Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் - டாப் கியரில் போகுமா டயர் இண்டஸ்ட்ரி?

செக்டார் அனாலிசிஸ் - டாப் கியரில் போகுமா டயர் இண்டஸ்ட்ரி?

செக்டார் அனாலிசிஸ் - டாப் கியரில் போகுமா டயர் இண்டஸ்ட்ரி?

செக்டார் அனாலிசிஸ் - டாப் கியரில் போகுமா டயர் இண்டஸ்ட்ரி?

Published:Updated:

ரிசர்ச்

##~##

ஒரு நாளில் சென்னை அண்ணா சாலையில் செல்லும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை எண்ணிப் பார்த்து, அதை இரண்டால் அல்லது நான்கால் பெருக்கினால், பெரிய எண் ஒன்று வருகிறதில்லையா? இது சென்னையில் ஒரே ஒரு சாலையில் மட்டும் எனில் இந்தியா முழுக்கக் கணக்குப் பார்த்தால், டயர் உற்பத்தி ஓஹோவென இருக்கிறது என்று புரியவில்லையா? அந்த டயர் செக்டார் பற்றிதான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

வேகமாகச் செல்லும் டயர்!

எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், சுமார் 12 கோடி டயர் உற்பத்தி செய்யப்படுகிறது இந்தியாவில்! உலக அளவில் மொத்தத் தேவையில் 5% நம் நாட்டில்; ஆண்டுக்கு சுமார் ரூ.30,000 கோடி வர்த்தகம். கடந்த பத்து ஆண்டுகளாக சராசரியாக 20 சத விகிதத்துக்கு மேல் வளர்ந்து வரக்கூடிய துறை இது. ஆனால், வாகன விற்பனையோடு நேரடியாகத் தொடர்பு உள்ளது இத்துறை என்பதுதான் இதில் உள்ள சிக்கல்.

2011-12-ல் 2 கோடியே 3 லட்சத்து 66 ஆயிரத்து 432 வாகனங்கள் உற்பத்தி ஆனது இந்தியாவில். இதில் 76 சதவிகிதம் டூ வீலர்கள்! இதில் 29 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி ஆனது. 2010-11-ம் ஆண்டைவிட 2011-12-ல் 13% வளர்ச்சி இருந்தபோதிலும் நடப்பு ஆண்டில் வாகன விற்பனையில் தேக்கநிலைதான். இந்த பிப்ரவரியில் கார் விற்பனை 25% வீழ்ச்சி எனச் சொல்கிறது 'சியாம்’ அமைப்பு. எனவே, அதன் பாதிப்பு டயர் விற்பனையிலும் பிரதிபலிக்கும். ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருளாதாரச் சிக்கலால் கார் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

டயர் விற்பனை என்பது மூன்று விதங்களில் நடக்கிறது;

1. ஓ.இ.எம். எனும் ஒரிஜினல் எக்யூப்மென்ட் மேனுஃபேக்ஸரர்ஸ்,

2. ரீப்ளேஸ்மென்ட் மார்க்கெட்,

3. ஏற்றுமதிச் சந்தையில் விற்பனை.

செக்டார் அனாலிசிஸ் - டாப் கியரில் போகுமா டயர் இண்டஸ்ட்ரி?

இது தவிர, ரீட்ரீடிங் சந்தையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதேபோல, மொபட், பைக், ஸ்கூட்டர், கார், லாரி, டிராக்டர், ஜீப் என வாகன வகைகளைப் பொறுத்தும் விற்பனை மாறுபடும்.

ஓ.இ.எம்.(Original Equipment Manufacturer)

ஹுண்டாய், ஃபோர்டு, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, அசோக் லேலாண்ட், டி.வி.எஸ்., ஹீரோ என வாகன உற்பத்தியாளர்களிடமே நேரடியாக விற்பனை செய்வதுதான் ஓ.இ.எம். ஆகும். இதில் ஒரு அனுகூலம் என்னவென்றால், அதிக எண்ணிக்கையில் ஒரே வாடிக்கையாளரிடம் விற்பனை சாத்தியம். நுகர்வோரிடம் நேரடியாக விற்கும் ரீடெயில்/ரீப்ளேஸ்மென்ட் மார்க்கெட் சில்லறை விற்பனையில் அது சாத்தியமில்லை. ஆனால், ஓ.இ.எம்.-ல் கிடைப்பதைவிட இதில் கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும். எனவே, ஓ.இ.எம்.-ல் விற்கும் நிறுவனங்களின் டாப்லைன் குரோத் என்னும் விற்பனை வளர்ச்சி பொதுவாக அதிகமாக இருக்கும்.

செக்டார் அனாலிசிஸ் - டாப் கியரில் போகுமா டயர் இண்டஸ்ட்ரி?

ஆனால், ரீப்ளேஸ்மென்ட் மார்க்கெட் விற்பனையில் நாட்டம் செலுத்தும் நிறுவனங் களின் பாட்டம்லைன் எனும் லாபம் அதிகமாக இருக்கும். உதாரணமாக, சீயட் மற்றும் அப்போலோ டயர்ஸ் ஆகியவை ஓ.இ.எம்.களிடம் அதிகம் விற்கும் நிறுவனங்கள்; ரீப்ளேஸ்மென்ட் மார்க்கெட்டில் அதிகம் ஆர்வம் செலுத்தும் நிறுவனம் எம்.ஆர்.எஃப்.

ஏற்றுமதிச் சந்தையைப் பொறுத்தவரையில் சென்ற ஆண்டு மிக்ஸட் ட்ரண்டே இருந்தது. சர்வதேச பொருளாதாரப் பிரச்னைகளால் விற்பனை பெரிதாக அதிகரிக்கவில்லை என்றாலும், டாலர் மதிப்பு உயர்ந்ததால் லாபம் அதிகரித்தது. அதேசமயம், சிங்கப்பூர், இலங்கை, தென்கொரியா, சார்க் நாடுகள், ஆசிய நாடுகள் மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள் ஆகியவற்றுடன் நம் நாடு போட்டுக்கொண்டிருக்கும் 'ஃப்ரீ டிரேட் அக்ரிமென்ட்’ எனும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள்/பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களின் சில ஷரத்துக்களும், சில நேரங்களில் சாதகமாகவும் பல நேரங்களில் நம் நிறுவனங்களுக்குப் பாதகமாகவும் அமைந்திருக்கின்றன.

சில பிரச்னைகள்..!

புதிதாகத் தொழிற்சாலை ஆரம்பிக்கவேண்டு மென்றால், மிகப் பெரிய முதலீடு தேவை என்பதால், புதிய போட்டிகள் என்பது குறைவு. மக்கள் மனதில் பதியும்படியான பிராண்டிங்கிற்கு ஆகும் செலவும் மிக அதிகம். வலுவான பிராண்ட் உள்ள நிறுவனங்கள் மட்டுமே இரண்டாம்கட்ட சந்தையான 'ரீப்ளேஸ்மென்ட் மார்க்கெட்டில்’ சோபிக்க முடியும். கிரிக்கெட் விளையாட்டு மைதானம், வீரர்களின் டி-ஷர்ட், கார் ரேஸ் என எங்கு பார்த்தாலுமே விளம்பரம் தெரியுமே! எல்லாம் இதற்காகத்தான். வண்டியுடன் வந்த டயர்கள் தேய்ந்தபின் அதற்கு பதில் எந்த பிராண்டைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்த பிராண்ட் பில்டிங் முக்கியம். அந்த அடிப்படையில் எம்.ஆர்.எஃப். போன்ற நிறுவனங்கள் பலமாக உள்ளன.  

டயர் உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டு ஒரு குழுவாகச் (கார்டல்)  செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர். எழுப்பியவர்கள், டயர் விற்பனை செய்பவர்களின் கூட்டமைப்பான 'ஆல் இந்திய டயர் டீலர்ஸ் ஃபெடரேஷன்’. உற்பத்தியாளர்களுக்கும் ஆட்டோமோட்டிவ் டயர் மேனுஃபேக்ஸரர்ஸ் அசோசியேஷனுக்கும் எதிராக காம்பெட்டிஷன் கமிஷனுக்கு எடுத்துச் சென்றனர் விவகாரத்தை. எங்கே சிமென்ட் விவகாரம்போல இதிலும் ஏதாவது பெனால்டி போட்டுவிடுவார்களோ என்ற பயம் இருந்தது நிறுவனங்களுக்கு. இக்குற்றச்சாட்டில் வலு இல்லை என சென்ற ஆண்டு நிராகரித்தது கமிஷன். உற்பத்தியாளர்களுக்குச் சாதகமான விஷயம் இது.

செக்டார் அனாலிசிஸ் - டாப் கியரில் போகுமா டயர் இண்டஸ்ட்ரி?

இன்று எப்படி..?

டயர் இண்டஸ்ட்ரி இன்று எப்படி இருக்கிறது?

சுருங்கச் சொல்லவேண்டுமென்றால், குறைந்துவரும் ரப்பர் விலை சாதகம்; குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சி பாதகம்! பெரும்பான்மையான வாகனங்கள் வாங்கப்படுவது இ.எம்.ஐ.-யில்தான்; அதாவது, கடன் வாங்கித்தான்! பொருளாதாரத் தேக்கநிலை மட்டுமல்லாது அதிக வட்டி காரணமாகவும் வாகனங்கள் மற்றும் டயர் விற்பனையின் வளர்ச்சி பாதிப்படைந்திருக்கிறது, டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்த காலாண்டில்.

செக்டார் அனாலிசிஸ் - டாப் கியரில் போகுமா டயர் இண்டஸ்ட்ரி?

தவிர, சர்வதேச அளவில் தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கல்களால் ஏற்றுமதியும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்தக் காலாண்டில் முன்னணி டயர் உற்பத்தியாளர் களின் மொத்த விற்பனை ரூ.8,900 கோடி. இதற்கு முந்தைய ஆண்டைவிட சுமார் 1% மட்டுமே அதிகம். ஆனால், லாபமோ 40 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்தது. கடந்த ஓராண்டுக்கு மேலாகவே ரப்பர் விலை தொடர்ந்து குறைந்துவருவதே, இதற்கு முக்கிய காரணம். ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு அதிகரித்ததால் ஏற்றுமதி மூலமாக அதிக ஆதாயம் கிடைத்ததும் மற்றொரு காரணம்.

இப்போது கிலோ ஒன்றுக்கு ரூ.160-க்குக் கீழே வர்த்தகமாகும் ரப்பரின் விலை, சர்வதேச அளவிலும் குறைந்ததும், கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருவதும் இப்போதைக்கு சாதகமான அம்சம்.

இந்தத் துறையின் எதிர்காலம் மற்றும் பங்கு களைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

(அலசுவோம்)