Published:Updated:

ஷேர்லக் - கணக்குப் போட்டு இறக்கும் கரடிகள்!

ஷேர்லக் - கணக்குப் போட்டு இறக்கும் கரடிகள்!

ஷேர்லக் - கணக்குப் போட்டு இறக்கும் கரடிகள்!

ஷேர்லக் - கணக்குப் போட்டு இறக்கும் கரடிகள்!

Published:Updated:
##~##

''ஒரு கம்ப்ளைன்ட். இதைக் கட்டாயம் நீர் எழுதவேண்டும்!'' என்கிற கோரிக்கையோடு நம் முன் வந்து உtட்கார்ந்தார் ஷேர்லக். ''சொல்லுங்கள்'' என்றோம்.

''என் செல்போன் நம்பருக்கு ஏதோ ஒரு போன் வருகிறது. அந்த நேரம் நான் கார் ஓட்டிக்கொண்டிருந்ததால் போனை அட்டன்ட் செய்ய முடியவில்லை. யாரென்று தெரியவில்லையே என்று நினைத்து, அந்த நம்பருக்கு போன் செய்தால், இந்தியில் பேசுகிறார்கள். நமக்கு சம்பந்தமில்லாத கால் என்று நினைத்து அரை நிமிடத்தில் கட் செய்வதற்குள் 20 ரூபாய் அவுட். இப்படி எனக்கு இரண்டு முறை ஆகிவிட்டது. இது என்ன புது மோசடி என்று புரியவில்லை. நீங்கள் உஷாராக இருப்பதோடு, உம் வாசகர்களையும் உஷாராக இருக்கச் சொல்லும்'' என்றார் ஷேர்லக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அப்படியே செய்துவிடுகிறேன். வேறு என்ன செய்தி?'' என்று கேட்டவுடன், பங்குச் சந்தை ரகசியங்களைக் கொட்ட ஆரம்பித்தார் ஷேர்லக்.

''ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனியில் வேலை பார்க்கிறவர்கள் ஏக குதூகலத்தில் இருக்கிறார்கள். எல்லாம் போனஸ் தந்த உற்சாகம்தான். பொருளாதார மந்தநிலையிலும் இந்நிறுவனம் இலக்கை எட்டி சாதனை படைத்திருப்பதால், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிக போனஸ் தந்து மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் சென்றிருக்கிறது அந்த நிறுவனம். வழக்கமாக ஆண்டு சம்பளத்தில் சுமார் 15-20 சதவிகிதம் போனஸ் தரும் அந்நிறுவனம், இந்த ஆண்டு 70-100 சதவிகித போனஸ் தந்திருக்கிறது. போனஸாகக் கிடைத்தப் பணத்தின் அளவைக் கேட்டால், மயக்கம் வரும். சீனியர் மேனேஜ்மென்ட் நிலையில் இருப்பவர்களுக்கு 3 முதல் 5 கோடி ரூபாயும், மிடில் மேனேஜ்மென்ட் நிலையில் இருப்பவர்களுக்கு சுமார் 50 லட்சம் ரூபாயும் போனஸ் தரப்பட்டிருக்கிறது'' என்றார்.

''கொடுத்துவைத்த மகராசன்கள் நல்லபடியாக இருக்கட்டும். மணப்புரம், முத்தூட் பங்குகளின் விலை அண்மைக்காலத்தில் கணிசமாகக் குறைந்து வருகிறதே?'' என்றோம்.

ஷேர்லக் - கணக்குப் போட்டு இறக்கும் கரடிகள்!

''மத்திய அரசு நாட்டில் தங்கம் விற்பனையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூடவே, அது தங்கத்துக்கு எதிராக நிதி ஆவணங்களைக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. மேலும், தங்கத்திற்கு இணையாக வழங்கும் கடனின் அளவை குறைக்க ஆர்.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மைக்காலத்தில் தங்கத்தின் விலை கணிசமாக இறங்கி இருப்பதால், இந்த நிறுவனங்களின் வாராக்கடன் அளவு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இவை எல்லாம் தங்க நகைகளுக்கு எதிராக கடன் வழங்கும் நிறுவனங்களுக்குப் போதாதகாலம் என்றுதான் சொல்லவேண்டும். இதன் எதிரொலிதான், இந்தப் பங்குகளின் விலை குறைவு என்கிறார்கள் அனலிஸ்ட்கள்'' என்று சொன்னார்.

சுடச்சுட டீ தந்தபடி ''தமிழக பட்ஜெட் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?'' என்றோம்.

''புது வரி, வரி உயர்வு எதுவும் இல்லை என்பதெல்லாம் சாதாரண மக்களுக்கான செய்தி. ஆனால், மின் பற்றாக்குறையைப் போக்க பெரிய திட்டம் எதுவும் இல்லை. தொழில் வளர்ச்சிக்கும் தீர்க்கமான திட்டம் இல்லை. அரசாங்கத்துக்கு இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்பதற்கான விளக்கமும் இல்லை. என்றாலும், ரியல் எஸ்டேட்காரர்கள் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். கைடு லைன் மதிப்பை உயர்த்தி தங்களது தொழிலுக்கு உலை வைத்துவிடுவார்களோ என்று பயந்துகொண்டிருந்தார்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள். கடந்த வருடம் எக்கச்சக்கமாக உயர்த்தியதால் இந்த ஆண்டு வேண்டாம் என்று அரசாங்கம் நினைத்ததே சந்தோஷம்தான்!''

''ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக குறைந்திருக்கிறதே..?'' என்றோம்.

ஷேர்லக் - கணக்குப் போட்டு இறக்கும் கரடிகள்!

''இதன் தரக்குறியீட்டை கேர் நிறுவனம் குறைத்துள்ளதால் அந்தப் பங்கின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.  விலை இறக்கம் கொஞ்சநஞ்சமல்ல, 2013-ல் மட்டுமே 50 சதவிகிதத்துக்கு மேல் இறங்கி இருக்கிறது'' என்றார்.

''டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் சுமார் 7 சதவிகிதம் வீழ்ச்சிக்கண்டிருக்கிறதே, என்ன காரணம்?'' என்று வினவினோம்.

''சீன அரசு, புதிய எரிபொருள் செயல்பாட்டு விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இதனால் டாடா மோட்டார்ஸ்-ன் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மிகவும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ்-ன் விற்பனையில் சீனாவின் பங்களிப்பு சுமார் 20 சதவிகிதமாக உள்ளது. எனவே,  அதன் நிகர லாபம் குறையும் என்கிற பயத்தில் பங்குகளை பல முதலீட்டாளர்கள் விற்றுத் தள்ளவே பங்கின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது'' என்றார்.

''வேறு என்ன விசேஷம்?'' என்றோம்.

''இரண்டு முக்கியத் தகவல்கள். பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்கு மூலதனத்தில் பொது மக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் 25 சதவிகிதமாக இருக்கவேண்டும் என்கிற செபியின் விதிமுறையை சுமார் 190 நிறுவனங்கள் இன்னும் நிறைவு செய்யாமல் இருக்கின்றன. இதில் 14 பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும். செபியின் விதிமுறையை வரும் ஜூன் 30-க்குள் நிறைவேற்றவேண்டிய நிலையில் இந்நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த வகையில் கூடிய விரைவில் பல ஐ.பி.ஓ மற்றும் ஆஃபர் சேல்களை எதிர்பார்க்கலாம்.

முகவரி மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் பலருக்கு நிறுவனங்கள் அனுப்பும் டிவிடெண்ட் வாரண்ட்கள் கைக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் பல முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை சரிசெய்யும் பொருட்டு, முதலீட்டாளர்களுக்குத் தரவேண்டிய பணம் அனைத்தையும் எலெக்ட்ரானிக் முறையில் அனுப்பும்படி செபி கேட்டுக் கொண்டுள்ளது'' என்றார்.

''தயாரிப்புத் துறை நிறுவனமான ஓபல் லக்ஸரி டைம் புராடக்ட்ஸ் துணிச்சலாக இந்த நேரத்தில் ஐ.பி.ஓ. வந்திருக்கிறதே..?'' என்றோம்.

''சந்தை இறங்கும் இந்த சமயத்தில் ஐ.பி.ஓ. வர உண்மையிலேயே துணிச்சல்வேண்டும். இந்தப் பங்கின் விலைப்பட்டை ரூ.130-135. மார்ச் 25 முதல் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் குறித்த ஐ.பி.ஓ கிரேடு 4. அதாவது, வலிமையான அடிப்படையைக்கொண்டது இந்த நிறுவனம் என அர்த்தம். என்றாலும், இதில் அதிகப் பணத்தை முதலீடு செய்யவேண்டாம் என்பதே என் அட்வைஸ்'' என்றவர், புறப்படும் முன்பு ஓர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னார்.

''சந்தை போறபோக்கைப் பார்த்தால் எனக்கு கவலையாக இருக்கிறது. மும்பையில் உள்ள சில நண்பர்கள் சொல்லும் தகவல்களைப் பார்த்தால், நம் நாட்டின் நிலைமையே சரியில்லாததுபோல் இருக்கிறது. ஏற்கெனவே அரசியல் ஸ்திரமில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு சில கரடிகள் சந்தையில் புகுந்து விளையாடுகின்றன.  சில பெருந்தலைகள் அவர்களுக்குள் ஒரு கார்டெலை அமைத்துக்கொண்டு பல பங்குகளில் ஷார்ட் போகிறார்கள். சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் கைவைத்தால் அரசாங்கத்துக்குத் தெரிந்துவிடும் என்பதைத் தெரிந்துகொண்ட இவர்கள் மிட் கேப் பங்குகளில் பதுங்கி விளையாடுகிறார்கள்.

அதேபோல, எம்.என்.சி. பங்குகளிலும் இந்த வேலையைக் காண்பிக்கிறார்கள். இதில் புரமோட்டர்களின் ஷேர் அதிகம். அடுத்த சில மாதங்களில் இதனை குறைக்கவேண்டும் என செபி தீர்மானமாகச் சொல்லிவிட்டதால், தற்போதைய விலைக்கு விற்று பின்பு குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம் என்று கணக்குப் போட்டு காயை நகர்த்துகிறார்களாம் இந்தக் கரடிகள். இதனால் பல எம்.என்.சி. பங்குகள் 30 சதவிகிதத்துக்கு மேல் குறைந்திருக்கிறது. அரசாங்கம் தலையிடாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். வாசகர்கள் கொஞ்சம் சுதாரிப்பாக இருப்பது நல்லது'' என்றவர், ''இந்த வாரம் ஷேர் டிப்ஸ் உண்டு'' என்று சொன்னவர், பங்குகளின் பெயரை சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

சந்தை பெரிய அளவில் இறங்கினால் மட்டும் பின்வரும் பங்குகளை வாங்குங்கள்!

டி.சி.எஸ்., நாட்கோ பார்மா (NATCOPHARMA) ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism