வர்த்தகம்

இந்த வாரம் கடுகு விதை குறித்து விளக்கமாக கூறுகிறார் கோட்டக் கமாடிட்டீஸ் சர்வீஸ் நிறுவனத்தின் ரிசர்ச் துணைத் தலைவர் தர்மேஷ் பாட்டியா.

''கடந்த நான்கு வருடங்களாக கடுகு விதை விலை ஒரே நிலையாக வர்த்தகமாகி வருகிறது. சமீபத்தில் குறுகியகால ரெசிஸ்டன்ஸ் விலையான 3,568 ரூபாய் என்பதை உடைத்து மேலே சென்றது. இதனால் குறுகியகால நோக்கில் பார்க்கும்போது கடுகு விதை விலை 3,651 ரூபாய் என்ற இலக்கு விலையை அடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தற்போதைய டெக்னிக்கல் நிலையை வைத்துப் பார்க்கும்போது, கடுகு விதை விலை வரும் வாரத்தில் அதிகரித்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகமாகத் தென்படுகின்றது. ஒருவேளை வேறு ஏதாவது காரணங்களால் விலை குறைந்து 3,568 ரூபாய் என்ற நிலையை உடைத்து குறைந்து வந்தால் வர்த்தகர்கள் கடுகு விதையை வாங்குவதற்கு வாய்ப்பாகக்கொள்ளலாம்'' என்றார்.

மிளகு! (PEPPER)

இந்த வாரத்தில் உள்நாட்டு டிமாண்ட் அதிகமாக இருந்ததால் மிளகு விலை அதிகரித்து வர்த்தகமானது. ஸ்பாட் விலையாக நூறு கிலோ 36,300 ரூபாய்க்கு வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் ஒரு டன் இந்திய மிளகு விலை 6,850 டாலருக்கு விலை கேட்கப்பட்டது. மிளகு அதிகமாக உற்பத்தியாகும் சீனாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்றுமதி வெகுவாகப் பாதித்துள்ளது என இன்டர்நேஷனல் பெப்பர் கம்யூனிட்டி தெரிவித்துள்ளது. அதாவது, 2010-ம் ஆண்டில் 4,670 டன் ஏற்றுமதி செய்த சீனா, சென்ற ஆண்டில் 2,560 டன் மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே 2006-ம் ஆண்டில் 10,150 டன் வரை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் அங்கு இறக்குமதி அதிகரித்து வருகிறது. வரத்து அதிகமாக இருப்பதால் வரும் வாரத்திலும் விலையில் இது பிரதிபலிக்கும்.

ஜீரகம்! (JEERA)

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரத்து அதிகமாக வந்ததால் சென்ற வாரத்தில் ஜீரகத்தின் விலை குறைந்தது. சப்ளை அதிகமாக இருந்தாலும் பெரிய வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்கள் குறைவாகவே காணப்பட்டது. மேலும், இந்த வருடத்தில் ஜீரக உற்பத்தி அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு விலையில் பிரதிபலித்தது. குஜராத் மாநிலத்தில் ஜீரக உற்பத்தி 20-25 லட்சம் பைகளும், ராஜஸ்தான் மாநிலத்தில் 25-30 லட்சம் பைகளும் உற்பத்தி உள்ளது. 2012-2013-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரையில் ஜீரக ஏற்றுமதி 86 சதவிகிதம் அதிகரித்து 64,400 டன்னாக உள்ளது. சென்ற வாரத்தில் உஞ்ஹா சந்தைக்கு சுமார் 42,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) ஜீரகம் வரத்து வந்தது. ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் டெலிவரி விலை நூறு கிலோ 12,850 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதிக வரத்து விலை ஏற்றத்தைத் தடுக்கும்.

ஏலக்காய்! (CARDAMOM)

ஸ்பாட் சந்தைகளில் டிமாண்ட் குறைந்ததால் ஏலக்காய் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. ஸ்பாட் சந்தைக்கு சென்ற வியாழன் தினவரத்தாக 61 டன் ஏலக்காய் வரத்து வந்தது. குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ 664 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 931 ரூபாய்க்கும் வர்த்தகமானது. வருடக் கணக்கு முடிப்பதால் கடந்த சில நாட்களாக ஏலக்காய் ஏலம் விடும் சந்தைகள் மூடப்பட்டிருந்ததால் வரத்து இல்லாமல் இருந்தது. இதனால் வரும் வாரங்களில் ஏலக்காய் வரத்து அதிகமாக இருக்கும். எனினும், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது இந்த வருடத்தில் ஏலக்காய் உற்பத்தி குறைவு என்பதால் நீண்டகாலத்தில் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

இந்தியாவின் ஏலக்காய் உற்பத்தி கடந்த வருடத்தைவிட 30 சதவிகிதம் வரை குறைந் துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏலக்காய் அதிகம் விளையும் நேபாள நாட்டில் இந்த வருடத்தில் 6,020 டன் உற்பத்தியாகியுள்ளது. இதுவே, சென்றாண்டில் 5,517 டன் உற்பத்தியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளில் உற்பத்தியாகும் ஏலக்காயில் 98 சதவிகிதம் இந்தியாவிற்குதான் ஏற்றுமதியாகி வருகிறது. மொத்தத்தில் வரும் வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்தாலும், நீண்டகால நோக்கில் விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

மஞ்சள்! (TURMERIC)

புதிய வரத்து அதிகமாக இருந்ததால் வார ஆரம்பத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. எனினும், வடமாநில பெரிய வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்கள் அதிகமாக வந்ததால் விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. மேலும், இந்த வருடத்தில்

மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளதால் விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. சென்ற வாரத்தில் மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை ஈரோடு சந்தை மாரியம்மன் கோயில் திருவிழாவையட்டி மூடப்பட்டிருந்தது. சென்ற வாரத்தில் நிஜாமாபாத் சந்தைக்கு 16,000 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ)

மஞ்சள் வரத்து வந்தது. விரளி மஞ்சள் ஸ்பாட் சந்தையில் நூறு கிலோ 6,100 ரூபாய்க்கு வர்த்தகமானது. சென்ற வாரத்தில் விலை குறைந்தாலும் டிமாண்ட் நன்றாக இருப்பதால் வரும் வாரத்தில் விலை அதிகரித்தே மஞ்சள் வர்த்தகமாகும்.

- பானுமதி அருணாசலம்.