மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..?

எஸ்.சுமன்

நாணயம் ஜாப்

##~##

கடந்த இதழில் 'குறையும் கேம்பஸ் பிளேஸ்மென்ட் - என்ன செய்ய வேண்டும் மாணவர்கள்?’ கட்டுரையில் ஆன்லைன் மூலம் வேலை தேடுவது ஒரு சிறந்த வழி என்று சொல்லியிருந்தோம். ஆனால், ஆன்லைனில் வேலை தேடும்போதும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதிலிருந்து தப்பிக்க எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பார்க்கும் முன்பு, திண்டுக்கல்லைsச் சேர்ந்த மோகன்குமாரின் அனுபவத்தைப் பாருங்கள்.

சென்ற வருடம்தான் பி.இ முடித்த சூட்டோடு தனது பயோ-டேட்டாவை ஆன்லைன் வேலை வாய்ப்புத் தளங்களில் பதிவு செய்தார் மோகன்குமார். அவர் எதிர்பார்த்தது போலவே மூன்றாவது நாளே பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் சார்பில் நேர்முக அழைப்பு வர உற்சாகமாகி, அந்த இ மெயிலை திறந்தார்.

அட்டகாசமான ஆங்கிலத்தில் ஆரம்பித்திருந்த அந்தக் கடிதம் அதன் இறுதியில் பல லிங்குகளுடன் முடிய, அந்த லிங்குகளை தட்டியபோது மோகனின் வங்கி விவரங்கள் விசாரிக்கப்பட்டன. வேலை கிடைக்கப்போகிற குதூகலத்தில் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னார்.

பல நாளாகியும் பதில் எதுவும் வரவில்லை. ஆனால், அவரது வங்கிக் கணக்கு அடுத்த சில தினங்களில் ஆன்லைன் பரிமாற்றம் மூலமாக துடைத்து எடுக்கப்பட்டது. வேலை ரெடி என்று இனிப்பு தூவிய அந்த இ மெயிலை நம்பி அதன் நாசகார லிங்குகளில் சென்று தனது வங்கி விவரங்களை தந்ததில், கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்திருந்த பணமெல்லாம் காணாமல் போயிருந்தது.  

ஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..?

மோகன் செய்த தவறு, ஆன்லைனில் கண்ணில்பட்ட வேலை வாய்ப்பு தளங்களில் எல்லாம் தனது ரெஸ்யூமே-யை பதிந்ததுதான். நவீன இணைய உலகில் வீட்டிலிருந்தபடியே வேலை தேட உதவும் ஆன்லைன் வேலை வாய்ப்புத் தளங்களில் மோசடி நபர்கள் புகுந்து விடவே, மூலைக்கு மூலை

ஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..?

அப்பாவி இளைஞர்கள் ஏமாந்து போகிறார்கள். இந்த ஆன்லைன் வேலை வாய்ப்புத் தளங்களை முன்னிறுத்தி இன்னும் என்னவெல்லாம் மோசடிகள் அரங்கேறுகின்றன? அவற்றில் இருந்து வேலை தேடுவோர் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? இதோ, எச்சரிக்கை குறிப்புகளை வழங்குகிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த 'ஃபிக்ஸ்நிக்ஸ்’

(FixNix) தகவல் பாதுகாப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.சண்முகவேல்.

'இத்தனை நாளும் தினசரிகளில் 'வேலை தயார்’ என்று விளம்பரம் செய்து ஏமாற்றிவந்த ஃபோர்ஜரி நிறுவனங்கள் இன்று ஆன்லைன் மூலமாகவும் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி வருகின்றன. இந்த மோசடி நிறுவனங்கள் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் பலவிதம். நாம் பதியும் இ மெயில் ஐடி, போன் நம்பர் போன்றவற்றை வர்த்தக விளம்பர மார்க்கெட்டுகளில் விற்று காசு பார்ப்பது இந்நிறுவனங்கள் செய்யும் சாதாரண திருட்டு. இதனால் கண்டகண்ட எஸ்.எம்.எஸ்.கள், டெலிகால்கள் நமக்கு இம்சை தரும்.

ஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..?

அடுத்தபடியாக, 'சத்தியமா வேலை தருகிறோம்; கூடவே வேலைக்கான ஆயத்தமாக, அதற்கான பயிற்சியையும் தருகிறோம்; பயிற்சிக் கட்டணத்தை எளிய தவணைகளில் கட்டுங்கள்’ என்று சில நிறுவனங்கள் மெயில் அனுப்பும். உண்மையில் இவர்கள் வழங்குவது வேலை வாய்ப்பல்ல; பெயருக்கு பயிற்சி மட்டுமே. இன்னும் சிலர், பணத்தை வாங்கிக்கொண்டு சிரத்தையாக பயிற்சி தந்து வேலையும் தருவார்கள். ஆனால், கடினமான வேலை; சொற்ப சம்பளம் என்பதாக இருக்கும். இவர்கள் உழைப்புத் திருடர்கள். சுதாரித்து விலகுவதற்குள் நம் இளவயதின் ஒன்றிரண்டு வருடங்களை இழந்திருப்போம்.  

இவர்களுக்கு அடுத்து, கோரமாக நம்மை நம்பவைத்து கழுத்தறுப்பவர்கள்தான், வங்கிக் கணக்கில் வாய் வைப்பவர்கள். நாட்டில் ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு 'ஃபிஷ்ஷிங்’ இ மெயில்கள் மூலமாக மோசடி செய்வார்கள். இதிலும் இரண்டுவகை உண்டு. முதலாமவர்கள், சொந்தமாக பல ஆன்லைன் வேலை வாய்ப்புத் தளங்களை வைத்திருப்பார்கள். சுடச்சுட படிப்பை முடித்த

ஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..?

இளைஞர்கள்தான் இவர்களது இலக்கு. ஆர்வக்கோளாறில் இவர்களில் பெரும்பாலானோர் இணையத்தில் தென்படும் அனைத்து ஆன்லைன் வேலை வாய்ப்புத் தளங்களிலும் தங்கள் பயோ-டேட்டாவை பதிந்து தாங்களாகவே தூண்டில் புழுவாகச் சிக்குவார்கள்.

இன்னும் சிலருக்கு முன்னணி வேலை வாய்ப்புத் தளங்களின் பெயரில் இ மெயில் வரும். அதைத் திறந்தால், உங்கள் விவரங்களை இன்னுமொருமுறை தெளிவாகப் பதிவு செய்யுங்கள் என்ற கோரிக்கையோடு ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அந்த லிங்க் அழைத்து செல்லும் தளத்தில் முன்னணி வேலை வாய்ப்பு தளம் நமக்கு அளித்திருக்கும் யூசர் ஐடி, பாஸ்வேர்டுகளை பதிவோம். மோசடியாளர்கள் அதைக்கொண்டு நம் கணக்கில் புகுந்து நமது ரெஸ்யூமே ஜாதகத்தைக் கைப்பற்றுவார்கள். அடுத்த நாளில் இருந்து அதிரிபுதிரி மோசடி இ மெயில்கள் கதவைத் தட்ட ஆரம்பிக்கும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்றில் சிக்கி பணத்தையும் நம்பிக்கையையும் இழந்துவிடுவோம்' என்று கிலியூட்டிய சண்முகவேல், இந்த ஒயிட் காலர் கிரிமினல்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும் சொன்னார்.

'முதலில், பயோ-டேட்டாவில் குறிப்பிடுவதற்கு என தனியாக ஒரு இ மெயிலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.  வேலை வாய்ப்பு தொடர்பாக எந்த இ மெயில் அல்லது கடிதம் வந்தாலும் அவற்றில் தரப்பட்டிருக்கும் புதிய வெப்சைட்டுகள் அல்லது லிங்குகளை நாடாமல், வேலை தருவதாகக் குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்திற்கே சென்று இ மெயில் அல்லது தொலைபேசி மூலம் உங்களுக்கு வந்த தகவலின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து பார்த்துவிடுவது அவசியம்.

உங்களை வேலைக்கு அழைப்பது புதிய நிறுவனமாக இருப்பின் அதன் பின்னணியை ஆராயுங்கள். மத்திய அரசின் கம்பெனி விவகாரத் துறையின் இணையதளத்திற்குச் சென்று குறிப்பிட்ட நிறுவனம் உண்மையாகவே தனது பெயரை பதிவு செய்திருக்கிறதா என்பதோடு, அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்களை உறுதி செய்துகொள்ளுங்கள். எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அதில் வேலை பார்த்தவர்கள் அல்லது வேலை பார்ப்பவர்களை நேரில் அல்லது தொலைபேசியில் அணுகி விசாரித்துவிடுவது இன்னொரு உபாயம்.

ஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..?

வேலை தருவதாகச் சொல்லும் எந்த ஒரு தொலைபேசி அழைப்பாக இருந்தாலும் உள்ளூர சந்தேகக் கண்ணோடு விசாரியுங்கள். 'டெபாசிட் கட்டுங்கள்’ என்றால், பல மடங்கு எச்சரிக்கை வேண்டும். அதேபோல வேலை தருவதாக அழைக்கும் எவரும் எடுத்த எடுப்பிலேயே வங்கி விவரங்களைக் கேட்கமாட்டார்கள். முன்கூட்டியே இ மெயில் மூலமாக அந்த விவரங்களை கிண்டுகிறார்கள் என்றால் உஷாராகிவிடவேண்டும்.

ஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..?

இந்த இ மெயில் 'ஃபிஷ்ஷிங்’ வகையறாவில் தேன் தடவிய மோசடியாக போனில் அட்சரமாக ஏமாற்றும் 'விஷ்ஷிங்’ என்பதும் உண்டு. வேலை ரெடி என தொலைபேசியில் அழைப்பவர்கள், 'சம்பளப் பட்டுவாடா தொடர்பாக உங்கள் வங்கிக்கே லிங்க் செய்கிறோம். சில விவரங்களை உறுதிபடுத்துங்கள்’ என்று இணைப்பை மடை மாற்றிவிடுவார்கள். அவர்கள் தரும் இணைப்பில் நமது வங்கி போலவே ஐ.வி.ஆர்.எஸ். குரல் நம்மை பக்காவாக வழிகாட்டி அனைத்து விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும்'' என்றவர் முத்தாய்ப்பாகச் சொன்ன விஷயம் படுஅதிர்ச்சி ரகம்.

''பெரும்பாலும் இந்த மோசடியாளர்களின் இலக்கு புறநர் மற்றும் இரண்டாம் மூன்றாம் கட்ட மக்கள்தான். பெருநகரங்களைச் சார்ந்தவர்கள் சற்று விழிப்புடன் இருப்பார்கள். ஒப்பீட்டளவில் மற்றவர்கள் விவரம் குறைந்தவர்களாக இருப்பார்கள் என்பதுதான் மோசடிக்காரர்களின் கணிப்பு' என்று முடித்தார் சண்முகவேல்.            

அப்பாவிகளை குறிவைத்துத் தாக்கும் இந்த நாசகார வேலை வாய்ப்புத்தளங்களிடமிருந்து உஷாராக இருப்போம்!