Election bannerElection banner
Published:Updated:

நிதி ஆவணங்கள் : தாமதம் இல்லாமல் பணமாக்குவது எப்படி?

நீரை.மகேந்திரன்.

##~##

முதலீடு செய்வது முக்கியம்தான். அதைவிட முக்கியமானது, முதலீடு செய்த பணம் உரிய நேரத்தில் நமக்குத் திரும்பக் கிடைப்பது. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், என்.சி.டி., காப்பீடு ஆவணங்கள் என பல்வேறு நிதி ஆவணங்களில் நாம் முதலீடு செய்திருக்கும் பணம் சிக்கலில்லாமல் திரும்பப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டோம். காலதாமதமின்றி நாம் முதலீடு செய்த பணம் நமக்குத் திரும்பக் கிடைக்க அவர்கள் யோசனை இனி;

பங்குச் சந்தை!

டீமேட் கணக்கு மூலம் செய்துள்ள முதலீடுகளுக்கு எப்போதும் எந்தச் சிக்கலும் இல்லை. சென்னையில் டீமேட் கணக்கு தொடங்கியவர் வெளியூர் மாற்ற லாகிப் போனால் அங்கிருந்து அந்தக் கணக்கிலிருந்து பங்குகளை விற்கவும்,  டிரேடிங் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியுமா என்கிற சந்தேகமே வேண்டாம். இந்தியாவின் எந்த இடத்திலிருந்தும் உங்களது டீமேட் கணக்கை இயக்க முடியும்; அதிலிருந்து பங்குகளை விற்கும்போது டிரேடிங் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

ஆனால், டீமேட் செய்யப்படாத பங்காக இருந்தால் அதை உடனடியாக விற்று பணமாக்க முடியாது. இதுபோன்ற நிலையில் அது எவ்வளவு மதிப்புகொண்டதாக இருந்தாலும் நமது அவசரத் தேவைக்குப் பயன்படாது.

டீமேட் முறைக்கு மாற்றப்படாத பங்குகளை வைத்திருப்பவர்கள், முதலில் அதை டீமேட் முறைக்கு மாற்றியபிறகே விற்கமுடியும். எனவே, டீமேட் முறைக்கு மாற்றாத பங்குகள் ஏதேனும் வைத்திருந்தால், முதலில் அதை டீமேட்டுக்கு மாற்றிவிடுவது நல்லது. அப்போதுதான் எந்த காலதாமதமும் இல்லாமல் பங்குகளை விற்று அதன் பலனை அனுபவிக்க முடியும்.

நிதி ஆவணங்கள் : தாமதம் இல்லாமல் பணமாக்குவது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட்!

முகவரி மாற்றம் மற்றும் நாமினி போன்ற விஷயங்களில் தெளிவில்லாமல், குழப்பமாக இருந் தால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பண மாக்குவதில் கால தாமதம் ஆகலாம். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது விண்ணப்பத்தில் ஒரு வங்கிக் கணக்கு எண் தந்துவிட்டு, பிற்பாடு அந்த வங்கிக் கணக்கைத் தொடராமல் விட்டிருப்பார்கள். ஃபண்டை பணமாக்க முயற்சிக்கும்போது புதிய

நிதி ஆவணங்கள் : தாமதம் இல்லாமல் பணமாக்குவது எப்படி?

வங்கிக் கணக்கு எண்ணை தந்தாலும், பழைய கணக்கு எண்ணையும் ஆதாரத்துடன் தரவேண்டும்.  

குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யும்போது, அந்தக் குழந்தையின் காப்பாளர் யார் என்பதை நினைவில்கொண்டு, அவர் மட்டுமே கையெழுத்திடுவதன் மூலம் காலதாமதத்தைத் தவிர்க்க முடியும். தவிர, மைனர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்திருந்தால், அந்தக் குழந்தைக்கு பதினெட்டு வயது முடிந்ததும் மைனர் கணக்கிலிருந்து ரெகுலர் முதலீட்டுத் திட்டங்களுக்கு மாற்றிவிடுவது நல்லது.

கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து, இருவரது பெயரிலும் முதலீடு செய்திருப்பார்கள். விண்ணப்பத்தில் இருவரில் யாரேனும் ஒருவர் க்ளைம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக இருவரும் சேர்ந்து என்று குறிப்பிட்டுவிட்டால் பிற்பாடு அவர்களில் யாரேனும் ஒருவர் இல்லாதபட்சத்தில் அதை பணமாக்குவதில் தாமதம் ஆகலாம். எனவே, விண்ணப்பத்தை எழுதும்போதும் கவனம் தேவை.

இன்ஷூரன்ஸ் ஆவணங்கள்!

இன்ஷூரன்ஸ் ஆவணங்களைப் பொறுத்த வரை, க்ளைமிற்கு விண்ணப்பித்து காப்பீடு நிறுவன விசாரணைக்கு பிறகே இழப்பீடு கிடைக்கும் என்றா லும், இடையில் ஏற்படும் பணத் தேவைகளுக்கு இன்ஷூரன்ஸ் ஆவணங்களை வைத்து கடன் வாங்குவதும் நடக்கிறது. இதற்கு பாலிசி ஆவணங்கள் சேதமில்லாமல் இருக்கவேண்டும்.

இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் நாமினி விஷயத்தில் குழப்பம் இருந்தால் பணப் பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும். எனவே, நாமினி பற்றி ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதை உடனடியாக அப்டேட் செய்துவிடவேண்டும்.

நிதி ஆவணங்கள் : தாமதம் இல்லாமல் பணமாக்குவது எப்படி?

உதாரணமாக, திருமணத்திற்கு முன் பாலிசி எடுக்கும் ஒருவர், தனது வாரிசாக தனது தாயாரை நியமித்திருப்பார். ஆனால், திருமணமானவுடன் தனது வாரிசாக தனது மனைவியை நியமிப்பது நல்லது. எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்பட்சத்தில் காலதாமதம் எதுவும் இல்லாமல் கிடைக்கும்.  

இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்தவரை, தொடர்ந்து பிரீமியம் கட்டவில்லை எனில், அந்த பாலிசி காலாவதியாகிவிடும். ஆனால், ஐந்து வருடம் தொடர்ந்து கட்டிய பாலிசி என்றால் கட்டியவரையில் உள்ள பிரீமியத் தொகையில் பிடித்தங்கள் போக (சரண்டர் வேல்யூ) பாலிசி சரண்டர் செய்வதன் மூலம் திரும்பப் பெறமுடியும்.

முகவரி மாற்றம் ஏதுமிருந்தாலும் அதை உடனடியாகத் தெரியப்படுத்தி, மாற்றிவிடுவது நல்லது. பொதுவாக, தற்போது இன்ஷூரன்ஸ் க்ளைம் தொகை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுவதால் வங்கிக் கணக்கு விவரங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு அதற்கு உரிய படிவத்தில் கொடுத்து வைக்க வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாதபட்சத்தில் புதிதாக வங்கிக் கணக்குத் தொடங்கிவிடுவது அவசியம்.

என்.சி.டி. / பாண்டுகள்!

தேசிய கடன் பத்திரங்கள் மற்றும் பாண்டு களைப் பொறுத்தவரை, ஆவணங்கள் தெளிவாக

நிதி ஆவணங்கள் : தாமதம் இல்லாமல் பணமாக்குவது எப்படி?

இருக்கும்பட்சத்தில் பணமாக்குவதில் சிக்கல்கள் இருக்காது. இந்த வகை முதலீடுகள் டீமேட் கணக்கு மூலம் நடப்பதால் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் இதை பணமாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக, திருச்சியில் வசித்த போது என்.சி.டி.யில் முதலீடு செய்திருந்த ஒருவர், பணி காரணமாக வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றாலும், அங்கிருந்தபடியே இதை பணமாக்கிக்கொள்ளலாம். திரும்பவும் திருச்சிக்கு வந்துதான் பணமாக்கவேண்டும் என்பதில்லை. ஆனால், முகவரி மாற்றம், நாமினி மாற்றம் போன்ற விவரங்களை அவ்வப்போது நிறுவன பதிவாளருக்கு அனுப்பி, அதை ஆவணங்களில் அப்டேட் செய்து வைத்திருப்பது கட்டாயம்.

வைப்புநிதி!

வங்கி வைப்புநிதியைப் பொறுத்தவரை, முகவரி மாற்றம் மற்றும் நாமினிகளை அப்டேட் செய்தாலும், சம்பந்தப்பட்ட கிளை தவிர, உங்களுக்கு அருகாமையில் உள்ள அதே வங்கி யின் வேறு கிளையில்

நிதி ஆவணங்கள் : தாமதம் இல்லாமல் பணமாக்குவது எப்படி?

பணமாக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால், உங்களுடைய சேமிப்புக் கணக்கில் தான் வரவு வைக்கப் படும். ஆனால், முதிர்வுத் தேதிக்குள் பணமாக்க முயற்சிக்கும்போது தான் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், முதிர்வுத் தேதிக்குப் பிறகு பணமாக்குவது என்றால் சம்பந்தப்பட்ட கிளைக்குச் சென்றுதான் பணமாக்க முடியும்.

வைப்புநிதி கணக்கு வைத்துள்ளவர் நேரடியாகப் பணமாக்க முயற்சிக்கும்போது சிக்கல் கிடையாது. ஆனால், நாமினி மற்றும் வாரிசுகள் முயற்சிக்கும்போது வாரிசுச் சான்றிதழ் அல்லது நீதிமன்ற இறங்குரிமைச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே வைப்புநிதி பணத்தைப் பெற முடியும்.  

கிசான் விகாஸ் பத்திரங்கள்!

நிதி ஆவணங்கள் : தாமதம் இல்லாமல் பணமாக்குவது எப்படி?

2011-க்குப் பிறகு கிசான் விகாஸ் பத்திரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், ஏற்கெனவே இதில் முதலீடு செய்துள்ளவர்கள் முதிர்வுத் தொகையைப் பெற சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்குதான் செல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் அருகாமையிலுள்ள தபால் நிலையத்திற்கு மாற்றம் செய்துகொண்டு அங்கு க்ளைம் செய்துகொள்ளலாம். ஆனால், முதிர்வு காலத்திற்கு  பிறகு தாமதமாகப் பணமாக்க முயற்சிக்கும்போது சம்பந்தப்பட்ட கிளைக்குத்தான் செல்லவேண்டும். அல்லது அருகில் உள்ள தபால் நிலையத்தில் கிசான் விகாஸ் பத்திரத்தின் நகல் மற்றும் இந்தக் கிளைக்கு மாற்றம் செய்து தரக்கோரும் கடிதம் கொடுத்தால் பணத்தைப் பெற்றுக்கொடுப்பார்கள். இதற்கு இரண்டு மாத காலங்கள் வரை ஆகலாம்.

என்னதான் ஆவணங்கள் வைத்திருந்தாலும், தாமதமில்லாமல் பணமாக்க வாய்ப்பிருக்கும் போதுதான் அது சரியான நேரத்திற்கு பயன்படும்.  சில எளிய வழிகளைப் பின்பற்றினால் இதுவும் இன்பமாக மாறும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு