Published:Updated:

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

பானுமதி அருணாசலம்.

Published:Updated:

வர்த்தகம்

 தங்கம் !

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வாரம் தங்கத்தின் வர்த்தகம் குறித்து விளக்கமாகச் சொல்கிறார் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் கமாடிட்டி கிளஸ்டர் ஹெட் சிவக்குமார்.

''கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்தது. சைப்ரஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மற்ற முதலீடுகளைத் தவிர்த்து, தங்கத்தில்  முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தொடங்கியுள்ளனர்.

சைப்ரஸில் உள்ள வங்கிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு பெயில்அவுட் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வரும் திங்கட்கிழமை வரை கால நிர்ணயம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 10 பில்லியன் யூரோவை டெபாசிட் செய்யவேண்டிய நிலையில் உள்ளது சைப்ரஸ். இதனை சமாளிக்கும் விதமாக அந்த நாடு ஐரோப்பாவின் உதவியை நாடியுள்ளது. இதனால் ஐரோப்பா சுமார் 5.8 பில்லியன் யூரோ வரை தர ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், வரும் திங்கட்கிழமைதான் உறுதியான தகவல்கள் தெரியவரும்.

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )
கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

சைப்ரஸ் பிரச்னை காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கே வாய்ப்புகள் அதிகம். தவிர, 2012-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வரும் காலாண்டில் 1,000 டன் வரை தங்கத்தின் பயன்பாடு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.

ஆக, வரும் வாரங்களில் தங்கத்தின் விலை அதிகரித்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகமாகத் தென்படுகிறது'' என்றார்.

கச்சா எண்ணெய் !

சென்ற வியாழக்கிழமை அன்று சுமார் ஒரு சதவிகிதம் வரை விலை குறைந்தது. சைப்ரஸில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல் மற்றும் ஐரோப்பாவின் பெட்ரோலியத் தேவை குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை இறக்கம் கண்டது.

சீனாவின் கச்சா எண்ணெய் இன்வென்ட்ரி பிப்ரவரி மாதத்தில் 2.9 சதவிகிதம் முந்தைய மாதத்தைவிட குறைந்துள்ளது. தெற்கு சூடானிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்கும் என தெரிகிறது. மேலும், ஈரான் நாட்டிலிருந்து சீனாவிற்கு இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் குறைந்தது.

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

இது பிப்ரவரி மாதத்தில் மாறியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஈரானிலிருந்து சீனாவிற்கு 2.0 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதியாகியுள்ளது. ஒரு நாளைக்கு 5,21,330 பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகிறது. இதுவே ஜனவரி மாதத்தில் 3,09,906 பேரல் இறக்குமதி ஆனது குறிப்பிடத்தக்கது. சைப்ரஸ் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரச் சிக்கல் காரணமாக கச்சா எண்ணெய் விலை வரும் வாரத்தில் குறைந்தே வர்த்தகமாகும்.

அடிப்படை உலோகங்கள் !

யூரோக்கு எதிராக டாலரின் மதிப்பு அதிகரித்தது மற்றும் சைப்ரஸில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அடிப்படை உலோகங்களின் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது.

சர்வதேச அளவில் ரீஃபைண்டு காப்பர் பற்றாக்குறை 2011-ம் ஆண்டில் 2,16,000 டன்னாக இருந்தது. இதிலிருந்து தற்போது அதிகரித்து 3,40,000 டன்னாக உள்ளது என இன்டர்நேஷனல் காப்பர் ஸ்டெடி குரூப் தெரிவித்துள்ளது.

ரீஃபைண்ட் காப்பர் பயன்பாடு சீனாவில் பிப்ரவரி மாதத்தில் 2.9 சதவிகிதம் குறைந்துள்ளது. ஏற்கெனவே சீனாவிடம் கையிருப்பு அதிகமாக இருப்பதும், இறக்குமதி குறைந்ததுமே இந்த 21 மாத குறைவிற்கு காரணம். எனவே, குறுகியகாலத்தில் காப்பரின் விலையில் சிறிது ஏற்றம் இருக்கும்.

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

நிக்கல் உற்பத்தி உலகளவில் மிக அதிகமாக இருக்கிறது. டிமாண்டைத் தாண்டி சப்ளை அதிகமாக இருப்பதாக இன்டர்நேஷனல் நிக்கல் ஸ்டெடி தெரிவித்துள்ளது.

சர்வதேச நிலவரங்களை வைத்து பார்க்கும் போது, சீனாவின் டிமாண்ட் குறைவு மற்றும் அதிக உற்பத்தி காரணங்களால் அடிப்படை உலோகங்கள் விலை வரும் வாரத்தில் குறைந்தே வர்த்தகமாகும். இதில் அலுமினியத்தை மட்டும் விலை வரும்போது விற்றுவிடுவது நல்லது.

இயற்கை எரிவாயு !

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )

எதிர்பார்த்ததைவிட இயற்கை எரிவாயுவின் இன்வென்ட்ரி அதிகரித்ததால் சென்ற வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. குளிர் வீசும் பகுதிகளில் குளிர் குறைந்துவிட்டதால் இயற்கை எரிவாயுக்கான டிமாண்ட் குறைந்து அமெரிக்கச் சந்தைகளிலுமே இயற்கை எரிவாயுவின் விலை சென்ற வாரத்தில் குறைந்தது.  புதிய உச்சத்தைத் தொட்ட இன்வென்ட்ரி மற்றும் டிமாண்ட் குறைவு உள்ளிட்ட காரணங்களால் வரும் வாரத்திலும் இயற்கை எரிவாயு விலை குறைந்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டி (மெட்டல் & ஆயில் )
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism