Published:Updated:

ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.232 உயர்வு!

Vikatan Correspondent
ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.232 உயர்வு!
ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.232 உயர்வு!
ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.232 உயர்வு!

சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது.

அதிகரித்து வந்த தங்கம் விலை இடையில் சில நாட்கள் குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 120 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.21 ஆயிரத்து 216க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் பவுனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒருகிராம் விலை ரூ.2,681க்கும், சவரனுக்கு ரூ.232 அதிகரித்து ரூ.21,448க்கும் விற்பனையாகிறது.

10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.310 உயர்ந்து ரூ.28,670க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் உயர்ந்து ரூ.49 க்கும், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.780 உயர்ந்து 45,780 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.