Published:Updated:

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

பானுமதி அருணாசலம்.

பிரீமியம் ஸ்டோரி

கச்சா எண்ணெய்!

##~##

கச்சா எண்ணெய் இன்வென்டரி அதிகரித்தக் காரணத்தால் சென்ற வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. சுமார் 2.62 மில்லியன் இன்வென்டரி அதிகரித்துள்ளது. மேலும், உலகளவில் கச்சா எண்ணெய் டிமாண்ட் குறைவு மற்றும் டாலரின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களும் விலையில் பிரதிபலித்தது. கச்சா எண்ணெய் அதிகமாக சுத்திகரிப்பு செய்யும் சவுதி அரேபியாவில் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 9.15 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. இதுவே, ஜனவரி மாதத்தில் 9.05 மில்லியன் பேரலாக இருந்தது.

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

ஒபேக் கூட்டமைப்பு நாடுகளின் மொத்த உற்பத்தி பிப்ரவரியில் நாள் ஒன்றுக்கு 74,000 பேரல் அதிகரித்துள்ளது. ஈராக் மற்றும் சவுதி அரேபியாவில் உற்பத்தி அதிகரித்ததன் காரணமே மொத்த உற்பத்தி அதிகரித்தது. சப்ளை அதிகரிப்பு மற்றும் டிமாண்ட் குறைவு உள்ளிட்ட காரணங்கள் விலையில் பிரதிபலித்தது.

ஒபேக் கூட்டமைப்பில் இல்லாத நாடுகளின் உற்பத்தியும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு மட்டும் கடந்த முப்பது வருடங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2013-ல் அமெரிக்காவில் ஒருநாள் எண்ணெய் உற்பத்தி 5,80,000 பேரலில் இருந்து 10.59 மில்லியன் பேரலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 1985-க்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச உற்பத்தியாகும்.

2013-ல் உலகளவிலான கச்சா எண்ணெய் டிமாண்ட் நாள் ஒன்றுக்கு 40,000 பேரல் குறைந்து 1.01 மில்லியன் பேரலாக இருக்கும் என அமெரிக்காவின் எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வரி அதிகரிப்பு மற்றும் செலவினங்கள் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் டிமாண்ட் குறையும் என கூறப்படுகிறது.

மேலும், ஐரோப்பாவின் பொருளாதாரச் சிக்கல் மற்றும் சீனாவின் அதிகரித்து வரும் பணவீக்கமும் விலையில் பிரதிபலிக்கும். சீனாவில் பிப்ரவரி மாத கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்தாண்டு இதே மாதத்தைவிட 9% வரை குறைந்துள்ளது. எனவே, வரும் மாதங்களில் விலை குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

இயற்கை எரிவாயு!

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் இயற்கை எரிவாயு டிமாண்ட் குறைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனிவரும் நாட்களில் குளிர் வீசுவது குறையும் என்பதால் இயற்கை எரிவாயுக்கான தேவையும் குறையும். மேலும், இன்வென்டரியும் மிக அதிகமாக இருப்பதால் விலை குறைவதற்கே அதிக வாய்ப்பு உண்டு. எனவே, வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை குறைந்து வர்த்தகமாக வாய்ப்புண்டு.

அடிப்படை உலோகம்!

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

காப்பர், அலுமினியம் மற்றும் ஜிங்க் உலோகங்களை வாங்கும் திட்டத்தை சீன அரசு மேற்கொள்ள இருப்பதால் அடிப்படை உலோகங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. சீனா 3,00,000 டன் அலுமினியத்தையும், 50,000 டன் ஜிங்க் உலோகத்துக்கும் டெண்டர் விடுத்துள்ளது. இதனால் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஜிங்க் 0.7 சதவிகிதம் அதிகரித்தும், அலுமினியம் 0.2 சதவிகிதமும் அதிகரித்தது. பிப்ரவரி மாதத்தின் நடுவில் ஜிங்க் 13.5 சதவிகிதமும், அலுமினியம் 11 சதவிகிதமும் விலை குறைந்தது. தற்போது சர்வதேசப் பொருளாதாரம் குறித்த சாதகமான தகவல்கள் வருவதாலும், சீனாவின் டிமாண்ட் அதிகரித்ததாலும் விலை குறைந்த ஜிங்க் மற்றும் அலுமினியத்தின் விலை 2-3 சதவிகிதம் வரை அதிகரித்தது. காப்பரின் எல்.எம்.இ. இன்வென்டரி 2,600 டன் வரை அதிகரித்துள்ளது. மொத்த காப்பர் கையிருப்பு 5,20,500 டன்னாக கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இன்வென்டரி அதிகரித்துள்ளதால் காப்பரின் விலை சற்று குறைந்து, வரும் வாரத்தில் வர்த்தகமாக வாய்ப்புள்ளது. மற்ற அடிப்படை உலோகமான லெட் மற்றும் நிக்கல் சற்று விலை அதிகரித்தது. மொத்தத்தில் அடிப்படை உலோகங்களின் விலை வரும் வாரத்தில் அதிகரித்து வர்த்தமாகும்.  

தங்கம்!

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு, பொருளாதாரச் சூழ்நிலைகள் சரியாகி வருவது உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை சென்ற வாரத்தில் குறைந்தது. அமெரிக்காவில் மூன்றாவது வாரமாக வேலை இல்லாத நபர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது அங்கு வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப் பெரிய இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். நிறுவனம் தங்கத்தில் முதலீடு செய்வதைக் கடந்த பதினோரு வாரங்களாகக் குறைத்து வருகிறது. இது முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதைக் குறைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. வரும் வாரத்தில் அமெரிக்காவில் ஃபெடரல் வங்கி மீட்டிங் நடக்க இருப்பதை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எம்.சி.எக்ஸ். தங்கம் 29,140 ரூபாய்க்கு கீழே போகாமல் இருந்தால் வர்த்தகர்கள் ஹோல்டு செய்யவும்.

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )
கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு