Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் - விநியோகஸ்தராக மாற என்ன செய்ய வேண்டும் ?

மியூச்சுவல் ஃபண்ட் - விநியோகஸ்தராக மாற என்ன செய்ய வேண்டும் ?

மியூச்சுவல் ஃபண்ட் - விநியோகஸ்தராக மாற என்ன செய்ய வேண்டும் ?

மியூச்சுவல் ஃபண்ட் - விநியோகஸ்தராக மாற என்ன செய்ய வேண்டும் ?

Published:Updated:

 கேள்வி - பதில்

##~##

நான் தற்போது இன்ஷூரன்ஸ் ஏஜென்டாகப் பணிபுரிகிறேன். மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராக மாற ஆசை. அதற்கான தகுதிகள் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- தர்மராஜன், சிதம்பரம்.

அழகப்பன், நிதி ஆலோசகர்.

''இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின்(செபி) கீழ் இயங்கும் என்.ஐ.எஸ்.எம்.

(National Institute of Securities Markets) மூலம் நடத்தப்படும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தருக் கான தகுதி தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும். இதன் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் அசோசியேஷனுக்கு (The Association of Mutual Funds in India) விண்ணப்பித்து,  மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராகச் செயல்படுவதற்கு பதிவு எண் வாங்கவேண்டும். இந்தப் பதிவு எண் வாங்கியபிறகு ஒவ்வொரு ஃபண்ட் நிறுவனங்களையும் அணுகி, அவர்களது ஃபண்டை விநியோகம் செய்வதற்குரிய உரிமையை வாங்கிக்கொண்டால் ஃபண்ட் விநியோகஸ்தராகச் செயல்படலாம்.''

விவசாய வருமானத்தை வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருந்தால் பான் கார்டு தரவேண்டுமா?

- கோவர்த்தன், திருப்பூர்.

சத்தியநாராயணன், ஆடிட்டர்.

மியூச்சுவல் ஃபண்ட் - விநியோகஸ்தராக மாற என்ன செய்ய வேண்டும் ?

''வங்கி வைப்பு நிதியிலிருந்து ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் கிடைக்கும்பட்சத்தில் பான் கார்டு அவசியம் கொடுக்கவேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில் அந்த வருமானத்திலிருந்து 20 சதவிகிதம் டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படும். மேலும், பான் கார்டுடன் 15ஜி அல்லது 15ஹெச் படிவம் கொடுக்கும்பட்சத்தில் டி.டி.எஸ். பிடிக்கமாட்டார்கள். முதலீட்டை பொறுத்தவரை, அது விவசாய வருமானம், இதர வருமானம் என்கிற வித்தியாசம் இல்லை.''

எனது வயது 35, மாத வருமானம் 20,000 ரூபாய். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் எடுக்க விரும்புகிறேன். எவ்வளவு தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம்?  

- சின்னத்தம்பி, கோயம்புத்தூர்.

பத்மநாபன், நிதி ஆலோசகர்.

''உங்களது ஆண்டு வருமானத்தைப்போல் சுமார் 10 மடங்கு தொகைக்கு டேர்ம் ப்ளான் எடுத்துக்கொள்வது அவசியம். இதன்படி பார்த்தால், சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளவும். இதற்கு பிரீமியத் தொகையாக ஆண்டிற்கு சுமார் 9,000 ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும், உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் 3 லட்சம் ரூபாய் என்கிற அளவில் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும்.''

சட்டப் பணிகள் ஆணைக்குழு என்றால் என்ன? அதன் வேலை என்ன?

- தில்லைராஜன், செங்கல்பட்டு.

என்.ரமேஷ், வழக்கறிஞர்.

''தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் நீதிமன்றங்களுடன் இணைந்து சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்படுகின்றது. இந்த சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நோக்கம், பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோர்களுக்கு சட்ட விழிப்பு உணர்வு மற்றும் சட்ட உதவி செய்வதாகும். அதாவது, பணமில்லை என்கிற காரணத்தாலோ அல்லது சட்ட ஆலோசனை இல்லாத காரணத்தினாலோ ஒருவர் தன்னுடைய உரிமையை இழந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குதல் மற்றும் இலவச வழக்கறிஞர் ஏற்பாடு செய்து கொடுப்பதும், மக்கள் நீதிமன்றங்களை (லோக் அதாலத்) நடத்துவதும் சட்ட பணிகள் குழுவின் வேலை.''

மியூச்சுவல் ஃபண்ட் - விநியோகஸ்தராக மாற என்ன செய்ய வேண்டும் ?

நான் ஒரு எலெக்ட்ரானிக் பொருள் வாங்கினேன். இதற்கு எங்கள் ஊரில் சர்வீஸ் சென்டர் இருந்தது. அந்தப் பொருளை வாங்க இதுவும் ஒரு காரணம். ஆனால், சமீபத்தில் அந்த சர்வீஸ் சென்டரை மூடிவிட்டனர். இதனால் எனக்கு அந்தப் பொருளை சர்வீஸ் செய்ய அலைச்சல் அதிகமாகும். இதற்கு அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

- பிரேம்நாத், திருத்தணி.

குணசேகரன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''நிறுவனம் தனது வசதிக்கேற்ப சர்வீஸ் சென்டரை அமைக்கவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றம் செய்துகொள்வதையோ, வாடிக்கையாளர் சேவைக் குறைபாடாகச் சொல்ல முடியாது. உங்கள் ஊரிலிருந்து சர்வீஸ் சென்டரை மாற்றினாலும், உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் குறிப்பிடும் நாளில் அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள சேவைகளுக்கு ஏற்ப உங்கள் இடத்திற்கு வந்து சர்வீஸ் செய்துதந்தால், இந்த இடமாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை கோர முடியாது. ஆனால், புதிய இடத்திற்கு வந்து சர்வீஸ் செய்துகொள்ளும்படி உங்களை அலையவைத்தால் அது சேவைக் குறைபாடுதான். அந்த நிலையில், அந்நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலம் நீங்கள் வழக்குத் தொடரலாம்.''  

நான் சமீபத்தில் ஒரு வீட்டு மனை வாங்கியுள்ளேன். ஒதுக்குப்புறமான இடமாக உள்ளதால், அந்த இடத்தில் வீடுகட்டி குடியேற சில ஆண்டுகள் ஆகும். அந்த நிலையில் அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் இருக்க எந்தெந்த வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் - விநியோகஸ்தராக மாற என்ன செய்ய வேண்டும் ?

- ம.ஸ்ரீனிவாசன், திண்டுக்கல்.

விநோத், இயக்குநர், அன்பு ரியால்டர்ஸ், சென்னை.

''உங்கள் வீட்டு மனைக்குரிய அனைத்து ஆவணங்களையும் முதலில் உங்கள் பெயரில் இருப்பதுபோல பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அடுத்ததாக, வீட்டு மனையைச் சுற்றி நான்கு பக்கமும் முள்வேலி அமைத்துக்கொள்ளலாம். அந்த இடத்திற்குரிய மனை வரியைத் தொடர்ந்து கட்டிவருவது, அருகாமையிலுள்ள இடமாக இருந்தால் மாதம் ஒருமுறையாவது சென்று பார்த்து வருவது அல்லது இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாகச் சென்று பார்ப்பது என்பதை வழக்கமாக்கிக்கொள்ளவும். மேலும், வாய்ப்பிருந்தால் சிறிய அளவில் கட்டடம் கட்டி மின் இணைப்பு பெறுவது, மரம் நட்டு வளர்ப்பது என பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.''

மியூச்சுவல் ஃபண்ட் - விநியோகஸ்தராக மாற என்ன செய்ய வேண்டும் ?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism