Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

பானுமதி அருணாசலம்.

அக்ரி கமாடிட்டி !

பானுமதி அருணாசலம்.

Published:Updated:

மிளகு ! (Pepper)

##~##

டிரேடர்கள் ஷார்ட் கவரிங் செய்ததால் மிளகு விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. சென்ற வாரம் புதன்கிழமையன்று கொச்சி சந்தைக்கு 26 டன் மிளகு வரத்து வந்தது. இதில் நூறு கிலோ மிளகு 35,900 ரூபாய்க்கு வர்த்தகமானது. புதிய கான்ட்ராக்ட்டை அறிமுகப்படுத்துவதில் ஏற்படும் தாமதம் மிளகு விலையில் பிரதிபலித்தது. 2013 பிப்ரவரி மாதத்தில் மலேசியா 620 டன் மிளகை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே, சென்ற வருடம் இதேமாதத்தில் 777 டன் மிளகை ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது. 2012 அக்டோபர் மாதத்திலிருந்தே மலேசியாவில் மிளகு ஏற்றுமதி குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் மிளகு உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம். மொத்தத்தில் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் வரும் வாரத்தில் மிளகு விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்ரி கமாடிட்டி !

ஜீரகம்!  (Jeera)

ஸ்பாட் சந்தையில் ஜீரகம் விலை குறைந்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிமாண்ட் சீராக இருந்தும், வரத்து அதிகரித்ததால் ஜீரகத்தின் விலை குறைந்து வர்த்தகமாக காரணமாக அமைந்தது. குஜராத் மாநிலம் உஞ்ஹா சந்தைக்கு சென்ற புதன்கிழமை அன்று 30,000 பைகள் (ஒரு பை 55 கிலோ) வரத்து வந்தது. நூறு கிலோ 13,500 ரூபாய்க்கு வர்த்தகமானது. துருக்கி மற்றும் சிரியா நாட்டில் உற்பத்தி குறைந்துள்ளதை அடுத்து ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும். வரும் மாதங்களில் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 2012-2013 ஏப்ரல் முதல் ஜனவரி மாதத்தில் இந்தியாவிலிருந்து 64,400 டன் ஜீரகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்தைவிட 86 சதவிகிதம் அதிகம். டிமாண்ட் இருந்தாலும், குறுகியகாலத்தில் பார்க்கும்போது சப்ளை அதிகமாக இருப்பதால் வரும் வாரத்திலும் விலை குறைந்தே ஜீரகம் வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

மஞ்சள்! (Turmeric)

சில அடிப்படைக் காரணங்களால் மஞ்சளின் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. எனினும், வரும் வாரங்களில் வர்த்தகர்களிடமிருந்து டிமாண்ட் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாநிலங்களில் உள்ளூர் திருவிழாக்கள் நடக்க இருப்பதால் வரும் வாரங்களில் இந்தப் பகுதிகளில் இருந்து டிமாண்ட் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உற்பத்தி குறைவாக இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் சந்தைக்கு 18,000 முதல் 20,000 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) வரை சென்ற வாரத்தில் வரத்து வந்தது. ஈரோடு சந்தைக்கு 8,000 பைகள் வரை வரத்து வந்தது. நூறு கிலோ விரலி மஞ்சள் சென்ற வாரத்தில் 7,000 முதல் 8,200 ரூபாய் வரை வர்த்தகமானது. நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, மஞ்சள் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதால் விலை இறங்கினாலும் கவலைப்படத் தேவையில்லை.

அக்ரி கமாடிட்டி !

ஏலக்காய்! (cardamom)

டிமாண்ட் குறைந்ததாலும், ஏலக்காயின் தரம் குறைவாக இருந்ததாலும் ஏலக்காயின் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் ஸ்டாக் பொசிஷன் எடுத்ததால் அது விலையில் பிரதிபலித்தது. சென்ற புதன்கிழமையன்று 86 டன் வரை வரத்து வந்தது. ஒரு கிலோ 647 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதிகபட்ச விலையாக 906 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த விலை இறக்கம் தொடராமல் வரும் வாரங்களில் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஏற்றுமதி டிமாண்ட் அதிகரிப்பதும், சப்ளை குறைவதுமே விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமையும். இந்தியாவில் ஏலக்காய் உற்பத்தி இந்தாண்டு 20-25 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஏலக்காய் பயிரிடப்படும் இடங்களில் மோசமான வானிலை நிலவியதே. வரும் வாரத்தில் ஏலக்காய் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

அக்ரி கமாடிட்டி !

மிளகாய்! (Chilli)

மிளகாய் பயிரின் தரம் சரியில்லாததாலும், உள்நாட்டு டிமாண்ட் குறைவாக இருந்ததாலும் சென்ற வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது.  ஏற்றுமதி ஆர்டரும் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சப்ளையைப் பொறுத்தவரை, வரத்து காலம் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் வரும் வாரங்களில் சப்ளை குறையும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு  உற்பத்தி 30% வரை குறைந்துள்ளது.  சென்ற வாரத்தில் நூறு கிலோ 5,700 ரூபாய்க்கு வர்த்தகமானது, வரும் வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமாகவே வாய்ப்புண்டு.

அக்ரி கமாடிட்டி !
அக்ரி கமாடிட்டி !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism