Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

Published:Updated:

வர்த்தகம்

 மிளகு! (Pepper)

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய மிளகு கான்ட்ராக்ட் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், சென்ற வாரத்தில் மிளகு விலை குறைந்து வர்த்தகமானது. என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் மே 20-ம் தேதியுடன் முடியும் கான்ட்ராக்ட் மட்டுமே தற்போது வர்த்தகத்தில் உள்ளது. வேறு கான்ட்ராக்ட்கள் இல்லாததால் மிளகு வர்த்தகம் என்னாகுமோ என்ற பயத்தில் வர்த்தகர்கள் இருக்கிறார்கள்.

2013, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் வியட்நாம் 261 மில்லியன் டாலர் மதிப்பிலான 39,000 டன் மிளகை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே, சென்ற வருடத்தில் 31,000 டன் மிளகு ஏற்றுமதி செய்ததாக இன்டர்நேஷனல் பெப்பர் கம்யூனிட்டி தெரிவித்துள்ளது. பருவநிலை சரியில்லாத காரணத்தால், வியட்நாமில் மிளகு உற்பத்தி இந்தாண்டு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலே அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு உற்பத்தியும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் மிளகு ஏற்றுமதி 2012 ஏப்ரல் - 2013 ஜனவரி வரையிலான காலகட்டத்தில்

48 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும், இந்தியாவில் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட மிளகின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மிளகு கான்ட்ராக்ட் பிரச்னை தாமதமாகி வருவதால், இந்த வாரத்திலும் மிளகு விலை குறைந்து வர்த்தகமாக வாய்ப்புண்டு.

அக்ரி கமாடிட்டி !

ஜீரகம்! (Jeera)

ஸ்பாட் சந்தைகளில் ஜீரகத்தின் வரவு அதிகமாக இருந்ததாலும், லாபத்தை எடுக்க பலரும் விற்கத் தொடங்கியதாலும், வார ஆரம்பத்தில் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமானது. எனினும், உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகமாக இருந்ததால் விலை மேலும் இறங்காமல் தடுக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் உஞ்ஹா சந்தைக்கு 24,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) சென்ற வாரத்தில் வரத்து வந்தது. இதில் 100 கிலோ 13,700 ரூபாய்க்கு வர்த்தகமானது. குறுகியகாலத்தில் பார்க்கும்போது நல்ல ஏற்றுமதி டிமாண்ட் இருக்கும் என்றும், துருக்கி மற்றும் சிரியா நாட்டில் உற்பத்தி குறைந்திருப்பதால் வரும் மாதங்களில் இந்திய ஜீரகத்திற்கு நல்ல டிமாண்ட் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 2012 - 2013 ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை இந்தியாவின் ஜீரக ஏற்றுமதி 86 சதவிகிதம் அதிகரித்து 64,400 டன்னாக உள்ளது. வரும் நாட்களில் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வாரத்தில் விலை குறைந்தே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

அக்ரி கமாடிட்டி !

மஞ்சள்! (Turmeric)

வரத்து அதிகமாக இருந்த காரணத்தால் சென்ற வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. வரும் நாட்களிலும் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் விலை குறைய வாய்ப்புள்ளது. நிஜாமாபாத் சந்தையில் 10,000 பைகளும் (ஒரு பை என்பது 70 கிலோ) ஈரோடு சந்தைக்கு 7,000 பைகளும் மஞ்சள் வரத்து சென்ற வாரத்தில் இருந்தது. வரும் நாட்களில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உற்பத்தி குறைவாக இருப்பதால் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. 2012-2013-ல் மஞ்சள் உற்பத்தி 20 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. ஆந்திராவில் மஞ்சள் பயிரிடும் பரப்பளவு 25 சதவிகிதம் வரை

அக்ரி கமாடிட்டி !

குறைந்து 49,349 ஹெக்டேராக உள்ளது.

ஏலக்காய்! (Cardamom)

வரத்து அதிகமாக இருந்தது மற்றும் தரம் குறைந்த ஏலக்காய் வரத்து ஆகிய காரணங்களால் ஏலக்காய் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. நூறு கிலோ ஏலக்காய் 577 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 967 ரூபாய்க்கும் விலை கேட்கப்பட்டது. தரம் குறைந்த ஏலக்காய் விற்பனைக்கு வந்ததால் கடந்த சில நாட்களாக விலை குறைந்தே வர்த்தகமானது. எனினும், வரத்துக் குறைவு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் நடுத்தர காலத்தில் விலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம் தென்படுகின்றது. ஏலக்காய் விளையும் முக்கிய பகுதிகளில் கடந்த வருடத்தில் 20-25 சதவிகிதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிளகாய்! (Chilli)

உற்பத்தியான மிளகாயின் தரம் சரியில்லாததால் உள்நாட்டுத் தேவையும் வெளிநாட்டு ஆர்டர்களும் குறைந்ததாலும் மிளகாய் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தக மானது. மிளகாய் அதிகமாக விளையும் ஆந்திராவில் மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த மிளகாய் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சந்தைக்கு வந்துகொண்டிருக்கும் மிளகாயின் தரம் சரியில்லாத காரணத்தால் நல்ல மிளகாய் வரும் என்ற எதிர்பார்ப்பால் வர்த்தகம் சூடுபிடிக்காமல் உள்ளது. வரத்து காலம் முடியப்போவதால் வரும் நாட்களில் வரத்து குறையும் என கூறப்படுகிறது. மேலும், கடந்த வருடத்தைவிட இந்த வருடம் 30 சதவிகிதம் வரை உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism