Published:Updated:

கமாடிட்டி! - (மெட்டல் & ஆயில்)

கமாடிட்டி! - (மெட்டல் & ஆயில்)

கமாடிட்டி! - (மெட்டல் & ஆயில்)

கமாடிட்டி! - (மெட்டல் & ஆயில்)

Published:Updated:
கமாடிட்டி! - (மெட்டல் & ஆயில்)

டந்த வாரம் அதிகம் ஏறி, இறங்கிய தங்கம் குறித்து விளக்கமாக கூறுகிறார் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் கமாடிட்டி கிளஸ்டர் ஹெட் சிவக்குமார்.

''இந்தாண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது நிதி அமைச்சர், அக்ரி கமாடிட்டி அல்லாத கமாடிட்டிகளுக்குப் பரிவர்த்தனை வரி 0.01 சதவிகிதம் விதித்தார். இது கமாடிட்டி வர்த்தகத்தைப் பாதிக்கும். அதாவது, ஒரு கோடி ரூபாய்க்கு பிஸினஸ் செய்தால் 1,000 ரூபாய் வரிச் செலுத்தவேண்டிவரும். இதனால் பிஸினஸ் பாதிக்கப்படும். ஆனால்,  ஊக வணிகத்தை இந்த வரி உயர்வு கட்டுப்படுத்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரை ஊக வணிகம் அதிகம் இருந்ததால், சந்தையில் தாறுமாறாக வர்த்தகம் நடந்தது.  இனிமேல்

கமாடிட்டி! - (மெட்டல் & ஆயில்)

வரும் ஏப்ரல் மாதம் முதல் டெக்னிக்கலாக சந்தை வர்த்தகமாகும். அதனால் இந்த வரி தொழில்ரீதியாகப் பாதிப்பைத் தந்தாலும், செயற்கையான வர்த்தகம் இனி நடப்பது குறையும்.

இனி தங்கத்தின் விலைப் போக்கு அடுத்தவாரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.  

2008-ம் ஆண்டில் நமது மத்திய ரிசர்வ் வங்கி 200 டன் தங்கத்தை வாங்கியது. அதிலிருந்து தங்கத்தின் விலை 80 சதவிகிதம் அதிகரித்தது. 2008-ம் ஆண்டிற்கு பிறகு தங்கத்தின் விலை இப்போதுதான் குறைந்திருக்கிறது. மேலும், தற்போது ஐரோப்பிய வங்கியின் தலைவர் ஐரோப்பிய

நாடுகளின் பொருளாதாரம் குறித்து சில கருத்துகளைச் சொன்னதால் தங்கத்தின் விலை பாரதூரமாகக் குறைந்தது. தற்போது டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து வருகிறது. மேலும், டிமாண்டும் குறைந்து வருவதால் தங்கத்தின் விலை வரும் வாரத்திலும் குறையவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எம்.சி.எக்ஸ். சந்தையில் 10 கிராம் தங்கம் 28,600 ரூபாய் வரை இறங்க வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,600 டாலரை தாண்டி மேலே போனால் மட்டுமே விலை அதிகரிக்கும்'' என்றார்.

அடிப்படை உலோகங்கள்!

அமெரிக்காவின் ஜி.டி.பி. நான்காவது காலாண்டில் குறைந்துள்ளது. இது கடந்த 2011-ம் ஆண்டிற்கு

கமாடிட்டி! - (மெட்டல் & ஆயில்)

பிறகு வந்த குறைந்த ஜி.டி.பி. ஆகும். அமெரிக்காவில் வேலையில்லாதவர்களுக்குத் தரப்படும் உதவித் தொகை குறைந்திருப்பதாகச் சென்ற வாரத்தில் புள்ளிவிவரங்கள் வெளியானது. இது அங்கு பொருளாதாரம் முன்னேறுவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகச் சொல்லப் படுகிறது.  

சீனாவில் லூனார் புதுவருடப் பிறப்புக்குப் பிறகு காப்பருக்கான டிமாண்ட் குறைந்துள்ளது. மேலும், சீனாவில் தயாரிப்பு இண்டெக்ஸ் குறைந்திருப்பதும் அடிப்படை உலோகங்களுக்கான டிமாண்டை குறைத்திருக்கிறது. எனினும், வரும் வாரத்திலோ அல்லது மார்ச் மாத இறுதியிலோதான் டிமாண்ட் அதிகரிக்கும்.

காப்பரை அதிகமாக உற்பத்தி செய்யும் சிலி நாட்டில் ஜனவரி மாதத்தில் 8.6 சதவிகிதம் வரை உற்பத்தி அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. சென்ற மாதத்தில் 4,74,496 மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்திருக்கிறது. காப்பரை பொறுத்தவரை, இன்னும் சில வாரங்கள் விலையில் மந்தநிலையே காணப்படும். மற்ற அடிப்படை உலோகங்களின் விலையும் வரும் வாரங்களில் குறைந்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டி! - (மெட்டல் & ஆயில்)

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வருடத்தில் 92 டாலர் வரை சென்றது. 'ஒபேக்’ நாடுகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் அனலிஸ்ட்களிடம் புளூம்பர்க் நடத்திய ஆய்வின்படி, கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய் யும் நாடுகள் ஒரு நாளைக்கு சுமார் 30.7 மில்லியன் பேரல்கள் வரை உற்பத்தி செய்கிறது.

மேலும், சீனாவின் தயாரிப்பு குறித்த இண்டெக்ஸ் பிப்ரவரி மாதத்தில் 50.5 புள்ளிகளாக இருக்கும் என எதிர்பார்த்தது குறைந்து 50.1 புள்ளி களாக இருக்கிறது. 'ஒபேக்’ நாடுகளில் சவுதி அரேபியா உற்பத்தி குறைப்பு செய்திருந்தாலும், அதனை சரிகட்டும்விதமாக லிபியா தனது உற்பத்தியை அதிகரித்துள்ளது. லிபியாவில் புதிய ஏற்றுமதி முனையம் துவங்கியதையடுத்து தற்போது உற்பத்தியும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய்யை அதிகமாக நுகரும் சீனாவில் தயாரிப்பு குறைந்துள்ளது அங்கிருந்துவரும் டிமாண்டை குறைத்திருக்கிறது. மொத்தத்தில், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் டிமாண்ட் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய்யின் விலை வரும் வாரத்தில் குறைந்தே வர்த்தகமாகும்.

இயற்கை எரிவாயு!

சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வர்த்தகமானது. இதற்கு முக்கிய காரணம், கையிருப்பு குறைந்ததை அடுத்து இந்த விலை அதிகரித்தது. பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அமெரிக்காவின் இயற்கை எரிவாயு கையிருப்பு 171 பில்லியன் கியூபிக் ஃபீட் குறைந்து 2.299 டிரில்லியன் கியூபிக் ஃபீட்டாக உள்ளது. குளிர் நிலவும் பிரதேசங்களில் டிமாண்ட் குறைந்தாலும் உற்பத்தி குறைந்துள்ளதால் வரும் வாரத்தில் விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

வெள்ளி!

தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்து வருகிறது. தற்போதைய நிலையிலிருந்து குறுகியகாலத்தில் வெள்ளியின் விலை குறைந்தே வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது. சர்வதேச சந்தையில்

29 டாலருக்கு விலை வந்தால் அதன்பிறகு நன்கு விலை இறக்கத்தைக் காணும். 29 டாலரிலிருந்து விலை இறங்கினால் பிறகு 22 டாலர் வரை போக வாய்ப்பிருக்கிறது. எம்.சி.எக்ஸ். மே மாத கான்ட்ராக்ட் குறுகியகால சப்போர்ட் 53,800 ரூபாய். இந்த விலை இறங்கினால் இதிலிருந்து 52,500-51,800 ரூபாய் வரை போகும். 55,600 ரூபாய்க்கு மேல் போனால் மட்டுமே விலை இதற்கு மேலே போகும்.

- பானுமதி அருணாசலம்,

படங்கள்: ரா.நரேந்திரன்.

கமாடிட்டி! - (மெட்டல் & ஆயில்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism