Published:Updated:

ஏற்றம் தருமா எனர்ஜி துறை?

ஏற்றம் தருமா எனர்ஜி துறை?

ஏற்றம் தருமா எனர்ஜி துறை?

ஏற்றம் தருமா எனர்ஜி துறை?

Published:Updated:

ரிசர்ச்

##~##

எனர்ஜி துறை பற்றிய அடிப்படை விஷயங்களை கடந்த இதழில் பார்த்தோம். இந்த வாரம் இத்துறையில் உள்ள பங்கு நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம். தற்போது சற்றே பின்னடைவைச் சந்தித்துவரும் இத்துறை பங்குகளில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யலாம் என்றாலும், இடைக்கால அளவில் ஸ்விங் டிரேடிங் அடிப்படையில் வர்த்தகம் செய்வதற்கும் ஏற்ற பங்குகள் இவை என்பதால், ஆண்டுக்கு ஓரிரு முறையாவது வாங்கி விற்று லாபம் பார்க்கும் வாய்ப்பிருக்கிறது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிலையன்ஸ்!

மார்க்கெட் லீடர்; என்னதான் சொன்னாலும் ஒவ்வொருவரின் போர்ட்ஃபோலியோவிலும் இருக்கவேண்டிய முக்கியமான பங்கு. ரீஃபைனரி மட்டுமல்லாது பன்முகம்கொண்ட நிறுவனம். இந்திய ஏற்றுமதியில் 14 சதவிகிதமும், மத்திய அரசின் மறைமுக வரி வசூலில் 5 சதவிகிதமும், பல ஆயிரம் கோடிகள் ரொக்கக் கையிருப்பும், சென்செக்ஸில் சுமார் 10 சதவிகித வெயிட்டேஜும் உள்ள நிறுவனம் என்பதே இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

சர்ச்சைகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக இந்தப் பங்கு தற்காலிகப் பின்னடைவு கண்டிருக்கிறது. மீண்டும் ரூ.700-க்குக் கீழ் செல்ல வாய்ப்பிருப்பதால், அவசரப்படாமல் காத்திருந்து இறக்கத்தில் வாங்க ஆரம்பிக்கலாம். அடுத்த 18 மாதங்களுக்குப் பெரிய ஆதாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்; என்றாலும், ஷெல் கேஸ் போன்ற புதிய அம்சங்களால் 2015-16-ல் மீண்டும் பெரிய வளர்ச்சியைப் பார்க்கலாம்.

ஏற்றம் தருமா எனர்ஜி துறை?

மங்களூரு ரீஃபைனரீஸ்!

வெள்ளி விழா கொண்டாடும் நிறுவனம். ஆதித்ய பிர்லா குழுமமும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் இணைந்து துவக்கிய நிறுவனம். பிர்லா குழுமம் வெளியேறியபின்பு மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி.யின் முதலீட்டிற்கு பின்னர் ஒரு பொதுத்துறை நிறுவனமாக மாறியது. ஆண்டுக்கு 15 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டது.

விரிவாக்கப் பணிகளுக்காக கோடிக்கணக்கில் புதிய முதலீடுகளும், மேலும் கடன்களும் அதிகரித்துள்ளதால், உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை என்றாலும், தற்போதைய சந்தை விலை ஓரளவுக்கு சாதகமில்லாத இந்தச் செய்திகளையெல்லாம் ஜீரணித்துவிட்டது என்றே தோன்றுகிறது. ரூ.50 என்பது நல்ல நீண்டகால முதலீடு.  

சென்னை பெட்ரோலியம்!

தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் கொடுத்து வரும் நிறுவனம்; இப்போதைய பின்னடைவைத் தாண்டி முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது. நல்ல நீண்டகால முதலீடு.

எஸ்ஸார் ஆயில் !

ஏற்றம் தருமா எனர்ஜி துறை?

எவ்வளவோ இருக்கையில் இது ஏன்? அதிக ரிஸ்க் எடுக்கத் தயாரானவர்கள் மட்டும் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப்லாஸோடு டிரேட் செய்யலாம்.

இனி எண்ணெய்யை சந்தைப் படுத்தும் நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள் குறித்து பார்ப்போம்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை சந்தைப் படுத்தி விற்பது ஓ.எம்.சி. என அழைக்கப்படும் 'ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள்’. இந்த எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், விற்பனையின் மூலம் ஈட்டும் லாப - நஷ்டத்தைவிட 'அண்டர் ரெக்கவரீஸ்’ மூலமாக ஈட்டும் வருவாயே அதிகம்! அது என்ன 'அண்டர் ரெக்கவரீஸ்’?

'அண்டர் ரெக்கவரீஸ்’?

வெளிநாட்டில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தால் என்ன விலை ஆகுமோ அதற்கும், உள்ளூர் சந்தையில் அப்போதைய விற்பனை விலைக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் இது: ஊக நஷ்டம்!

உள்ளூரிலேயே பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யவில்லையென்றால் என்ன செய்வோம்? வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வோம்தானே? அப்படி இறக்குமதி செய்தால் அதற்கு நாம் என்ன விலை கொடுக்கவேண்டி இருக்குமோ அதைக் கணக்கிடுவார்கள் ஒருபக்கம். பொதுமக்கள் நலன் கருதி அரசின் கட்டாயத்தால், பொதுவாகவே அந்த சர்வதேச சந்தை விலையைவிடக் குறைவாக உள்ளூர் நிறுவனங்கள் விற்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இதனால் ஏற்படும் நஷ்டம் அல்லது அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு தட்டிப்போவதற்கு காரணம் அரசின் கொள்கைகள்தான். அதனால், இந்த இழப்பையும் அரசே சரிக்கட்டுகிறது. சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் விற்பனை நிறுவனங்களும் இந்த நஷ்டத்தில் ஒரு பகுதியைப் பிரித்துக்கொள்கின்றன.  

இப்படி வைத்துக்கொள்வோம். இந்த எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை உள்ளூரில் விற்காமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல லாபம் கிடைக்கலாம் இல்லையா? அப்படி லாபம் பார்க்கக்கூடிய வாய்ப்பை அரசே தனது கொள்கைகள் மூலமாகத் தட்டிப் பறிப்பதால், அதன்காரணமாக ஏற்படும் ஊக நஷ்டத்தையும் ஈடுகட்ட வேண்டியதும் அரசின் பொறுப்பாகிறது. அதுதான் அண்டர் ரெக்கவரீஸ்; அவ்வளவுதானே தவிர, இது முழுக்க முழுக்க இந்நிறுவனங்களின் உண்மையான நஷ்டம் எனச் சொல்ல முடியாது.

எப்போதெல்லாம் இது  சாதகம் அல்லது பாதகம்?

1. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்காமல், பெட்ரோலியப் பொருட்களின் விலை மட்டும் அதிகரித்தால், அப்போது எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்திச் செலவுகள் எதுவும் அதிகரிக்காமல், ஊக நஷ்டம் மட்டுமே அதிகரிக்கும். அதன் ஒரு பகுதியை அரசு ஈடுகட்டும்போது, இந்நிறுவனங்களின் உண்மையான லாபம் அதிகரிக்கும்.

2. மாறாக, கச்சா எண்ணெய்யின் விலையும் அதிகரித்து, பெட்ரோலியப் பொருட்களின் விலையும் சர்வதேச சந்தையில் அதிகரித்தால், நம் நிறுவனங்களின் உற்பத்தி செலவு/அடக்க விலையும் அதிகரிக்கும், ஊக நஷ்டமும் அதிகரிக்கும். அதன் ஒரு பகுதியை அரசு ஈடுகட்டும்போது, அதனால் லாபம் ஏதும் கிடைக்காது.

ஏற்றம் தருமா எனர்ஜி துறை?

3. கச்சா எண்ணெய்யின் விலையும் அதிகரிக்காமல், பெட்ரோலியப் பொருட்களின் விலையும் அதிகரிக்காமல் இருந்தாலும் இதேதான் நிலைமை. லாப-நஷ்டத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

4. மோசமான சூழல் எது தெரியுமா? கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து, ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரிக்காமல் அல்லது குறைந்தாலோ அவ்வளவுதான். உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் ஒருபக்கம்; விற்பனை விலை குறைவு மறுபக்கம். சர்வதேச விலைகள் வீழ்ச்சி என்பதால் அரசும் கைவிட்டுவிடும்; ஊக நஷ்டமே இருக்காது என்பதால். எல்லாமே உண்மையான நஷ்டம்தான்! அது மட்டுமல்ல, விற்கப்படும் பொருட்களைப் பொறுத்தும் இது மாறுபடும்.

உதாரணத்திற்கு, கடந்த சில ஆண்டுகளில் சிலமுறை பெட்ரோல் லாபத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, அதன் உற்பத்தியாகும் அடக்க விலையைவிட அதிக விலைக்கு நம் சந்தைகளில் விற்கப்பட்டு உண்மையிலேயே லாபம் ஈட்டியிருக்கிறது.

ஆனால், மண்ணெண்ணெய்யை எடுத்துக் கொண்டால் எந்தவிதத்தில் பார்த்தாலும், எப்போதுமே அது நஷ்டம்தான்! சர்வதேச சந்தை விலையைவிடக் குறைவாக மட்டுமல்ல, உற்பத்தியாகும் அடக்க விலையைவிடவும் குறைவாக, அவ்வளவு ஏன்... சொல்லப்போனால், மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் விலையைவிடக் குறைவாகக்கூட  நம்மூரில் விற்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன இந்த நிறுவனங்கள்.  

ஏற்றம் தருமா எனர்ஜி துறை?

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் என தனித்தனியாக பிராண்ட் இருந்தாலும், உபயோகிப்பவர்களிடையே பெரிய பிராண்ட் லாயல்டியெல்லாம் கிடையாது. தனித்துவம் என எதுவும் இல்லாததால் எது கிடைக்கிறதோ அல்லது எது அருகாமையில் இருக்கும் பெட்ரோல் பங்கோ அதில்தான் நாம் பெட்ரோலோ டீசலோ போட்டுக்கொள்வோம். எனவே, இதன் அடிப்படையில் தரம் பிரிப்பது கடினம்.

செயல்பாடுகளின் அடிப்படையில் பார்க்கையில், ஓ.என்.ஜி.சி. மற்றும் இந்தியன் ஆயில் ஆகியவை ஸ்திரமான, வலுவான, ஓரளவுக்கு நல்ல, நீண்டகால முதலீடுகள் என்றாலும், பின்வரும் பட்டியலில் உள்ள பங்குகளுமே கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால், அவ்வப்போது அரசு கொள்கைகளுக்கு ஏற்ப ஆட்டம் காட்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும், அப்படி ஆட்டம் காணும்போதும் இறங்கும்போதும் மட்டுமே வாங்கிச் சேர்ப்பதும் நல்லது.    

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்:

சர்வதேச அளவில் 'ஃபார்சூன் 500’ பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னணி நிறுவனம்! 1959 துவக்கம்; இன்று இத்துறையிலேயே மிகப் பெரிய நிறுவனம் இதுதான். இந்தியா முழுவதும் பரந்து விரிந்துள்ள பொதுத்துறை நிறுவனம். பெட்ரோல், டீசல், கெரஸின் மட்டுமல்லாது சமையலுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் இண்டேன் கேஸ் உற்பத்தி செய்கிறது இந்நிறுவனம். நீண்டகால முதலீட்டிற்கு ஏற்றது.

பாரத் பெட்ரோலியம்:

இதுவும் பொதுத்துறை நிறுவனம்தான்; பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, இதர பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை. இந்தியா முழுவதும் இதன் கிளைகள் உண்டு.  

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்:

பொதுத்துறை, பெட்ரோல், டீசல், இதர பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை என மேலே சொன்ன எல்லாமே இதற்கும் பொருந்தும்.

ஓ.என்.ஜி.சி.:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனைப் போலவே இதுவும் ஒரு 'ஃபார்சூன் 500’ பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நிறுவனம்; 1956-ம் ஆண்டு துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம்; இந்தியாவில் மட்டுமல்லாது, ஓ.என்.ஜி.சி. விதேஷ் மூலமாக 15 நாடுகளில் கிளை பரப்பி அசுர வளர்ச்சியடைந்துவரும் நிறுவனம்.  

கெயில்:  

உலகிலேயே நீளமான, இயற்கை எரிவாயுவைக் கொண்டுசெல்லும் பைப்லைன் திட்டத்திற்கு சொந்தக்காரர்கள். 1984-ல் துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம்; இயற்கை எரிவாயு மற்றும் எல்.பி.ஜி ஆகியவற்றை உற்பத்தி செய்து, விற்பனை/விநியோகமும் செய்துவரும் நிறுவனம்.

பெட்ரோனெட் எல்.என்.ஜி. லிமிடெட்:

பொதுத்துறையிலும் பொதுத்துறை நிறுவனம் இது. ஓ.என்.ஜி.சி., கெயில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களால் துவங்கப்பட்டது. இயற்கை எரிவாயு, லூப்ரிகன்ட்ஸ், பெட்ரோகெமிக்கல்ஸ் இறக்குமதி.

கெய்ன்:

எரிவாயு மற்றும் எண்ணெய் அகழ்வு, சுத்திகரிப்பு, விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டி ருக்கும் வெற்றிகரமான தனியார் நிறுவனம்.

(அலசுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism