 26 கோடி ரூபாய் நிகர லாபம் கண்டிருக்கிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் காற்றாலை பிஸினஸை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்றது. கடந்த டிசம்பர் மாதத்தில் அமான் ரிசார்ட்ஸ் என்கிற நிறுவனத்தையும் விற்றது. ரியல் எஸ்டேட் தவிர, வேறு தொழில்களைச் செய்யவேண்டாம் என்று இந்நிறுவனம் நினைத்ததே இதற்கு காரணம்.

ஷேர்லக் - விப்ரோவை வெளியேற்றிய நிஃப்டி !

ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம் கடந்த காலாண்டில் 68 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கிறது. எக்கச்சக்கமான பணம் வட்டியாகக் கட்டியதே இந்த நஷ்டத்துக்கு முக்கிய காரணம் என்கிறார் கள்'' என சுடச்சுட காலாண்டு ரிசல்ட்களைத் தந்தவருக்கு நாமும் சுடச்சுட டீ தந்தோம்.

''நிஃப்டி இண்டெக்ஸில் அதிரடி மாற்றம் வரப் போகிறது. 50 பங்குகளைக்கொண்ட நிஃப்டி இண்டெக்ஸிலிருந்து விப்ரோ, சீமென்ஸ் பங்குகள் வெளியேறி, அவற்றுக்குப் பதிலாக இண்டஸ்இந்த் வங்கி, என்.எம்.டி.சி. பங்குகள் புதிதாகச் சேர்க்கப்படுகிறது. இது வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இண்டஸ்இந்த் பங்குக்கு 1% வெயிட்டேஜ் தரப்படுகிறது. இதையும் சேர்த்தால், நிஃப்டி இண்டெக்ஸில் மொத்தம் 10 வங்கிப் பங்குகள் இடம் பெறுகின்றன. இவற்றின் மொத்த வெயிட்டேஜ் 30%.

இந்தியாவின் மூன்றாவது பெரிய சாஃப்ட்வேர் சேவை நிறுவனப் பங்கான விப்ரோ, நிஃப்டிலிருந்து நீக்கப்பட இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்ஃபோடெக் மற்றும் கன்ஸ்யூமர் வணிகம் பிரிக்கப்பட்டதை அடுத்து விப்ரோவின் மொத்தப் பங்குகளின் மதிப்பு குறைந்துபோனது. இதனால்தான் விப்ரோ இண்டெக்ஸில் இருந்து நீக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் நிஃப்டி இ.டி.எஃப்-ல் இருந்தும் விப்ரோ வெளியேறும் நிலை ஏற்படும்'' என்று சேதி சொன்னவர், சமீபத்தில் செபியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட ஒரு புரோக்கர் நிறுவனம் பற்றி சொன்னார்.  

ஷேர்லக் - விப்ரோவை வெளியேற்றிய நிஃப்டி !

''கடந்த 2004 ஜூலை மற்றும் 2005 ஜனவரி இடையே அதானி எக்ஸ்போர்ட் (தற்போதைய பெயர் அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனப் பங்கின் விலை கண்டபடி உயர்ந்தது. இது குறித்து செபி விசாரணை நடத்தியதில் எஸ்.பி.ஜே. ஸ்டாக் புரோக்கர்ஸ் நிறுவனம், பங்கு தரகருக்கான விதிமுறைகளை மீறி மோசடியாக வர்த்தகம் செய்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது செபி. எவ்வளவு தண்டம் விதித்தாலும் சில புரோக்கிங் கம்பெனிகள் திருந்தமாட்டேன் என்கிறதே!'' என்றார்.

''சுஸ்லான் நிறுவனத்துக்கு என்னாச்சு?'' என்றோம்.

''சுஸ்லான் எனர்ஜி நிறுவனம், வரவர எனர்ஜி இல்லாத நிறுவனமாக மாறி வருகிறது. முடிந்த டிசம்பர் காலாண்டில் அதன் நிகர இழப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 1,154 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடன் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அதனால் மேலே வரமுடியாமல் இருக்கிறது. காரணம், அதிக கடன், அதற்கான வட்டிச் சுமை, கூடவே விற்பனையில் வீழ்ச்சி எல்லாம் சேர்த்து சுஸ்லான் எனர்ஜியின் சக்தியை இழக்க வைத்திருக்கின்றன. இந்த நிறுவனம் இனி எழுந்து வருமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது'' என்றார்.

''பணவீக்கம் மீண்டும் குறையத் தொடங்கிவிட்டதே?'' என்று கேட்டோம்.

''சந்தோஷமான விஷயம்தான். கடந்த மாதம் 7.18 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் தற்போது 6.62 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு என்பது இன்னும் மகிழ்ச்சியான விஷயம். இதே ரீதியில் பணவீக்கம் குறைந்தால், ஆர்.பி.ஐ. கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க நிச்சயம் வாய்ப்புண்டு என்கிறார்கள்!'' என்றவர், புறப்படத் தயாரானார்.

''என்ன இது, முக்கியமான விஷயத்தை தராமலேயே கிளம்பிவிட்டீர்களே?'' என வழியை மறித்தோம்.

''ஷேர்டிப்ஸ்தானே கேட்கிறீர்கள்? இந்த வாரம் எந்த ஷேர்டிப்ஸும் நான் தரப்போவதில்லை. பட்ஜெட்க்குப் பின்  சந்தையின் போக்கைப் பார்த்துவிட்டுத்  தருகிறேனே!'' என்றார். ஓகே என்றோம் நாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism