Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் & ஆயில்)

பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி - (மெட்டல் & ஆயில்)

பானுமதி அருணாசலம்.

Published:Updated:
##~##

இந்த வாரம் தங்கம் மற்றும் அடிப்படை உலோகங்கள் குறித்து குட்வில் கமாடிட்டீஸ் நிறுவனத்தின் கமாடிட்டி ரிசர்ச் அனலிஸ்ட் உதயகுமார் கூறுகிறார்.

 தங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதுநாள் வரையில் ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை தற்போது இறக்கத்தில் உள்ளது. கடந்த 534 நாட்களின் வர்த்தகத்தை எடுத்து பார்த்தால், புதிய விலை அதிகரிப்பு எதுவும் நிகழவில்லை. மொத்தத்தில் 4.41 சதவிகிதம் வரை தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 2012 டிசம்பர் மாதத்தில் பெரிய நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் கைவசம் இருந்த தங்கம் இருப்பை விற்றுவிட்டன. அதன்பிறகு பெரிய அளவிலான முதலீடு தங்கத்தில் இல்லை. நீண்டநாட்களாக 1,550 - 1,800 டாலர் என்ற ரீதியிலேயே வர்த்தகமாகி வருகிறது.

மேலும், உலகளவில் ஆபரணத் தங்கத்துக்கான டிமாண்ட் குறைந்துள்ளது. உலகளவில் 4,582 டன்னாக இருந்த தங்கத்தின் டிமாண்ட் 4,405 டன்னாக சென்ற ஆண்டில் குறைந்துள்ளது. எனினும், இந்தியாவில் தங்கத்தின் மீதான டிமாண்ட் 41 சதவிகிதம் சென்றாண்டில் அதிகரித்துள்ளது. மேலும், சீனாவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் புது வருடப் பிறப்பின்போது டிமாண்ட் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வருடப் பிறப்பில் டிமாண்ட் குறைவாகவே உள்ளது.

கமாடிட்டி - (மெட்டல் & ஆயில்)

அடுத்து அமெரிக்காவின் வேலையில்லாதோர் பெறும் உதவித் தொகை குறைந்துள்ளது டாலருக்கு சாதகமாகவும், தங்கத்திற்கு பாதகமாகவும் அமைந்துவிட்டது. ஐரோப்பிய ஜி.டி.பி. குறித்த புள்ளிவிவரமும் தங்கத்தின் விலை இறக்கத்திற்கு காரணமாக அமைந்தது. தற்போது எம்.சி.எக்ஸ். தங்கம் 30,150 ரூபாய் என்ற ரீதியில் வர்த்தகமாகி வருகிறது. டெக்னிக்கலாகவும் தங்கம் விலை 29,600 ரூபாய் வரை இறங்குவதற்கான வாய்ப்பையே காட்டுகிறது. மொத்தத்தில் தங்கத்தின் விலை கீழே இறங்கவே அதிகமாக வாய்ப்புள்ளது.

அடிப்படை உலோகம்!

கமாடிட்டி - (மெட்டல் & ஆயில்)

கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் அது அடிப்படை உலோகத்தின் விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் புது வருடப் பிறப்பு விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்குத் திரும்பும்போது அடிப்படை உலோகத்திற்கான தேவை அதிகரிக்கும். காப்பர் தற்போது 447-439 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இதிலிருந்து 453 வரை மேலே போகும். இந்த நிலையை அடைந்தால் இதிலிருந்து 460 ரூபாய் வரை மேலே போகும். அதேசமயம், ஐரோப்பாவில் ஜி.டி.பி. 0.6 சதவிகிதம் குறைந்தது காப்பருக்கான தேவையைக் குறைக்கும். அலுமினியம் தற்போது 110-115 ரூபாய் என்ற நிலையில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. எல்.எம்.இ. இன்வென்டரியில் 8,000 டன் வரை அலுமினியம் குறைந்துள்ளது.  தற்போதைய விலையில் 115 ரூபாயை தாண்டினால் விலை இன்னும் மேலே போகும். ஜிங்கைப் பொறுத்தவரை 2,500 டன் இன்வென்டரி குறைந்துள்ளது. அமெரிக்காவில் வேலையில்லாதோர் குறித்த புள்ளிவிவரம் குறைந்துள்ளதும் அடிப்படை உலோகத்திற்கு சாதகமாக உள்ளது. மொத்தத்தில் அடிப்படை உலோகத்தின் விலை வரும் வாரத்தில் அதிகரித்தே வர்த்தகமாகும்'' என்றார்.

கச்சா எண்ணெய்!

கமாடிட்டி - (மெட்டல் & ஆயில்)

ஈரானில் அணு ஆயுதம் குறித்த பதற்ற நிலை காரணமாக, சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வர்த்தகமானது.  மேலும், எண்ணெய் சுத்திகரிப்பை அதிகமாகச் செய்யும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையும் சப்ளையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் வேலையில்லாதவர்கள் குறித்த புள்ளிவிவரம் கச்சா எண்ணெய்க்கு சாதகமாக வந்துள்ளது. ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி 2012 டிசம்பர் காலாண்டில் குறைந்தது விலை ஏற்றத்தை சிறிது தடுத்தது. எனினும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பிரச்னையால் வரும் வாரத்திலும் விலை அதிகரித்து கச்சா எண்ணெய் வர்த்தகமாகும். எம்.சி.எக்ஸ். சந்தையில் குறுகியகாலத்திற்கான சப்போர்ட் 5,185 ரூபாயாகவும் ரெசிஸ்டன்ஸ் 5,350 ரூபாயாகவும்கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

வெள்ளி!

கமாடிட்டி - (மெட்டல் & ஆயில்)

ஐரோப்பாவைச் சார்ந்த 17 உறுப்பு நாடுகளின் நான்காவது காலாண்டு ஜி.டி.பி. 0.6 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இது 2009-ம் வருடத்துக்குப் பிறகு மிக குறைவான தாகும்.  தொழிற்சாலை தேவைகள் குறையும் என்பதால் வெள்ளிக்கான தேவையும் குறையும். வரும் வாரத்தில் வெள்ளியின் விலை குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன.  எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ வெள்ளி 56,035- ரூபாய் ஆக வர்த்தக மாகிறது. இதிலிருந்து குறைந்தால் 55,500 வரை செல்ல வாய்ப்புண்டு.

இயற்கை எரிவாயு!

கமாடிட்டி - (மெட்டல் & ஆயில்)

சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயு விலை குறைந்தே வர்த்தகமானது. எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, இயற்கை எரிவாயு இன்வென்டரி 157 பில்லியன் கியூபிக் ஃபீட் குறைந்துள்ளது. இது எதிர்பார்த்ததைவிட குறைவு. மேலும், குளிர்காலம் முடிவடைய இருப்பதால் இயற்கை எரிவாயுக்கான டிமாண்ட் வரும் வாரங்களில் குறையும். இதனால் வரும் வாரத்திலும் விலை குறைந்து வர்த்தகமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism