ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

பானுமதி அருணாசலம்

##~##

இந்த வாரம் அடிப்படை உலோகங்கள் குறித்து வெல்த் டெரிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணன் கூறுகிறார்.

''கடந்த வாரத்தில் அனைத்து அடிப்படை உலோகங்களின் விலையும் கடுமையாகக் குறைந்தது. 460 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்த காப்பர், 414 ரூபாயாக சென்ற வாரத்தில் குறைந்தது. 960 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்த நிக்கல், தற்போது 914 என்ற நிலையிலும், லெட் 135 விலையிலிருந்து கீழே இறங்கி 114 ரூபாய்க்கும், அலுமினியம் 125 ரூபாயிலிருந்து 103 ரூபாய்க்கும் வந்தது.

இந்த விலை இறக்கம் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாகும். இதற்கு முக்கிய காரணம், சைப்ரஸ் பிரச்னைதான். சைப்ரஸ், பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிப்பதால் ஐரோப்பா கடன் தந்து உதவியுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான  யூரோவின் மதிப்பு குறைந்தது. இதன்காரணமாக டாலர் இண்டெக்ஸ் 83.44 வரை வந்துள்ளது.

பொதுவாக, டாலரின் மதிப்பு அதிகரித்தால் கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்வது குறையும். இதனால் முக்கிய கமாடிட்டிகளின் விலை பாதிப்படையும். டாலரின் மதிப்பு அதிகரித்ததால் அமெரிக்க பங்குச் சந்தை கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை சென்ற வாரத்தில் சந்தித்தது. மேலும், அடிப்படை உலோகங்களை அதிகமாகப் பயன்படுத்தும் சீனாவில் பொருளாதாரப் புள்ளி விவரங்கள் தொடர்ந்து குறைந்து வருவதால் அங்கு அடிப்படை உலோகங்களுக்கான தேவையும் குறைந்துள்ளது.

எனினும், உலகளவில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் விலை மீண்டும் மேலே எழ வாய்ப்பிருக்கிறது. அடிப்படை காரணிகள் சரியில்லாமல் இருந்தாலும் டெக்னிக்கல்படி பார்த்தால், அடிப்படை உலோகம் நன்றாக உள்ளது. அதனால் இந்த விலை இறக்கத்தை வாங்கும் நேரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். காப்பரை 400, 414 ரூபாய் என்ற விலையில் வாங்கலாம். இலக்கு விலை 424-430 ரூபாய். ஸ்டாப்லாஸ் 398 ரூபாய்.

கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)

நிக்கல் தற்போது 914 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 900-920 ரூபாய் என்ற விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 883 ரூபாயாகவும், இலக்கு விலையாக 940 மற்றும் 963 ரூபாயாக கொள்ளவும். லெட் தற்போதிருக்கும் விலையில் வாங்கலாம். இலக்கு விலை 120 ரூபாய். இந்த விலை நீண்டகால நோக்கில் முதலீட்டு அடிப்படையில் முதலீட்டாளர்கள் வாங்கலாம். வர்த்தகர்கள் பொறுமையாக இருக்கவேண்டிய நேரமிது'' என்றார்.

தங்கம்!

கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)

ஈஸ்டர் பண்டிகைக்காக தங்களது முதலீடுகளை விற்றனர் முதலீட்டாளர்கள். எனினும், சைப்ரஸ் நாட்டு பொருளாதாரச் சிக்கல் காரணமாக யூரோவின் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடு என முதலீட்டாளர்கள் மீண்டும் எண்ணத் துவங்கிவிட்டனர். மேலும், அமெரிக்க ஃபெடரல் வங்கி இந்த வருடம் இறுதி வரை பாண்ட் பையிங் திட்டத்தைத் தொடரும் எனவும் கூறப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும். சென்ற வாரத்தில் எம்.சி.எக்ஸ். சந்தையில் பத்து கிராம் தங்கம் வார முடிவில் 29,632 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் வாரத்திலும் தங்கத்தின் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

கச்சா எண்ணெய்!

கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)

அமெரிக்காவில் பொருளாதாரம் சற்று முன்னேறி வருவதால், கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மானிட்டரி பாலிசிகள் குறித்த முடிவுகள் கச்சா எண்ணெய் விலையில் பிரதிபலிப்பை உண்டாக்கியது. 3.26 மில்லியன் பேரல் இன்வென்டரி கச்சா எண்ணெய் இருப்பதாக எனர்ஜி  இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. பொதுவாக உலகப் பொருளாதாரச் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கும்போது வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

இயற்கை எரிவாயு!

கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)

சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயு இன்வென்டரி குறைந்திருப்பதும், லேசான குளிர் இருப்பதும் இயற்கை எரிவாயு விலையை சற்று அதிகரித்து வர்த்தகமாக காரணமாக அமைந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் சற்று லேசான குளிர் வீசுவதால் இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இந்த குளிர் இருக்குமென வானிலை துறை தெரிவிக்கிறது. இயற்கை எரிவாயுக்கான டிமாண்ட் அதிகரித்திருப்பதால் வரும் வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் காணப்படுகிறது.

கமாடிட்டி -  (மெட்டல் - ஆயில்)