Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

Published:Updated:

 வர்த்தகம்

மிளகு!  (Pepper)

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்ற வியாழன் அன்று வரத்து குறைவாக இருந்ததால் மிளகு விலை ஃப்யூச்சர்ஸ் சந்தையில் சற்று ஏற்றம் கண்டது. 2012-ம் ஆண்டில் சர்வதேச அளவில் மிளகு உற்பத்தி 3,35,000 டன்னாக இருந்ததாகவும், இது 2011-ம் ஆண்டைவிட 6 சதவிகிதம் அதிகம் எனவும் இன்டர்நேஷனல் பெப்பர் கம்யூனிட்டி தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியா மற்றும் இலங்கையில் மிளகு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. எனினும், பிரேசில் மற்றும் இந்தியாவில் குறைந்துள்ளது. 2012-ல் இந்தியா 16,300 டன் மிளகை இறக்குமதி செய்துள்ளது. இதுவே 2011-ம் ஆண்டில் 13,500 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இறக்குமதி அதிகரிக்கக் காரணம், இந்தியாவில் 2012-ல் உற்பத்தி சுமார் 5,000 டன் குறைந்து 43,000 டன்னாக இருக்கிறது. உற்பத்தி குறைந்துள்ளதால் வரும் வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

ஜீரகம்! (Jeera)

உள்நாட்டு டிமாண்ட் குறைந்ததும், வரத்து அதிகரித்ததும் சென்ற வார ஆரம்பத்தில் ஜீரகத்தின் விலை குறைந்து வர்த்தகமானது. எனினும், மொத்த வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்கள் நிறைய வந்ததால் விலை சற்று அதிகரித்தது. ஊஞ்ஹா சந்தைக்குச் சென்ற வாரத்தில் 35,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) வந்தது. தரமான ஜீரகம் நூறு கிலோ 13,100 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கடந்த ஒரு வாரகாலமாகப் புதிய ஜீரகத்தின் வரத்து அதிகமாக இருந்ததாகத் தகவல்கள் வெளியானது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு ஜீரகத்தின் வரத்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வரத்து அதிகமாக இருப்பதால் வரும் வாரத்தில் ஜீரகத்தின் விலை குறைந்தாலும், சர்வதேச டிமாண்ட் அதிகமானால் மட்டுமே விலை குறைவது தடுக்கப்படும்.

அக்ரி கமாடிட்டி !

மஞ்சள்! (Turmeric)

சென்ற வாரத்தில் டிமாண்ட் அதிகமாக இருந்த காரணத்தால் மஞ்சளின் விலை அதிகரித்தது. சென்ற வியாழக்கிழமை ஈரோடு சந்தைக்கு 6,500 பைகளும், நிஜாமாபாத் சந்தைக்கு 12,000 பைகளும் வந்தன. நூறு கிலோ விரலி மஞ்சள் ஸ்பாட் விலை 6,600-7,800 ரூபாய்க்கு வர்த்தகமானது. 2013-2014-ம் நிதியாண்டில் மஹாராஷ்ட்ராவில் மஞ்சள் மீதான வாட் வரியை விலக்கியுள்ளது.

சென்ற வருடத்தில் வரலாறு காணாத அளவுக்கு மஞ்சள் உற்பத்தி இருந்தது. இது, இந்த வருடம் 50-60 வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டிலும் உற்பத்திக் குறைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிமாண்ட் அதிகரிப்பு மற்றும் உற்பத்திக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் மஞ்சளின் விலை வரும் வாரத்தில் அதிகரித்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

ஏலக்காய்! (Cardamom)

சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை அதிகரித்து வர்த்தகமானது. ஷார்ட் கவரிங் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஏலக்காய் வாங்கியதால் இந்த விலை அதிகரித்தது. ஒரு கிலோ ஏலக்காய் சராசரி விலையாக 642 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 1,085 ரூபாய்க்கும் விலை போனது. சென்ற வாரத்தில் தினவரத்தாக 73 டன் ஏலக்காய் இருந்தது.

உற்பத்திக் குறைந்துள்ள காரணத்தால் நீண்டகாலத்தில் பார்க்கும்போது ஏலக்காய் விலை அதிகரிக்கும். மார்ச் மாதத்துடன் முடியும் இந்த ஆண்டில் இந்தியாவின் ஏலக்காய் உற்பத்தி 30 சதவிகிதம் வரை குறையும். கேரளாவில் இந்த வருடம் சரியான சீதோஷ்ண நிலை இல்லாதக் காரணத்தால் உற்பத்திக் குறைந்துள்ளது. வரும் வாரத்தில் ஏலக்காய் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

மிளகாய்! (Chilli)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிமாண்ட் குறைந்த காரணத்தால் சென்ற வாரத்தில் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமானது. மேலும், புதிய வரத்து வரும் வாரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வரும் வாரத்தில் மிளகாய்க்கான டிமாண்ட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி !

ஆசியா கண்டத்தில் மிகப் பெரிய மிளகாய் சந்தையான குண்டூர் சந்தைக்கு மே மாதத்தில் கோடைவிடுமுறை விடப்பட உள்ளது. இதனால் இம்மாத இறுதியிலும், வரும் வாரத்திலும் மிளகாயை வாங்கி வர்த்தகர்கள் கையிருப்பில் வைத்துக்கொள்வார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. டிமாண்ட் தற்போது குறைவாக இருப்பதால் வரும் வாரத்தில் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

சோயா ஆயில்!(Soya oil)

டிமாண்ட் அதிகரிப்பு மற்றும் சப்ளை குறைவு உள்ளிட்ட காரணங்களால் சென்ற வாரத்தில் சோயா ஆயில் விலை அதிகரித்தது. பாமாயிலின் விலை அதிகரிப்பும் சோயா ஆயில் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது. மலேசிய சந்தைகளில் பாமாயிலின் விலை அதிகரித்ததும் சோயா ஆயிலின் விலையும் அதிகரித்தது. என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஏப்ரல் கான்ட்ராக்ட் 679 என்ற விலையைத் தாண்டும் என சென்ற வாரத்தில் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், இன்னும் இந்த விலையைத் தாண்டவில்லை. வரும் வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

- பானுமதி அருணாசலம்.

 இயற்கை ரப்பர் !

இந்தியாவில் இயற்கை ரப்பர் அதிகமாக விளையும் கேரள மாநிலத்தில் உற்பத்தி குறைந்தது மற்றும் ரப்பர் டிமாண்ட் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதன் விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு என்.எம்.சி.இ. ஏப்ரல் மாத கான்ட்ராக்ட் விலை அதிகரித்தது. அடிப்படைக் காரணிகள் சாதகமாக இருந்ததும் சப்ளை குறைவாக வருவதும் விலை உயர்விற்கு காரணமாக அமைந்தது.

வார ஆரம்பத்தில் விலை அதிகரித்து வர்த்தகமான ரப்பரின் விலை பிறகு ஆட்டோமொபைல் விற்பனை மற்றும் தேவை குறைந்த காரணத்தால் வார இறுதியில் விலை குறைந்தது. மேலும், சைப்ரஸ் பொருளாதாரச் சிக்கல் விலையில் பிரதிபலித்தது. அப்போலோ, எம்.ஆர்.எஃப். போன்ற முன்னணி டயர் நிறுவனங்கள் தங்களது சில தயாரிப்புகளின் விலையை 1-5 சதவிகிதம் குறைத்துள்ளன.

வரும் ஆண்டுகளில் டயருக்கான டிமாண்ட் அதிகமாக இருக்குமென இன்டர்நேஷல் ரப்பர் ஸ்டெடி குரூப் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், டிமாண்ட் அதிகமாகவும், உற்பத்தி குறைவாகவும் இருப்பதால் ரப்பரின் விலை வரும் வாரத்தில் அதிகரித்து வர்த்தகமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism