Published:Updated:

சந்தையைக் கவிழ்த்த டி.ஆர்.சி.!

சந்தையைக் கவிழ்த்த டி.ஆர்.சி.!

சந்தையைக் கவிழ்த்த டி.ஆர்.சி.!

சந்தையைக் கவிழ்த்த டி.ஆர்.சி.!

Published:Updated:
##~##

''அருமை, அருமை'' என்று புகழ்ந்தபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''எது அருமை, பட்ஜெட்டா?'' என்றவுடன், ''அதை அப்படி சொல்ல முடியுமா? நான் உமது பட்ஜெட் கவரேஜை சொன்னேன். நீர் புதிதாக ஆரம்பித்திருக்கும் நாணயம் விகடன் இணையதளத்தில் (http://nanayam.vikatan.com) பட்ஜெட் பற்றி பல கோணங்களில் கவரேஜ் தந்ததைப் பார்த்தேன்.

விர, பங்குச் சந்தை, மியூச்சுவல், ரியல் எஸ்டேட் போன்றவைக் குறித்த அடிப்படை விஷயங்களைப் பற்றி உம்முடைய பல்வேறு கட்டுரைகளும் சூப்பர். ஆரம்ப நிலையில் உள்ள வாசகர்கள் பங்குச் சந்தை குறித்து தெளிவாக தெரிந்துகொள்ள இந்த இணையதளம் நிச்சயம் உதவும். இலவசமாக கிடைக்கும் இந்த இணையதளத்தை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது என் வேண்டுகோள்'' என்றவருக்கு, ஸ்நாக்ஸ் தந்தோம். அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொறிக்க ஆரம்பித்தவர், முதலில் பட்ஜெட் பற்றி செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தையைக் கவிழ்த்த டி.ஆர்.சி.!

''ஒரு வழியாக தன்னுடைய எட்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்துவிட்டார் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம். பட்ஜெட் அன்று சந்தை சரமாரியாக விழுந்தது. பட்ஜெட் முழுக்க நல்ல ஆங்கிலத்தில் இருந்தாலும், அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கான டாக்ஸ் ரெசிஸ்டன்ஸி சர்ட்டிஃபிகேட் (டி.ஆர்.சி.) பற்றி அமைச்சர் பேசியது பலருக்கும் புரியவில்லை.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கருத்து சொல்ல ஆரம்பிக்க, கடைசியில் சந்தை விழுந்ததுதான் மிச்சம். மறுநாள் அதுபற்றி விளக்கம் தந்தபிறகும் சந்தையைப் பெரிதாக உயர வைக்க முடியவில்லை. யாரோ சிலர் தின வர்த்தகத்தில் 'கொள்ளை லாபம்’ சம்பாதிக்கவே அமைச்சரின் பேச்சு உதவியது என மும்பை முழுக்கப் பேச்சு'' என்றவர், அடுத்த செய்திக்கு போனார்.  

பட்ஜெட் ஆரம்பிக்கும்போதே, நடப்பு கணக்கு பற்றாக்குறைதான் எனக்கு கவலை அளிக்கிறது என்று சொன்னார். இறக்குமதியைக் குறைக்க வேண்டும், இல்லை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இரண்டுமே செய்ய முடியவில்லை எனில் ரூபாய் சரிவதைத் தடுக்க முடியாது. இப்போதைக்கு ரூபாய் சரிவதைத் தடுப்பதற்கு அந்நிய முதலீட்டாளர்களை விட்டால் வேறு வழி இல்லை. கடந்த ஆண்டு அவர்கள் மட்டும் 32 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்தார்கள்.

அதேபோல பெரும் பணக்காரர்களுக்கு வரி கொண்டுவந்ததும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அந்த லிமிட்டில் பல லட்சம் பேருக்கு மேல் இருப்பார்கள். 120 கோடி இந்திய மக்கள் இருக்கும் நாட்டில் வெறும் 42,800 பேர் மட்டும்தான் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிப்பதாகச் சொன்னால் எப்படி நம்ப முடியும்? தமிழ்நாட்டில் 10 மாநகராட்சியும், 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகளும் இருக்கின்றன. இதில் எத்தனை கவுன்சிலர்கள் என்று கணக்கு போட்டாலே தலை சுற்றுகிறது. ஆனால், இந்தியா முழுக்க 42,800 பேர்தானாம். இவர்களையெல்லாம் வரிக்குள் கொண்டுவர எந்த முயற்சியும் இல்லை.  

இந்த பட்ஜெட் மூலம் சில பிரச்னைகளுக்கு தீர்வுகாண முற்பட்டிருக்கிறார் மத்திய அமைச்சர்.  உதாரணத்துக்கு ஆயில் சப்ஸ¨டிக்கான தொகையைக் குறைத்துவிட்டார். ஆயில் சப்ஸ¨டிக்கு இப்போது இரண்டே வழிகள்தான் இருக்கிறது. ஒன்று, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவேண்டும். தேர்தல் சமயத்தில் அதற்கு வாய்ப்பு இல்லை. இரண்டாவது, குரூட் ஆயில் விலையும் குறைய வேண்டும். அது நம் கையில் இல்லாத விஷயம். ஆக, இனிவரும் நாட்களில் சிதம்பரம் என்னதான் செய்யப் போகிறாரோ தெரியவில்லை.

பல அனலிஸ்ட்கள் இலவசங்களை கொடுக்காத பட்ஜெட், தீர்க்கமான முடிவெடுத்திருக்கும் பட்ஜெட்

சந்தையைக் கவிழ்த்த டி.ஆர்.சி.!

என்று சொல்லி இருக்கிறார்கள். சிதம்பரமோ தொழிலதிபர்கள் தங்கள் பர்ஸை திறந்து முதலீட்டை அதிகரிக்கவேண்டும் என்கிறார். அரசாங்கம் முதலீட்டுச் செலவுகளை குறைக்கும்போது தனியார் துறை மட்டும் எப்படி முன்வரும் என்பது புரியாதப் புதிர்தான்.

சந்தைக்குச் சாதகமான விஷயம் இந்த பட்ஜெட்டில் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். செக்யூரிட்டீஸ் டிராக்ஸாக்ஷன் வரியை குறைத்திருக்கிறார். ஆனால், இது டெரிவேட்டிவ்க்குதான் குறைத்திருக்கிறாரே தவிர, கேஷ் மார்க்கெட்டுக்கு குறைக்கவில்லை.

ஒரே ஒரு விஷயம் நிச்சயம். எப்படியாவது அந்நிய முதலீட்டை கொண்டுவருவது என்ற உறுதியில் இருக்கிறார் அமைச்சர். எஃப்.ஐ.ஐ. மற்றும் எஃப்.டி.ஐ. என்று இரு பிரிவாகப் பிரித்திருக்கிறார். இதனால் கொஞ்சம் முதலீடு வர வாய்ப்பு இருக்கிறது.

இந்த பட்ஜெட்டை கூட்டிக்கழித்துப் பார்த்தால், கொஞ்சம் நம்பிக்கை மட்டும் மிஞ்சுகிறது. இந்தியா என்னும் ரயில் இன்னும் தண்டவாளத்தில்தான் இருக்கிறது. அது தடம் புரண்டுவிடவில்லை. வளர்ச்சி என்னும் இன்ஜீனை ஸ்டார்ட் செய்துவிடலாம் என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர். இவரிடத்தில் பேச்செல்லாம் நன்றாகவே இருக்கிறது. பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன் வந்த மூன்றாம் காலாண்டு ஜி.டி.பி. வளர்ச்சி 4.5 சதவிகிதமாக குறைந்திருப்பதைப் பார்த்தால் அடுத்த வருடம் 6 சதவிகிதத்துக்குமேல் வளரும் என்பது எப்படி சாத்தியம் என்பது சிதம்பர ரகசியம்தான்.!'' என நீண்ட நேரம் பேசியவருக்கு சுடச்சுட டீ தந்தோம்.

''பட்ஜெட் பேச்சில் பொதுத் துறை நிறுவனங் களின் பங்கு விற்பனை பற்றி மீண்டும் புதிய இலக்கு நிர்ணயித்திருக்கிறாரே நிதி அமைச்சர்?'' என்றோம்.

சந்தையைக் கவிழ்த்த டி.ஆர்.சி.!

''ஆமாம், இன்றைய தேதியில் கணிசமான பணம் அங்கிருந்துதான் வரும்போல தெரிகிறது. 2013-14-ல் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் மூலமாக ரூ.55,814 கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் அரசுப் பங்குகள் விற்பனை வாயிலாக ரூ.30,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், இந்த இலக்கிற்கு குறைவாக ரூ.24,000 கோடிதான் திரட்ட முடியும் என அண்மைக் கால மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. வரும் மார்ச் மாதத்திற்குள் செயில், நால்கோ, எம்.எம்.டி.சி. மற்றும் ராஷ்ட்ரீய கெமிக்கல் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் ஏலமுறை பங்கு விற்பனையை மேற்கொள்ள உள்ளன'' என்றார்.

''ஏசியன் ஃபிலிம்ஸ், புளுபேர்டு உள்ளிட்ட 26 நிறுவனங்களை பட்டியலில் இருந்து பி.எஸ்இ. நீக்க உள்ளது. பட்டியலிடப்படும் விதிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மார்ச் 21-ம் தேதி முதல் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. தப்பித் தவறி இந்தப் பங்குகள் உங்கள் கையில் இருந்தால் உடனடியாக விற்று வெளியே வந்துவிடுவது நல்லது'' என்றவர், ''பட்ஜெட் பற்றி 5-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாணி மஹாலில் நீர் நடத்தும் அலசல் கூட்டத்துக்கு அவசியம் வந்துவிடுகிறேன். பட்ஜெட் பற்றி நிபுணர்கள் இன்னும் விளக்கமாக பல விஷயங்களை சொல்வார்கள் என்பதால் வாசகர்கள் தங்கள் நண்பர்களோடு இந்தக் கூட்டத்துக்கு அவசியம் வரவேண்டும்'' என்று சொல்லிவிட்டு, ''சந்தை கலங்கலாக இருக்கிறது. எனவே, ஷேர் டிப்ஸ் எதுவும் இல்லை'' என்றவர், நடுராத்திரி விலை ஏறுவதற்கு முன்னால் பெட்ரோல் போட வேகமாகக் கிளம்ப ஆரம்பித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism