ராகுல் காந்தி பிரதமர் நாற்காலி யில் உட்காருவதற்கு தகுதியானவரா, இல்லையா என தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்க, சத்தமில்லாமல் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''அரசியல் ஜமாவா? நடக்கட்டும், நடக்கட்டும். நான் கொண்டுவந்திருக்கும் சந்தை செய்திகளை முதலில் சொல்லி விடுகிறேன்'' என்றவரிடம், கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

''பட்டியலிடும் விதிமுறைகளை சரிவர பின்பற்றாத 9 நிறுவன பங்குகளின் வர்த்தகத்தை பி.எஸ்.இ. நிறுத்தி உள்ளதே?'' என்றோம்.

''ஜி.சி.பி. சர்வீசஸ், இந்தோ பசிபிக் சாஃப்ட்வேர், ஐ.ஓ.எல். நெட்காம், ஜெய் மாதா கிளாஸ், மஹான் ஃபுட்ஸ், மிட்ஃபீல்ட் இண்டஸ்ட்ரிஸ், பிரியதர்ஷினி ஷிப்பிங் மில்ஸ், ரீஜென்ஸி டிரஸ்ட், சுராஜ் இண்டஸ்ட்ரிஸ் ஆகியவைதான் அந்த ஒன்பது பங்குகள். இந்தப் பங்குகளை தப்பித் தவறி யாராவது வாங்கி வைத்திருந்தால், உடனடியாக விற்க முடியாது. எனினும், எதிர்காலத்தில் வர்த்தகத் தடையை நீக்கியவுடன் விற்றுவிட்டு, வெளியே வந்துவிடுவது நல்லது'' என்றார்.

அண்மையில் மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும்போது செபி அமைப்பின் தலைவர் யூ.கே.சின்ஹா, ''ஒரு கம்பெனி கடந்த சில மாதங்களில் முதலீட்டாளர்களுக்கு 20,000 கோடி ரூபாயைத் திருப்பி அளித்துள்ளதாக கூறுகிறது. இதில் 90 சதவிகிதத் தொகையை ரொக்கப் பணமாகத் தந்துள்ளதாம். இது எந்த அளவுக்கு நம்பத்தக்கது என்றும், இந்த ரொக்கப் பணத்தைத் தருவதன் மூலம் கறுப்புப் பணம் அதிகமாகவே வழி வகுக்கும்'' என்று வருத்தப்பட்டார்.

அந்த கம்பெனி சஹாரா என்பதை நாம் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில் சின்ஹாவுக்கு சஹாரா நிறுவனம் பதிலடி தருகிற மாதிரி அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய நாட்டில் 20,000 ரூபாய்க்கு உட்பட்ட தொகையை ரொக்கமாகக் கொடுக்கலாம் என்று உள்ளது. அதன்படிதான் தந்திருக்கிறோம். இதில் சட்ட விரோதம் எதுவும் இல்லை'' என்று சொல்லி இருக்கிறது. இந்த சட்டப்போர் சீக்கிரம் முடிவுக்கு வந்தால் சரிதான்!'' என்று பெருமூச்சுவிட்டார் ஷேர்லக்.

''ராஜீவ் காந்தி ஈக்விட்டி ஸ்கீமில் பயங்கரக் குழப்பம் நிலவுகிறதாமே?'' என்றோம்.

''இந்தத் திட்டத்தால் முதலீட்டாளர் களுக்கு லாபமில்லை என நீங்கள் அடிக்கடி எழுதியது இப்போது நிரூபணமாகிவிட்டது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் திரட்டினால், அந்த ஃபண்ட் செயல்பாட்டுக்கு வரும். அதன்படி, மொத்தம் என்.எஃப்.ஓ. வந்த ஆறு ஃபண்டுகளில் ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்ட் மட்டும் 11.76 கோடி ரூபாய் திரட்டி இருக்கிறது. மீதி கம்பெனிகள் எல்லாம் சேர்ந்துதான்

15 கோடி ரூபாய் திரட்டி இருக்கின்றன. இந்த 26 கோடி ரூபாய்க்காக இவ்வளவு உதார் விட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது'' என்று சலித்துக்கொண்டார் ஷேர்லக்.

''கோவை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு மூடுவிழா நடத்தப் போகிறார்களாமே?'' என்றோம்.

''கோவை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், அதை முறையாக மூடுவதற்கு இப்போதுதான் செபி அனுமதி தந்திருக்கிறது. ஒரு எக்ஸ்சேஞ்சை மூடும்போது மீதமிருக்கும் தொகையை செபியிடம் தரவேண்டும். ஆனால், இது எக்ஸ்சேஞ்ச் அல்ல, நிறுவனம் என்று சொன்னதால் எக்ஸ்சேஞ்ச் பங்குதாரர்களுக்கு முதலீடு கிடைக்கும். இதிலும் வரி பாக்கியைக் கட்டியதுபோக மீதம்தான் பங்குதாரர்களுக்குக் கிடைக்கும். ஆனால், கோயம்புத்தூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிடம் இருக்கும் சொத்துகளை அவ்வளவு சீக்கிரம் விற்க முடியுமா என்று தெரியவில்லை'' என்றார்.

''சர்க்கரை விலையை சர்க்கரை தயாரிக்கும் நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறதே?'' என்றோம்.

''பல ஆண்டுகளாக எதிர்பார்த்த முடிவு இது. இதற்காக ரொம்பவும் சந்தோஷப்படவேண்டாம். மீண்டும் ஒரு வறட்சி ஏற்பட்டு, சர்க்கரைக்குத் தட்டுப்பாடு வந்தால் மீண்டும் அரசாங்கம் தலையிடவே செய்யும். வெங்காயத் தினால் ஆட்சி இழந்ததுபோல சர்க்கரையினால் ஆட்சி போக வாய்ப்புண்டு. அதனால் அரசின் இந்த முடிவு நீண்ட நாட்களுக்குத் தங்காது!'' என்றார்.

''வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தப் போவதாகப் பேச்சு அடிபடுகிறதே?'' என்றோம்.

''வருமான வரி அடிப்படை வரம்பு அதிகரிப்பு, மருத்துவச் செலவு உள்ளிட்டவைகளுக்கான வரிச் சலுகைகளை மத்திய அரசு விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாகத் தள்ளிப்போகும் நேரடி வரி விதிப்பு (டி.டி.சி.) முறையை விரைவில் அமல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏப்ரல் 22-ம் தேதி தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் டி.டிசி. மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்கிறார்கள். தற்போது 2 லட்சம் ரூபாயாக இருக்கும் அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பு 2.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம். அதேபோல், வரி விதிப்பு விகிதமும் மாற்றி அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது 2014 ஏப்ரல் முதல்தான் அமலுக்கு வரும். அதாவது, காங்கிரஸ் ஜெயித்து வந்தால்தான் இந்தச் சலுகைகள் எல்லாம் கிடைக்கும். மக்களிடம் ஓட்டு வாங்குவதற்கான வேலையை காங்கிரஸ் சைலன்ட்-ஆக செய்ய ஆரம்பித்துவிட்டது'' என்றார்.

''ரிசர்வ் வங்கி சி.ஆர்.ஆர். விகிதத்தை மீண்டும் குறைக்கும் என்று பேச்சு அடிபடுகிறதே?'' என்றோம்.

''நடப்பு நிதி ஆண்டில் (2013-14) இந்தியாவில் கடன் வளர்ச்சி என்பது கடந்த 15 ஆண்டுகளில் மிகவும் குறைவாக இருக்கும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் கணித்துள்ளது. இந்நிலையில், எஸ்.பி.ஐ. தலைவர் பிரதீப் சௌத்ரி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கித் தலைவர் சாந்தா கோச்சர் உள்ளிட்ட வங்கித் தலைவர்கள் ரிசர்வ் வங்கியைக் கடனுக்கான வட்டியைக் குறைக்கச் சொல்லி கேட்டிருக்கின்றனர். தற்போது நிதிப் புழக்கம் குறைந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தப் பிறகு வங்கிகள் வட்டியைக் குறைப்பதுதான் சரி என வங்கிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் வட்டியைக் குறைக்கச் சொல்லி ஆர்.பி.ஐ.யை கேட்டுக் கொண்டிருக்கிறோம் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆண்டு ஆய்வுக் கூட்டம்

மே மாதம் 3-ம் தேதி நடக்கிறது. அப்போது ஆர்.பி.ஐ. சி.ஆர்.ஆரை மட்டும் குறைக்குமா அல்லது வட்டி விகிதத்தையும் சேர்த்து குறைக்குமா என்று பார்க்கவேண்டும்'' என்றார்.

''மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்கு விலை குறைந்து வருகிறதே?'' என்று கேட்டோம்.

''அந்த நிறுவனத்துக்கு தென்கொரியாவில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது. இப்போது வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் போர் சூழல் இருப்பதால், விலை குறைந்து வருகிறது. இன்னும் சில சதவிகிதம் விலை குறையலாம் என்பதால் உஷாராக இருங்கள்!'' என்றார்.

''சந்தை வேகமாக இறங்குகிறதே?'' என்றோம்.

''எல்லாம் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள் தான். தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டதல்லவா, இனி அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று தெரிகிறவரை சந்தை இப்படித்தான் இருக்கும். இப்போதைக்கு சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள 50 சதவிகிதப் பங்குகளின் விலை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் இறங்கி இருக்கிறது. குறிப்பாக, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், பி.ஹெச்.இ.எல்., டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல், என்.டி.பி.சி., எல் அண்ட் டி, ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி., கெயில் இந்தியா போன்ற பங்குகளைக் குறிப்பிடலாம். விலை இறங்கி இருக்கிறதே என்று எல்லாப் பங்குகளையும் வாங்கவேண்டாம். நீண்டகாலம் வைத்திருக்கிற மாதிரி பார்த்து பரிசீலித்து வாங்குங்கள்'' என்றவர், சந்தை நிலைமை சரியில்லாததால் டிப்ஸ் இல்லை என்று நடையைக் கட்டினார்.