Published:Updated:

பி.எஃப். பணம்...

எளிதாகப் பார்க்க இ-பாஸ்புக்! இரா.ரூபாவதி.

பிரீமியம் ஸ்டோரி

புது வசதி

##~##

அலுவலக ஊழியர்களின் மிகப் பெரிய ஆதங்கமே, பி.எஃப். அக்கவுன்டில் சேர்ந்திருக்கும் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்பதுதான்! இந்த ஆதங்கத்துக்கு இனி வேலை இல்லை. காரணம், உங்கள் பி.எஃப். அக்கவுன்டில் சேர்ந்திருக்கும் பணம் எவ்வளவு என்பதை இனி இ-பாஸ்புக் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொண்டுவிட முடியும்.

ஓர் ஊழியர் வேலைக்குச் சேர்ந்தவுடன் குறிப்பிட்ட தொகையைப் பிடிப்பதோடு, ஏறக்குறைய அதே அளவு பணத்தை வேலை பார்க்கும் நிறுவனமும் தந்து, பி.எஃப். அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும். இந்தப் பணம் பி.எஃப். கணக்கில் சரியாக வரவு வைக்கப்படுகிறதா என்று தெரியாமல் இருந்தது. இதனால் சில நிறுவனங்கள் ஊழியர்களிடமிருந்து பிடித்தப் பணத்தைக் கட்டாமலே விட்டுவிட, பல ஊழியர்கள் பாதிப்படைந்தனர். இதுமாதிரியான சம்பவங்களைத் தடுக்கவே பி.எஃப். அலுவலகம் இ-பாஸ்புக் என்னும் நடைமுறையை இப்போது கொண்டு வந்திருக்கிறது. இதுகுறித்து சென்னை யிலுள்ள பி.எஃப். அலுவலக அதிகாரி ஒருவருடன் பேசினோம்.

பி.எஃப். பணம்...

''இந்த இ-பாஸ்புக் மூலம் ஒருவரது பி.எஃப். கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், பி.எஃப். மூலம் வாங்கிய கடன் விவரம், இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்த பி.எஃப். பணத்தை இப்போதுள்ள கணக்குக்கு மாற்றிய விவரம் போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

இந்தச் சேவையைப் பெற http://members.epfoservices.in என்கிற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். அங்கே உங்கள் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு எண், ரேஷன் கார்டு எண், ஆதார் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் எண்ணை தந்து பதிவு செய்ய வேண்டும். கூடவே, உங்கள் செல்போன் நம்பரையும் இதனுடன் அவசியம் தரவேண்டும். பதிவு செய்த 3 முதல் 7 நாட்களுக்குள் நீங்கள் இ-பாஸ்புக் வசதியைப் பெறமுடியும். இதனை வைத்து உங்கள் பி.எஃப். கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம். பி.எஃப். கணக்கில் இருக்கும் பணத்துக்கான வட்டி ஆண்டு இறுதியில்தான் மொத்தமாகப் போடப்படும். இதில் தவறு ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட பி.எஃப். அலுவலகத்திற்கு தெரிவித்து சரிசெய்துகொள்ளலாம்'' என்றார்.

பி.எஃப். பணம் என்பது ஊழியர்களுடைய ஓய்வுக்காலத்திற்கான முதலீடு என்பதால்,  இந்த இ-பாஸ்புக் இனி அனைவருக்கும் நிச்சயம் பயன்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு