பிரீமியம் ஸ்டோரி

 வர்த்தகம்

##~##

இந்த வாரம் மஞ்சள் குறித்து விளக்குகிறார் ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சவுத் ஜோன் மேனேஜர் முருகேஷ் குமார்.

மஞ்சள்! (Turmeric)

''குறைந்த உற்பத்தி, உள்நாட்டு டிமாண்ட் காரணமாக மஞ்சள் விலை சென்ற வாரம் உயர்ந்து வர்த்தகமானது. கடந்த இரண்டு வாரத்தில் குவிண்டாலுக்கு 1,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 85 லட்சம் பைகளாக இருந்த உற்பத்தி, இந்த வருடம்

60 லட்சம் பைகளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சளுக்கு கூடுதலாக 10 சதவிகித மார்ஜின் விதித்துள்ளது விலையில் பிரதிபலிக்கும்.

மஞ்சளின் விலை ஒரு குவிண்டால் 8,000 ரூபாய் வரை உயரலாம். என்.சி.டி.இ.எக்ஸ். ஏப்ரல் கான்ட்ராக்ட் சப்போர்ட் ரூ.6,500-6,200-வும், ரெசிஸ்டன்ஸ் ரூ.7,300-8,050-வும் கொள்ளவும்''.

அக்ரி கமாடிட்டி !

மிளகு! (Pepper)

வர்த்தகர்கள் லாபத்துக்காக விற்றதால் விலை குறைந்து வர்த்தகமானது. சென்ற வியாழன் கொச்சின் சந்தைக்கு 67 டன் மிளகு வரத்து வந்தது. நூறு கிலோ 36,600 ரூபாயாக வர்த்தகமானது. தரமான மிளகுக்கு அதிக விலை கிடைக்கும் என்று வர்த்தகர்கள் ஸ்டாக்கை உயர்த்தி வருகின்றனர். ஆனால், வியட்நாமிலிருந்து வரும் மிளகினால் விலையேற்றம் தடுக்கப்படும்.

அக்ரி கமாடிட்டி !

ஜீரகம்! (Jeera)

சென்ற வாரம் டிமாண்ட் குறைந்ததாலும், வரத்து அதிகமானதாலும் ஜீரகத்தின் விலை குறைந்தே வர்த்தகமானது. சென்ற வாரத்தில் உஞ்ஹா சந்தைக்கு 32,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) வந்தன. நூறு கிலோ ஜீரகம் 13,250 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் நாட்களில் நல்ல தரமான ஜீரகத்தின் வரத்து அதிகரிக்கும் என்பதால் விலையில் பாதிப்பு ஏற்படும். எனினும், உள்நாட்டு டிமாண்ட் அதிகளவில் இருப்பதால் விலை குறைய வாய்ப்பில்லை.

ஏலக்காய்! (cardamom)

அக்ரி கமாடிட்டி !

ஸ்பாட் சந்தையில் ஏலக்காய் விலை அதிகரித்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. சென்ற வியாழன்  ஏலக்காய் ஏலம் விடும் சந்தைகளில் வரத்து 54 டன்களாக இருந்தது. ஒரு கிலோ ஸ்பாட் விலை 650 ரூபாயாக வர்த்தகமானது. அதிகபட்ச விலையாக 918 ரூபாய்க்கு கேட்கப்பட்டது. இந்தியாவின் ஏலக்காய் உற்பத்தி சென்ற வருடத்தைவிட 30% குறைந்துள்ளது. உற்பத்தி குறைவாக இருப்பதால் ஏலக்காய் விலை வரும் வாரத்தில் அதிகரிக்கும்.

மிளகாய்!

ஸ்பாட் சந்தைகளுக்கு வரத்து அதிகமாக இருந்ததால் சென்ற வாரத்தில் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமானது. ஆந்திராவில் மழையினால் மிளகாய் பயிர் சேதமடைந்ததால், தரமான மிளகாயின் வரத்து குறைந்தது.  மார்ச் மாத இறுதியிலும், ஏப்ரல் மாதத்திலும் புதிய வரத்து இருக்கும் என்பதால் வரும் வாரங்களில் மிளகாய் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு