கச்சா எண்ணெய் !
##~## |
''கடந்த மூன்று வாரங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்காவில் ஹைட்ராலிக் ஃபிராக்ஸரிங் முறையில் சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், ரஷ்யாவில் 15 மில்லியன் டாலர் மதிப்பில் இந்த ஹைட்ராலிக் ஃபிராக்ஸரிங் முறையில் சுத்திகரிப்பு செய்ய புதிய சுத்திகரிப்பு நிலையம் கடந்த பிப்ரவரி மாதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாகவும் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, சாதகமற்ற நிலையில் இருப்பதும் கச்சா எண்ணெய் விலைக்குப் பாதகமாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் 87 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இதிலிருந்து 90.50 டாலரைத் தாண்டினால் மட்டுமே விலை மேலே செல்ல வாய்ப்பு காணப்படுகிறது.
சென்ற வாரத்துடன் ஒப்பிடும்போது கச்சா எண்ணெய் இன்வென்ட்டரி குறைந்திருக்கிறது. எம்.சி.எக்ஸ். விலையில் பார்க்கும்போது, 4,700 - 4,750 ரூபாய்க்கு வரும்போது விற்றுவிடலாம். 4,791 ரூபாய் இலக்கு விலையாகக்கொள்ளவும். முதல் ஸ்டாப்லாஸ் 4,613, இரண்டாவது ஸ்டாப்லாஸ் 4,558 ரூபாயாகக் கொள்ளவும்'' என்றார்.

இயற்கை எரிவாயு !
சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயு விலை குறைந்து வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் மே கான்ட்ராக்ட் விலை 0.60 சதவிகிதம் வரை குறைந்தது. இயற்கை எரிவாயு இன்வென்ட்டரியைப் பொறுத்தவரை, எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயுவை அதிகளவில் உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்களான பி.எஸ்.என்.சி. (றிஷிழிசி ணிஸீமீக்ஷீரீஹ்) மற்றும் பீட்மான்ட் (றிவீமீபீனீஷீஸீt ழிணீtuக்ஷீணீறீ நிணீs சிஷீ.) உள்ளிட்ட நிறுவனங்கள் மே 1 முதல் இயற்கை எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ளது. அதாவது, இயற்கை எரிவாயுவின் பெஞ்ச்மார்க் விலையை அதிகரிக்க வேண்டுமென இந்த நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மேலும், அமெரிக்காவின் இயற்கை எரிவாயு உற்பத்தி எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ளது. வரும் வாரத்திலும் விலை குறைந்தே இயற்கை எரிவாயு வர்த்தகமாகும்.
தங்கம் !

சென்ற வாரத்தின் முதல் நான்கு நாட்களில் 1,300 டாலருக்கு மேல் வர்த்தகமான சர்வதேச தங்கத்தின் விலை, வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 1,400 டாலர் வாக்கில் வர்த்தகமானது. ஜெர்மன் நாட்டின் கிரெடிட் ரேட்டிங் ’ஏ பிளஸ்’லிருந்து (கி ) 'ஏ’ஆக 'ஈகான்-ஜோன்ஸ்’ என்கிற ரேட்டிங் நிறுவனம் குறைத்துள்ளது. சில ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பொருளாதாரச் சிக்கலில் மாட்டி வருவதை இது காட்டுகிறது. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகள் பாண்டுகளை வாங்குவதற்காக அதிகளவில் கடன் வாங்கி வருகின்றன. உலகின் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப். நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்களது தங்க இருப்பு குறைந்துள்ளதாகக் கூறியுள்ளது. கொரியா நாட்டில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் முடிவுகள் உள்ளிட்டவை தங்கத்தின் விலையைத் தற்போது தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. மொத்தத்தில், உலகப் பொருளாதார நிலவரங்களை வைத்து பார்க்கும்போது, தங்கத்தின் விலை வரும் வாரத்திலும் குறையவே வாய்ப்பு அதிகம்.
அடிப்படை உலோகங்கள் !
இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட், உலகப் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டும், வரும் ஆண்டும் குறைவாக இருக்கும் என கணித்திருப்பது அடிப்படை உலோகங்களின் டிமாண்டை குறைத்துள்ளது. இதனால் சென்ற புதன்கிழமை மட்டும் காப்பரின் விலை
3 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. மேலும், ஐரோப்பாவின் கார் விற்பனை மார்ச் மாதத்தில் மட்டும் 10.3 சதவிகிதம்வரை குறைந்துள்ளது. இது கணிசமாக அடிப்படை உலோகத்தின் டிமாண்டை குறைக்கும் என வர்த்தகர்கள் கருதுகிறார்கள். அமெரிக்காவில் செலவினங்களைக் குறைப்பது மற்றும் ஐரோப்பாவில் நெருக்கடி போன்றவை உலகப் பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும் என ஐ.எம்.எஃப். கூறியுள்ளது.
மேலும், சீனாவின் வளர்ச்சி குறித்த முதல் காலாண்டு புள்ளிவிவரங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு திருப்திகரமாக இல்லாதது சென்ற வாரம் திங்கட்கிழமை காப்பரின் விலை குறைய காரணமாக அமைந்தது. காப்பரை அதிகளவில் சீனா பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காப்பரை அதிகளவில் உற்பத்தி செய்யும் சிலி நாட்டின் எஸ்காண்டிடா சுரங்கத்தில் மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த ஒன்பது மாதங்களில் 61 சதவிகிதம் காப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2012 - 2013-ம் ஆண்டில் 20 சதவிகிதம் வரை உற்பத்தி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் வாரத்தில் அடிப்படை உலோகங்கள் விலை குறைந்தே வர்த்தகமாகும்.
வெள்ளி !

கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்தது. ஏப்ரல் 12-ம் தேதியன்று ஒரு கிலோ 51,509 ரூபாயில் இருந்த வெள்ளியின் விலை ஏப்ரல் 18-ம் தேதியில் 43,175 ரூபாய் வரை இறங்கியது. சென்ற வாரத்தில் அமெரிக்காவில் வெளியான சில பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் வெள்ளிக்குச் சாதகமாக வந்தாலும், மொத்தத்தில் பார்க்கும்போது வெள்ளியின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. தற்போது 43,437 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த விலை வீழ்ச்சியைப் பயன்படுத்தி வெள்ளியை வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது நல்லது.
- பானுமதி அருணாசலம்.

