Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

பானுமதி அருணாசலம், படம்: பா.கார்த்திக்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

பானுமதி அருணாசலம், படம்: பா.கார்த்திக்.

Published:Updated:
##~##

இந்த வாரம் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்து விளக்கமாகக் கூறுகிறார் ஐ.எஃப்.ஐ.என். கமாடிட்டி நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் ரெங்கராஜன்.

கச்சா எண்ணெய் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடந்த மூன்று மாதங்களாக கச்சா எண்ணெய்யின் விலை சரிந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் ஒரு கமாடிட்டி ஃபண்ட் கச்சா எண்ணெய் பொசிஷன்களை விற்க நேரிட்டதும், அமெரிக்காவின் நிதிக் கொள்கையில் ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகளிடம் நிலவும் கருத்து வேறுபாடும்தான். அமெரிக்காவின் பொருளாதாரம் சீரடைந்து வருவதால் அதன் பாண்ட் திட்டத்தை நிறுத்தலாமா என அரசு யோசித்து வருவதால் டாலரின் மதிப்பு அதிகரித்தது. சீனாவிலிருந்து அதிகரித்து வரும் டிமாண்டை கருத்தில்கொண்டு அடுத்த காலாண்டில் சவுதி அரேபியா தனது ஏற்றுமதியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும், ஈரானில் அணு ஆயுத சோதனை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னை, அங்கிருந்து வரும் சப்ளையைப் பாதித்துள்ளது. அணு ஆயுத சோதனை குறித்து அடுத்தவாரத்தில் சுமூகமான பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கிறது. ஐரோப்பாவில் தயாரிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் இரண்டுமாத குறைவாக இருப்பது, அங்கு பொருளாதாரம் பிரச்னைக்கு உள்ளாகி இருப்பதைக் காட்டுகிறது. பிப்ரவரி 15-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் கச்சா எண்ணெய் சப்ளை 4.1 மில்லியன் பேரல் உயர்ந்தது. ஆனால், எதிர்பார்த்ததோ 2 மில்லியன் பேரல் உயர்வுதான். கேசோலின் சப்ளை 2.9 மில்லியன் பேரல் குறைந்துள்ளது என எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.

கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)

மேலும், அமெரிக்காவில் வேலை யில்லாதோர் பெறும் உதவித்தொகை எதிர்பார்த்ததைவிட அதிகரித் துள்ளது. உலகளாவிய பல  காரணங்களால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வர்த்தகமாகும். சர்வதேச சந்தையில் யூ.எஸ். கச்சா எண்ணெய் மேஜர் சப்போர்ட்டான 94.80 டாலருக்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. இது 90/88.80 டாலர் வரை இறங்கலாம். 96 டாலரைத் தாண்டினால்தான் புல்லீஷாக உள்ளது என்று சொல்லலாம். எம்.சி.எக்ஸ். கச்சா எண்ணெய் மார்ச் கான்ட்ராக்ட் சப்போர்ட் 5,040, 4,970, 4,940 ரூபாய். மேஜர் ரெசிஸ்டன்ஸ் 5105/5160/5220 ரூபாய் அளவில் உள்ளது.  5,105-5110 என்ற நிலையில் விற்கலாம். ஸ்டாப்லாஸ் 5165, டார்கெட் 4970ரூபாய்.

இயற்கை எரிவாயு !

கடந்த ஐந்து வாரங்களாக தத்தளித்து வந்த இயற்கை எரிவாயு விலை இந்த வாரம்தான் சற்று ஏற்றம்கண்டது. மேற்கு கடற்பகுதியில் நிலவும் குளிர், அங்கிருந்து ஆறிலிருந்து பத்து நாட்களில் நகர்ந்து மத்திய மேற்கு பகுதியை வந்தடையும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். மத்திய மேற்கு பகுதி என்பது அதிக குளிர்நிலவும் பகுதி. இங்கு வெப்பத்திற்காக அதிகளவில் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானில் புகுஷிமா நகரத்தில் அணுமூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பாதிப்படைந்துள்ளதால், அங்கு இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 8.23 மில்லியன் டன் ஜனவரி மாதத்தில் மட்டும் வரலாறு காணாத அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)

மேலும், பராமரிப்பு பணிகள் காரணமாக அணு நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் இயற்கை எரிவாயுக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி 119 பில்லியன் கியூபிக் ஃபீட்டாக குறையும் என எதிர்பார்த்தது 127 பில்லியன் கியூபிக் ஃபீட்டாக குறைந்துள்ளது என எனர்ஜி இன்ஃபர்மேஷன் தெரிவித்துள்ளது. இயற்கை எரிவாயு ஸ்டோரேஜ் லெவலும் ஐந்து வருட குறைவாக 140 பில்லியன் கியூபிக் ஃபீட்டாக குறைந்துள்ளது. வரும் வாரத்தில் ஜப்பானில் அணு உலை பிரச்னை காரணமாக இயற்கை எரிவாயு பயன்படுத்தி மின்சாரம் எடுப்பது, மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் குளிர் அதிகம் நிலவுவது உள்ளிட்ட காரணங்களால் விலை அதிகரிக்கும். எனினும், இந்த விலையேற்றம் குறுகியநாட்களுக்குத்தான் நீடிக்கும். குளிர் குறைந்து டிமாண்ட் குறைந்து விட்டால், இருப்பு அதிகரித்து விலை இறங்க வாய்ப்புள்ளது. எம்.சி.எக்ஸ். மார்ச் கான்ட்ராக்ட் குறுகியகாலத்தில் 186 ரூபாயை எட்டினால் 190, 195 ரூபாய் முக்கிய ரெசிஸ்டன்ஸ். மேஜர் சப்போர்ட்டான 173 ரூபாயை உடைத்தால், விலை இறங்கி 168, 163 ரூபாய்க்குப் போகும். மார்ச் கான்ட்ராக்ட் இலக்கு விலை 185.80, 189 ரூபாயை அடைய 176, 177 ரூபாயில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 173 ரூபாயாகக்கொள்ளவும்.''

தங்கம் !

கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)

கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை இறங்கி வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு இப்போது குறைந்து 1554.30 டாலருக்குச் சென்றது. அமெரிக்க அரசு பாண்ட் வாங்கும் திட்டத்தை நிறுத்தும் யோசனையில் இருப்பதால், டாலர் பலம் பெற்றது. இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் பிராஃபிட் புக்கிங் செய்ததே இந்த விலை குறைவிற்கு காரணம். சென்ற வியாழக்கிழமையில் பத்து கிராம் 29,335 ரூபாய் வரை போனது. ஐரோப்பா பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவின் பி.எம்.ஐ. மற்றும் வேலையில்லாதவர்களுக்குக் கொடுக்கப்படும் உதவித்தொகையின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்கள் தங்கத்தின்

கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)

விலையில் பிரதிபலித்தது. வேலை யில்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஃபெடரல் வங்கி நாட்டின் பொருளாதாரத்தை சமாளிக்க இன்னும் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதும் கொண்டுவராதது உள்ளிட்ட காரணங்கள் தங்கத்தின் விலை சற்று அதிகரிக்க காரணமானது.  இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்பட்சத்தில், இந்திய விலையில் தங்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடிப்படை உலோகம் !

சீனாவின் பொருளாதாரப் பிரச்னைகள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார நிலவரங்கள் காரணமாக காப்பரின் விலை கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு இறங்கியது. மற்ற வகை அடிப்படை உலோகங்களும் குறைந்தே சென்றவாரத்தில் வர்த்தகமானது. குறிப்பாக நிக்கல் மூன்று மாத குறைவில் வர்த்தகமானது.

கடந்த சில நாட்களாக சீனா மற்றும் அமெரிக்காவில் பொருளாதாரம் சரியாகி வருவதாக தகவல்கள் வெளியானதால், விலை அதிகரித்து வந்த அடிப்படை உலோகம்  சீனாவில் அதிகப்படியான டிமாண்ட் குறைந்ததால் விலை தற்போது குறைந்துள்ளது. மேலும், மற்ற நாட்டு கரன்சியைவிட டாலரின் மதிப்பு அதிகரித்ததும் விலை குறைவிற்கு காரணம். உலக பொருளாதார சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால் வரும் வாரத்திலும் அடிப்படை உலோகத்தின் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)
கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism