Published:Updated:

வி.ஆர்.எஸ். பணம்: வீணாகாமல் சேர்த்து வைக்கலாம்!

செ.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி

ஆலோசனை

##~##

இன்றைக்கு விருப்ப ஓய்வு பெறுகிறவர்களின் எண்ணிக்கை மெள்ள மெள்ள அதிகரித்து வருகிறது. கணிசமான பணம் கிடைக்கும் என்பதே வி.ஆர்.எஸ். வாங்க நினைக்கிறவர்களின் முதல் யோசனையாக இருக்கிறது. அப்படி பணம் கிடைக்கும்போது, நெருங்கிய பந்தங்கள் அந்தப் பணத்தைத் தங்களுடைய தேவைக்குக் கேட்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. சில குடும்பங்களில் இந்தப் பணத்தை ஆடம்பரமாகவும் செலவழிக்கிறார்கள். வி.ஆர்.எஸ். பெறுகிறவர் இந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் தன் எதிர்காலத்தைக் கழிக்கவேண்டும் என்பதை அனைவரும் அவசியம் உணரவேண்டும்.

எனவே, திடீரென கிடைக்கும் கணிசமான தொகையை சரியான திட்டமிடலோடு கையாளாவிட்டால், பாடுபட்டுச் சேர்த்தப் பணம் காணாமல் போய்விடும் என்பது நிச்சயம். இதனைத் தவிர்க்க, விருப்ப ஓய்வின் மூலம் கிடைக்கும் பணத்தை எப்படி முதலீடு செய்யலாம்? அதற்கான நிதித் திட்டமிடலை எப்படி செய்வது என நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடன் கேட்டோம். விளக்கமான பதிலோடு நிதித் திட்டமிடலை எடுத்துச் சொன்னார் அவர். அந்த நிதித் திட்டமிடல் இதோ:

வி.ஆர்.எஸ். - காரணம்!

''வி.ஆர்.எஸ்-ல் (Voluntary Retirement Scheme) என்பது நிறுவனமாகப் பார்த்து அளிப்பது. விருப்ப ஓய்வை நிறுவனமாகவே பார்த்து அளிக்கக் காரணம், அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கலாம்; அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கலாம். அல்லது நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை  அதிகமாக இருப்பதால் ஆட்குறைப்பு செய்யலாம்.

வி.ஆர்.எஸ். பணம்: வீணாகாமல் சேர்த்து வைக்கலாம்!

பொருளாதார வீழ்ச்சி, தொழிலில் பின்னடைவு என பல காரணங்களினால் ஒரு நிறுவனம் தன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வை வழங்கி நிதிச் சுமையைக் குறைக்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.  இதை ‘The Golden Handshake scheme’ என்றும் அழைப்பது வழக்கம்.

வருமான வரிச் சட்ட வி.ஆர்.எஸ். விதிமுறைகள்!

* வி.ஆர்.எஸ். பெற விரும்புபவர்கள்

40 வயதை கடந்தவராகவோ அல்லது 10 வருடம் பணிக்காலம் முடிந்தவராகவோ  இருக்க வேண்டும் என்பது வருமான வரிச்சட்டத்தின் விதியாகும்.

* வி.ஆர்.எஸ். பெற்றபிறகு அதே நிறுவனத்திலோ அல்லது அதன் துணை நிறுவனங்களிலோ மீண்டும் வேலைக்குச் சேர முடியாது.

வி.ஆர்.எஸ். பணம்: வீணாகாமல் சேர்த்து வைக்கலாம்!

* வி.ஆர்.எஸ். மூலம் கிடைக்கும் தொகை ஊழியரின் முடிக்கப்பட்ட ஒவ்வொரு சர்வீஸ் ஆண்டுக்கும் மூன்று மாதச் சம்பளம் அல்லது ஓய்வு பெறும் தேதி வரை உள்ள மீதி பணி மாதங்களுக்கான சம்பளத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு நிறுவனமும் விருப்ப ஓய்வை அவரவர்களின் வசதிக்கு ஏற்ப வைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த விதிமுறைகள் வருமான வரிச் சட்டம் 2பி.ஏ-வின் விதிமுறை களை மீறாதபடி இருப்பது அவசியம்.

*ஊழியர்கள் நிறுவனத்திடமிருந்து விருப்ப ஓய்வை பெறும்பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட தொகை நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும். இந்தத் தொகை அவர்களின் பணி மூப்பை பொறுத்தும், பணியின் பிரிவைப் பொறுத்தும் வேறுபடலாம்.

அந்தத் தொகையில் ஐந்து லட்சம் வரை வரிச் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. மீதி இருக்கும் தொகைக்கு கண்டிப்பாக வரிச் செலுத்தவேண்டும்.

விருப்ப ஓய்வுத் தொகைக்கான கணக்கீடு!

நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் விருப்ப ஓய்வுத் தொகையை இதுவரை பணியாற்றிய வருடங்களின் அளவு மதிப்பீடு அல்லது இனி பணியாற்ற இருக்கும் வருடங்களின் அளவு மதிப்பீடு என இரண்டு முறைகளில் கணக்கீடு செய்து ஊழியர்களுக்கு வழங்குவார்கள்.

வி.ஆர்.எஸ். பணம்: வீணாகாமல் சேர்த்து வைக்கலாம்!

இந்த முறை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்'' என்றவர், விருப்ப ஓய்வு பெறும் போதோ அல்லது நிறுவனம் விருப்ப ஓய்வை வழங்கும்போதோ நிறுவனம் தரும் விருப்ப ஓய்வுத் தொகையை எப்படி முதலீடு செய்து வருமானத்தை ஈட்டலாம் என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

எப்படி முதலீடு செய்யலாம்?

அஞ்சல் அலுவலக முதலீடு: 22.5%

வி.ஆர்.எஸ். பணம்: வீணாகாமல் சேர்த்து வைக்கலாம்!

கணவன்-மனைவி இருவருமாகச் சேர்ந்து இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு, ஒருவர்  வி.ஆர்.எஸ். பெறுவதன் மூலம் 40 லட்சம் ரூபாய் பெறுகிறார்

என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தொகையில் 22.5% ரூபாயை (9 லட்சம் ரூபாய்) அஞ்சல் அலுவலகச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இத்திட்டத்திற்கு 8.5% வரை வருட வருமானம் கிடைக்கும். இதனின் லாக் இன் பீரியட் ஐந்து ஆண்டுகளாக இருப்பது அவசியம். இந்த முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வரிக் கட்டவேண்டியது அவசியம்.

மூத்தக் குடிமக்களுக்கான சேமிப்புத் திட்ட முதலீடு: 37.5%

வி.ஆர்.எஸ். பணம்: வீணாகாமல் சேர்த்து வைக்கலாம்!

பணி ஓய்வு பெறுபவர்கள் தன்னுடைய 55 வயதில் பெறுபவராக இருந்தால் அந்தத் தொகையில் 37.5% ரூபாயை (15 லட்சம் ரூபாய்) அஞ்சலகங்களில் உள்ள மூத்தக் குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதிலிருந்து வருடத்திற்கு 9% நிலையான வருமானம் கிடைக்கும். இதனின் லாக் இன் பீரியட் ஐந்து ஆண்டுகளாக இருப்பதும் அவசியம்.

இதன்மூலம் கிடைக்கும் வருமானத்திற்கும் வரிக் கட்டவேண்டியது அவசியம். அஞ்சலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான வருமானம் 9% கிடைக்கும். இதைவிட வங்கியில் உள்ள மூத்தக் குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்குத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும்பட்சத்தில் அதை தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

எம்.ஐ.பி. திட்டம் (Monthly Income Plan): 25%

வி.ஆர்.எஸ். பணம்: வீணாகாமல் சேர்த்து வைக்கலாம்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள இத்திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு தொகையில்

அஞ்சலக முதலீடு மற்றும் மூத்தக் குடிமக்களுக்கான முதலீடு 24 லட்சம் ரூபாய் போக மீதி இருக்கும் தொகையிலிருந்து 25% தொகையை (10 லட்சம் ரூபாய்) முதலீடு செய்யலாம்.

இதற்கு வருடத்திற்கு சுமார் 9-10% வருமானம்  கிடைக்கும்.  இதனின் லாக் இன் பீரியட் ஒரு வருடமாக இருக்கலாம். ஆனால், இந்த முதலீட்டை ஐந்து ஆண்டுகள் தொடர்வதே வருமானத்தைப் பெருக்க சிறந்த வழி.

இதன்மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி உண்டு. எதற்காக இந்த எம்.ஐ.பி. திட்டத்தைப் பரிந்துரை செய்கிறேன் என்றால், இதில் ரிஸ்க் அளவு குறைவே. சந்தையின் செயல்பாட்டை பொறுத்து இதன் வருமான வளர்ச்சி இருந்தாலும் ஐந்தாண்டு முதலீடு என்பதால் வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

ஈக்விட்டி பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்: 15%

வி.ஆர்.எஸ். பணம்: வீணாகாமல் சேர்த்து வைக்கலாம்!

இத்திட்டத்தில் நீண்டகால முதலீடு செய்தால்  12 சதவிகிதம் வருட வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலே சொன்ன முதலீடுகள் போக மீதி இருக்கும் 15 சதவிகித தொகையை (6 லட்சம் ரூபாய்) பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஆனால், இந்த முதலீட்டை ஐந்து ஆண்டுகள் தொடர்வதே வருமானத்தைப் பெருக்க சிறந்த வழி. ஐந்து வருடங்களுக்குப் பிறகு வருடத்திற்கு 12% என்ற அளவில் பணத்தை எடுக்கலாம்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடு என்பதால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன்மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரிக் கட்டவேண்டிய அவசியம் கிடையாது'' என்று விளக்கமாகச் சொல்லி முடித்தார்.

இனி, வி.ஆர்.எஸ். பெறப்போகிறவர்களும் சமீபத்தில் வி.ஆர்.எஸ். பெற்றவர்களும் இந்த நிதித் திட்டமிடலை பின்பற்றி தங்கள் ஓய்வுக்காலத்தை வளமானதாக ஆக்கிக்கொள்ளலாமே!

வி.ஆர்.எஸ். பணம்: வீணாகாமல் சேர்த்து வைக்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு