Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

Published:Updated:

வர்த்தகம்

 கோதுமை! (WHEAT)

இந்தாண்டு ராபி சீஸனில்  சுமார் 44 மில்லியன் டன் கோதுமையைச் சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது கடந்த வருடத்தைவிட 15 சதவிகிதம் அதிகம். கோதுமை சேகரிப்பை வரும் ஏப்ரல் மாதம் முழுவதும் தொடங்க மாநில உணவு செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த வருடம் சுமார் 92.3 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, சென்ற ஆண்டில் 94.88 மில்லியன் டன்னாக வரலாறு காணாத உற்பத்தி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு 1,350 ரூபாய் விதித்துள்ளது. இது சென்ற வருடத்தில் 1,285 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் ராபி சீஸனின் அறுவடை முடிந்து வரும் மார்ச் மாதத்தில் 7,50,000 டன் வரை ஏற்றுமதி செய்ய வர்த்தகர்கள் ஆர்டர்கள் எடுத்துள்ளனர். ஏற்றுமதி செய்யும் கோதுமைக்கு டன் 295 முதல் 300 டாலர் வரை விலை பேசி வருகின்றனர். இந்தாண்டு உள்நாட்டு டிமாண்ட் மட்டும் 76 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் கோதுமை விலை அதிகரித்து வர்த்தகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்ரி கமாடிட்டி !

மிளகு! (PEPPER)

அக்ரி கமாடிட்டி !

மிளகு வர்த்தகமாகும் முக்கிய சந்தைகளில் வரத்து குறைவாக இருப்பதால், மிளகு விலை அதிகரித்து காணப்படும். சாதகமற்ற பருவநிலை மற்றும் தாமதமாகும் அறுவடை உள்ளிட்ட காரணங்கள் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்காவிற்கு இந்த வருடம் சுமார் 62,458 டன் மிளகு இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. இதுவே, சென்ற ஆண்டில் 68,489 டன் இறக்குமதி செய்யப்பட்டது. இது 9 சத விகிதம் குறைவு. அமெரிக்காவிற்கு கறுப்பு மிளகை அதிகமாக ஏற்றுமதி செய்வதில் இந்தோனேஷியா முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து பிரேசில், வியட்நாம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. இந்த நான்கு நாடுகளும் சுமார் 98 சதவிகிதம் அமெரிக்காவின் மிளகு தேவையைப் பூர்த்தி செய்கிறது. நிலவகை (ground pepper) மிளகை பொறுத்தவரை இந்தியா மற்றும் வியட்நாம் முக்கிய சப்ளையராக அமெரிக்காவுக்குத் திகழ்கின்றன. டிமாண்ட் அதிகமாக இருப்பதால் வரும் வாரத்திலும் மிளகு விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

ஜீரகம்! (JEERA)

அக்ரி கமாடிட்டி !

வர்த்தகர்கள் பிராஃபிட் புக்கிங் செய்ததால், சென்ற வாரத்தில் ஜீரகத்தின் விலை குறைந்து வர்த்தகமானது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிமாண்ட் குறைந்ததன் காரணமாக விலையில் ஏற்றம் இல்லை. பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் நல்ல மழை பெய்வதற்கான சூழ்நிலைகள் தென்படுகின்றன. உஞ்ஹா சந்தைக்கு தின வரத்தாக 6,500 பைகள் வரத்து வந்தன. (ஒரு பை என்பது 55 கிலோ). ஸ்பாட் சந்தையின் விலை குறைந்து 100 கிலோ 13,500 ரூபாய்க்கு வர்த்தகமானது. புதிய ஜீரகத்தின் வரவு 4,500 பைகளாகவும், குடோன்களிலிருந்து 2,000 பைகளும் வந்துகொண்டிருக்கிறது. டிமாண்ட் குறைந்துள்ளதால் வரும் வாரத்திலும் விலை குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்புண்டு.

மஞ்சள்! (TURMERIC)

அக்ரி கமாடிட்டி !

ஆந்திர மாநிலத்தில் மழை அதிகமாகப் பெய்து வருவதால் ராபி பயிர்கள் சேதமடைந்துள்ளது. மேலும், மஞ்சள் விளையும் மாநிலங்களில் பருவநிலை மோசமாக இருந்ததாலும் விலை அதிகரித்து வர்த்தகமானது. ஆந்திர மாநிலத்தின் 12 மாவட்டங்களில் திடீர் மழை காரணமாக பயிர் சேதமடைந்துள்ளது. நிஜாமாபாத்தில் சுமார் 9,240 டன் மஞ்சள் சேதமடைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. ஈரோடு சந்தைக்கு தின வரத்தாக 2,500 பைகள் மஞ்சள் வருகின்றது. ஸ்பாட் விலையாக நூறு கிலோ 6,300 ரூபாய்க்கு வர்த்தகமானது. பயிர்கள் பாதிப்படைந்துள்ளதால் சப்ளை குறையும் என்ற எதிர்பார்ப்பில் விலை அதிகரித்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகம்.

ஏலக்காய்! (CARDAMOM)

சென்ற வாரத்தில் அதிகப்படியான டிமாண்ட் இல்லாத காரணத்தால் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. ஏலக்காய் விளையும் பகுதிகளில் அதிகமான குளிர் நிலவுவதால் மொத்த விற்பனை பாதிப்படைந்துள்ளது. மேலும், ஏலக்காயை இறக்குமதி செய்யும் நாடுகள் கவுதமாலாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்கின்றன. எனினும், தற்போது இந்திய ஏலக்காயின் விலை வெளிநாட்டு வர்த்தகர்களை கவரும் வகையில் இருப்பதால் தற்போது வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய் ஒரு கிலோ 17 டாலருக்குக் கேட்கப்படுகிறது.  ஸ்பாட் விலை கிலோ 705 ரூபாய்க்கு சென்ற வாரத்தில் வர்த்தகமானது.

மிளகாய்! (CHILLI)

அக்ரி கமாடிட்டி !

மிளகாய் அதிகமாக விளையும் ஆந்திர மாநிலத்தில் மழை அதிகமாகப் பெய்ததால் சென்ற வாரத்தில் விலை அதிகரித்தது. கிருஷ்ணா, குண்டூர், கம்மம், பிரகாசம் உள்ளிட்ட

12 மாவட்டங்களில் மழை காரணமாக மிளகாய் பயிர்கள் சேதமடைந்துள்ளது. மேலும், மிளகாய் விளையும் மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் மழையினால் பயிர்கள் சேதமடைந் துள்ளது. குண்டூர் குடோனில் 40 டன் மிளகாய் சேதமடைந்துள்ளது. சென்ற வார தொடக்கத்தில் குண்டூர் சந்தைக்கு 28,000 பைகள் தின வரத்தாக வந்தது. ஸ்பாட் விலை சென்ற வாரத்தில் நூறு கிலோ 6,400 ரூபாய்க்கு வர்த்தகமானது. பயிர்கள் சேதமடைந்து சப்ளை குறையும் என்பதால் வரும் வாரத்தில் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

- பானுமதி அருணாசலம்.

அக்ரி கமாடிட்டி !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism