Published:Updated:

இரண்டு ஆபீஸில் சம்பளம்...வரி கட்டணுமா ?

இரண்டு ஆபீஸில் சம்பளம்...வரி கட்டணுமா ?

இரண்டு ஆபீஸில் சம்பளம்...வரி கட்டணுமா ?

இரண்டு ஆபீஸில் சம்பளம்...வரி கட்டணுமா ?

Published:Updated:

கேள்வி-பதில்

[?]நான் தனியார் நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக வேலை பார்த்துக்கொண்டே, இன்னொரு நிறுவனத்தில் பகுதி நேரமாகவும் வேலை பார்த்து வருகிறேன். நிரந்தர வேலைக்கு வங்கிக் கணக்கு மூலமும், பகுதி நேர வேலைக்கு கேட்பு காசோலை மூலமும் சம்பளம் வாங்குகிறேன். இவை இரண்டையும் சேர்த்து அடிப்படை வரி வரம்புக்கு அதிகமாகவே உள்ளது. இதனால் எனக்கு வருமான வரிச் சிக்கல்கள் வருமா?

- கதிரேசன், கோயம்புத்தூர்.  இளங்குமரன், ஆடிட்டர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒருவர் எத்தனை இடங்களிலும் வேலை பார்க்கலாம். அதுபோல வங்கி வழியாகவோ, ரொக்கம், காசோலை என எந்த வழிகளிலும் வருமானம் ஈட்டலாம். ஆனால், அடிப்படை வருமான வரிவரம்புக்கு மேல் வருமானம் ஈட்டும்பட்சத்தில் வரிச் செலுத்தியாகவேண்டும்.  எனவே, உங்கள் வருமானத்தைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ப வரிச் செலுத்துங்கள். தற்போது வரி வசூலில் வருமான வரித் துறை தீவிரம் காட்டி வருவதால் வரியைக் கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்தாலும் ஆச்சரியப்படவேண்டாம்!''

இரண்டு ஆபீஸில் சம்பளம்...வரி கட்டணுமா ?

[?]நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து 'இசாப்’ (Employee stock ownership plan) மூலம் ஊழியர்களுக்கு பங்குகள் பிரித்துத் தரப்படும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் எங்கள் சம்பளத்தில் மாற்றம் ஏதாவது இருக்குமா?

- கங்காதரன், திருச்சி.   விக்னேஸ்வரன், முதன்மை ஆலோசகர், ஸ்ரீ ஹெச்.ஆர். கன்சல்டிங் சர்வீஸ்.

''பணியாற்றும் நிறுவனத்திலிருந்து ஊழியர் களுக்குப் பங்குகள் தருவது, ஊழியர்களைப் பொறுத்தவரை ஆதாயமான விஷயம்தான். குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பங்குகள் வழங்குவதை சில நிறுவனங்கள் நடைமுறையாகவே வைத்திருக்கின்றன. அல்லது நிறுவனம் பங்குச் சந்தைக்கு செல்லத் திட்டமிடும்போது, ஊழியர்களைப் பங்குதாரர்களாக மாற்றும் நோக்கிலும் பங்குகளைத் தரும்.

இதன் நோக்கம், நிறுவனத்தில் தாங்களும் ஓர் அங்கமே என ஊழியர்களை உணர்த்துவதுதான். இதன்மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியும் உறுதிப்படும்; நிறுவன வளர்ச்சிக்கு ஏற்ப லாபத்தில் ஊழியர்களுக்குப் பங்கும் கிடைக்கும். ஆனால், ஊழியர்களுக்குப் பங்குகளை வழங்குவதால் சம்பளத்தில் மாற்றம் இருக்காது.''

[?]கிராமப்புற கூட்டுறவு வங்கி களில் பணத்தை முதலீடு செய்யலாமா?  

- ஒரு வாசகர், தஞ்சாவூர். இந்திரா பத்மினி, பொதுமேலாளர், ஐ.ஓ.பி.

இரண்டு ஆபீஸில் சம்பளம்...வரி கட்டணுமா ?

''ஆர்.பி.ஐ. வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கி வழிகாட்டுதல்களோடுதான் கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. மற்ற வங்கிகளைப் போலவே கூட்டுறவு வங்கிகளும் செயல்படுகின்றன. ஆனால், கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவை என்பதால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும்போது மாநில அரசு பொறுப்பேற்றுக்கொள்ளும். நீண்ட காலமாக, நல்ல நிலையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்யலாம்.''

[?]புறநகரில் பஞ்சாயத்து அப்ரூவல் கொண்ட இடத்தை வாங்கியிருந்தேன். தற்போது அந்தப் பகுதி மாநகராட்சியோடு இணைக்கப் பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் வீடு கட்ட சி.எம்.டி.ஏ. அப்ரூவல் வாங்க வேண்டுமா?

- தில்லைநாதன், திருவள்ளூர்.ஜீவா, வழக்கறிஞர்.

''பஞ்சாயத்து அப்ரூவல் உள்ள இடமாக இருந்தாலும், உங்கள் மனை அமைந்துள்ள எல்லை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுவிட்டதால், அந்த மனைக்கு சி.எம்.டி.ஏ. அப்ரூவல் இருந்தால் மட்டுமே வீடு கட்ட அனுமதி கிடைக்கும். ஆனால், இதை தனியாக விண்ணப்பித்து வாங்குவதைவிட வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கேட்டு விண்ணப்பிக்கும்போது இதற்கும் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்.'' 

இரண்டு ஆபீஸில் சம்பளம்...வரி கட்டணுமா ?

[?]எனது மகன் தனியார் மருத்துவ ம¬னையில் பிறந்தான். பிறந்த நாள் அன்றே அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெயர் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் பெற்றேன். இது போதுமா அல்லது பெயருடைய பிறப்புச் சான்றிதழ் வாங்குவது கட்டாயமா?

- ஆர்.ராஜா, அருப்புக்கோட்டை. விஜய் தர்மகண், வழக்கறிஞர்.

''குழந்தைப் பிறந்ததும் குழந்தையின் பாலினம், பெற்றோர், எந்த மருத்துவமனை அல்லது இடம் போன்ற விவரங்களோடு கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய பெயரிடப்படாதச் சான்றிதழ் செல்லத்தக்கதுதான். பெயரிடப்பட்ட சான்றிதழ் தேவையெனில் இந்தச் சான்றிதழ் அடிப்படையில் அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்பின் பிறப்பு - இறப்பு சான்றிதழ் பதிவாளரிடத்தில்  குழந்தையின் பெயரிடப்பட்ட சான்றிதழ் தேவை என விண்ணப்பம் அளித்து சான்றிதழ் கேட்டுப் பெறலாம்''.

இரண்டு ஆபீஸில் சம்பளம்...வரி கட்டணுமா ?

[?]பதிவு செய்யப்படாத தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற சமூக சேவை செயல்களுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு வரிச் சலுகை பெற முடியுமா?

- குமரகுரு, திருத்தணி. சத்தியநாராயணன். ஆடிட்டர்.

''வருமான வரிச் சட்டம் 12ஏ விதியின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 80ஜி பிரிவின் கீழ் வரிவிலக்கு பெற்ற நிறுவனமாக இருந்தால், அதற்கு கொடுக்கும் நன்கொடைகளுக்கு வரிவிலக்குப் பெறமுடியும். அதிலும் குறிப்பாக, நீங்கள் எவ்வளவு நன்கொடை தந்தாலும் மொத்த வருமானத்தில் 10 சதவிகிதம் என்று கணக்கிட்டு, அதிலிருந்து 50 சதவிகிதத் தொகைக்கு மட்டுமே வரிவிலக்குப் பெற முடியும். பதிவு செய்யப்படாத சமூக சேவை நிறுவனங்களுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு வரிச் சலுகை பெற முடியாது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism