Published:Updated:

பெரும் பணக்காரர்களுக்கு வரி: சரியா, தவறா?

வா.கார்த்திகேயன்.

பெரும் பணக்காரர்களுக்கு வரி: சரியா, தவறா?

வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்கு இப்போதையச் சூழ்நிலையில் சரியான உதாரணம் சொல்ல வேண்டுமானால், அதிகச் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக வரி விதிக்கவேண்டும் என்பதுதான். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் குறிப்பிட்ட தொகைக்கு மேலே சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக வரியை விதித்தது ஒபாமா அரசு. அப்போதிருந்தே இந்தியாவிலும் இதேபோன்று அதிகம் சம்பாதிக்கிறவர்கள் மீது அதிக வரி விதிக்கவேண்டும் என்று பேச்சு எழுந்துவருகிறது. இதைக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜனும் அவ்வப்போது சில 'ஸ்டேட்மென்ட்களை’விட, அதற்கு விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜியும் ஆதரவு தர, கூடிய விரைவில் தாக்கல் ஆகப் போகும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வந்துவிடுமோ என்கிற அளவுக்கு நிலைமை சீரியஸாகிவிட்டது.

இப்படி ஒரு விஷயத்தைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம்தான் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த சில ஆண்டுகளாக ஜி.டி.பி.-யில் வரியின் பங்கு பெரிய அளவில் உயரவில்லை. செலவுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் வரியை உயர்த்தியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மத்திய அரசு. இதில் ஒரு நகைமுரண் என்னவென்றால், இந்தியாவில் வரி வரம்பு அதிகமாக இருந்ததை 1997-ம் ஆண்டு பட்ஜெட்டில் குறைத்ததே இப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான். 1970-களில் இந்தியாவில் அதிகபட்சம் 90 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இந்த உச்சவரம்பை 30 சதவிகிதமாகக் குறைத்தது சிதம்பரம்தான். ஆனால், இன்றைக்கு இந்த வரி வரம்பை மீண்டும் உயர்த்தவேண்டும் என்கிற யோசனையில் இருப்ப வரும் அவரே.

பெரும் பணக்காரர்களுக்கு வரி: சரியா, தவறா?

இதற்கிடையில், 20 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிகபட்சம் 5 சதவிகிதம் (35 சதவிகிதம்) விதிக்கப்பட்டால் மொத்தமாக சுமார் 4,500 கோடி ரூபாய்தான் வசூலாகும் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. மேலும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் ஆதித்யா பூரி, ''அதிகச் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக வரி விதிப்பது எதிர்மறை விளைவு களைத்தான் ஏற்படுத்தும்'' என்று சொல்லி இருக்கிறார். இன்னும் சிலர், இதனால் வரி ஏய்ப்பு நடக்க வாய்ப்பு இருக்கிறது. தொழில் முனைவோர்களை பாதிக்கும் என்கிற ரீதியில் கருத்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் சி.ஐ.ஐ. (தமிழ்நாடு) தலைவருமான மாணிக்கம் ராமசாமியுடன் இதுபற்றி பேசினோம்.

பெரும் பணக்காரர்களுக்கு வரி: சரியா, தவறா?

''இப்போதைய நிலையில் அரசாங்கத்துக்குப் பணம் தேவைப்படுகிறது, ஏற்கெனவே விலைவாசி உயர்ந்து அடிப்படை தேவைகளுக்குச் சிரமப்படும் நடுத்தர மக்களிடம் செல்லாமல், அதிக வருமானம் ஈட்டும்; அதிக செலவு செய்யும் பிரிவினரிடையே வாங்குவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழி இல்லை. மேலும், இப்படி வாங்குவது ஒன்றும் தவறு இல்லையே! ஒருவேளை அதிக வரி விதிப்பதினால் வரி ஏய்ப்பவர்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றால், வரி ஏய்ப்பவர்களை தடுப்பது, அவர்களைத் தண்டிப்பது சரியான நடைமுறையாக இருக்குமே தவிர, இந்தப் புதிய வரி விதிப்பே தேவை இல்லை என்று சொல்ல முடியாது.

அரசாங்கம் தனது செலவுகளை குறைப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம். ஆனால், இப்போது செய்துவரும் வளர்ச்சித் திட்டங் களையும் நிறுத்த முடியாது, அதேசமயம், ஏழைகளுக்குத் தந்து வரும் சலுகைகளையும் நிறுத்த முடியாது. சில வருடங்களுக்கு முன்பு இருந்தச் சூழ்நிலையில் அதிகபட்ச வரியைக் குறைத்தார்கள்; இப்போதையச் சூழ்நிலைக்கு வரியை உயர்த்துகிறார்களா என்று தான் பார்க்கவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இதை தாராளமாகக் கொண்டுவரலாம்'' என்று முடித்துக்கொண்டார்.

ஆனால், வயிற்று வலிக்கு தலைவலி தைலத்தைத் தடவுவது மாதிரி இருக்கிறது மத்திய அரசின் இந்தச் செயல் என்று பட்டாசாக வெடித்தார் சென்னையின் பிரபல ஆடிட்டரும் பொருளாதாரச் சிந்தனையாளருமான எம்.ஆர்.வெங்கடேஷ்.

''எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தற்போதைய மத்திய அரசாங்கம் இருக்கிறது. ஏதாவது செய்யவேண்டும் என்று யோசிக்கிறார்களே தவிர, என்ன செய்யவேண்டும் என்று டெல்லியில் இருக்கும் நமது பொருளாதார வல்லுநர்களுக்குத்

பெரும் பணக்காரர்களுக்கு வரி: சரியா, தவறா?

தெரியவில்லை. 1991-ம் ஆண்டு எதையெல்லாம் பொருளாதாரச் சீர்திருத்தம் என்று சொன்னார்களோ, இப்போது அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். சோஷலிச சித்தாந்தத்திலிருந்து சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறினார்கள். இப்போது மீண்டும் சோஷலிச சித்தாந்தத்துக்கே திரும்பு கிறார்கள். பத்து வருட காங்கிரஸ் அரசின் விளைவுகளில் இதுவும் ஒன்று. அரசுக்குப் பொருளாதார ஆலோசனை சொல்பவர்களுக்கு சிந்தனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

வர்த்தகப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இப்படியேவிட்டால் ரூபாய் மதிப்பு இன்னும் சரியும்; ரூபாய் சரியும்பட்சத்தில் பண வீக்கம் இன்னும் அதிகரிக்கும்; அதேசமயம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கும். பணவீக்கத்தைச் சரிக்கட்ட மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்கவேண்டும்; அப்போது பொருளாதாரத்தில் இன்னும் ஒரு சுணக்கம் ஏற்படும் என பல பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது மத்திய அரசாங்கம்.

பெரும் பணக்காரர்களுக்கு வரி: சரியா, தவறா?

இதன்காரணமாக, இப்போதைக்கு எப்படியாவது பணத்தைத் திரட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மத்திய அரசு. சேவை வரி போல அரசுக்கு வருமானம் தருவதற்காகவே ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. ஆனால், பணக்காரர்கள் மீது வரி விதிப்பதைவிட்டால் மத்திய அரசுக்கு வேறு வழி இல்லை என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் பணக்காரராக இருப்பதே குற்றம் என்பதுபோல இந்த அரசு பார்க்கிறது. மேலும், சுங்க வரி மற்றும் கலால் வரியையும் உயர்த்தப் போவதுபோல தெரிகிறது.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இந்தியப் பொருளாதாரத்தில் நம்பிக்கை இல்லை. உற்பத்தியை அதிகரித்து விலைவாசியைக் குறைக்க வழி தெரியவில்லை. 20, 30 வருடங்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் காடா துணிகளை விற்றுவந்தார்கள். இப்போது அப்படி நடக்கிறதா?, துணி உற்பத்தி அதிகரித்துவிட்ட நிலையில் அதற்கு தேவை இல்லை. அதுபோல உணவு உற்பத்தியை அதிகரிக்கும்பட்சத்தில் ரேஷன் கடைகளுக்கு வேலை இல்லை; அரசு அதற்கு மானியம் தர வேண்டியதில்லை. இதுபோல பல செலவுகளை அரசு குறைக்க முடியும். உதாரணத்துக்கு, அரசின் எந்தத் திட்டங்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவதில்லை. அனைத்தும் காலதாமதம் ஆகி செலவுகள் அதிகரிக்கின்றன.

வரியை அதிகரிக்கவேண்டும் என்றால்கூட, வேறு வழியை யோசிக்கலாம். அதிகம் சம்பாதிப் பவர்களுக்கு வரி என்று இல்லாமல் unearned income என்ற புதிய பிரிவை உண்டாக்கி அதற்கு தனியாக அதிக வரியை விதிக்கலாம். உதாரணத்துக்கு, இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கு இந்த வரியை விதிக்கலாம். இதனால் இரண்டாவது வீடு வாங்குவதும் குறையும். வீடுகளின் விலையும் குறையும். இரண்டாம் வீடு என்பதுபோல ஒரு புதிய பட்டியலை உருவாக்கி அதிலிருந்து வருமானத்தை அதிகரிக்கலாம்'' என்றார்.

நன்கு யோசித்து செயல்பட வேண்டிய திட்டம் இது என்பதில் சந்தேகமில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism