வர்த்தகம்

கச்சா எண்ணெய்!

சென்ற வாரத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் மே கான்ட்ராக்ட் குறைந்து, ஒரு பேரல் 95 டாலருக்கு வர்த்தகமானது. அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்த புள்ளிவிவரங்கள் சென்ற வாரத்தில் திருப்திகரமாக வரவில்லை. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் ஸ்டாக் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், சென்ற வாரத்தில் அமெரிக்காவில் வேலையில்லாத வர்கள் விண்ணப்பிக்கும் க்ளைம் தொகை எதிர்பார்த்ததைவிட அதிகரித்தது. எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் சமீபத்தில் தெரிவித்துள்ள தகவலின்படி, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்த வருடம் 0.2 சதவிகிதம் வரை பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பா மத்திய வங்கியின் வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை என அறிவித்துள்ளது. இது யூரோவின் மதிப்பைக் குறைத்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய்யில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் வடகொரியா மற்றும் தென்கொரியாவில் ஏற்பட்டிருக்கும் அணு ஆயுதம் குறித்த பதற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். வரும் வாரத்தில் விலை ஏறுவதற்கான வாய்ப்பில்லை.

இயற்கை எரிவாயு!

வார ஆரம்பத்தில் விலை குறைந்து வர்த்தகமாகி வந்த இயற்கை எரிவாயு டெக்னிக்கல் காரணமாக விலை சற்று அதிகரித்தது. இயற்கை எரிவாயுவை அதிகமாகப் பயன்படுத்தும் ஜப்பானில் சோலார் சக்தியை நிறைய பயன்படுத்துவதும், அமெரிக்காவில் அணுஉலையை அதிகளவில் பயன்படுத்துவதாலும் இயற்கை எரிவாயுக்கான டிமாண்ட் குறைந்துள்ளது. எனினும், சென்ற வாரத்தைவிட இந்த ஆண்டு எரிவாயு கையிருப்பு குறைந்துள்ளது. மொத்தத்தில் பார்க்கும்போது, தேவை குறைவாக இருப்பதால் வரும் வாரத்தில் விலை குறைந்தே இயற்கை எரிவாயு வர்த்தகமாகும்.

அடிப்படை உலோகங்கள்!

சீனாவின் தேவை சற்று அதிகரித்திருப்பதால் அடிப்படை உலோகத்திற்கான தேவை சற்று அதிகரித்துள்ளது. அடிப்படை உலோகத்தை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில் இரண்டாம் காலாண்டில் தேவை அதிகரித்துள்ளது. 2003 அக்டோபர் மாதத்தில் காப்பர் எல்.எம்.இ. இன்வென்ட்டரி அதிகரித்ததுபோல், தற்போது இன்வென்ட்டரி அதிகரித்துள்ளது. மேலும், சீனாவின் மார்ச் மாதத்திற்கான தயாரிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் குறைந்திருக்கிறது. சைப்ரஸ் பிரச்னை காரணமாக யூரோவின் மதிப்பு குறைந்து வருவதாலும், அங்கிருந்து தேவை குறைந்துவருவதும் அடிப்படை உலோகத்தின் விலையில் பிரதிபலித்தது. உலகப் பொருளாதாரச் சூழ்நிலை சாதகமாக இல்லாத காரணத்தால், வரும் வாரத்தில் அடிப்படை உலோகங்களின் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

தங்கம்!

கடந்த வாரத்தின் நடுவில் தங்கம் கணிசமாக குறைந்தது. இதற்கு முக்கிய காரணம், தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப். மூலம் விற்பனை செய்யும் பெரிய டிரேடிங் நிறுவனங்கள் தங்களது இருப்பை கடந்த ஆகஸ்ட் 2012-ம் மாதத்திற்கு பிறகு இப்போது குறைத்துள்ளது. கடந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவில் பிஸிக்கல் தங்க சந்தை விடுமுறை என்பதால் அங்கிருந்து வரும் டிமாண்டும் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் ஒரு மாத விலை உயர்வை கண்ட தங்கம் ஏப்ரம் மாதத்தில் 4 சத விகிதம் வரை விலை குறைந்துள்ளது.

2014-ம் வருட சந்தை சுழற்சியை வைத்து பார்க்கும்போது தங்கத்தின் விலை குறையவே வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது என மெட்டல் கன்சல்டன்சி நிறுவனமான ஜி.எஃப்.எம்.எஸ். தனது கணிப்பில் தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கோல்டு ஃபண்டுகள் இரட்டை இலக்க நஷ்டத்தைச் சந்தித்துள்ளது என ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜர் ஜான் பால்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால், வெள்ளிக்கிழமை இரவு தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. இதற்கு காரணம், வெள்ளியன்று இரவு அமெரிக்காவில் வெளியான வேலை வாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் பலவீனமாக இருந்ததே!

- பானுமதி அருணாசலம்.