Published:Updated:

களைப்பைப் போக்கும் கார்ப்பரேட் சுற்றுலா !

வா.கார்த்திகேயன்.

களைப்பைப் போக்கும் கார்ப்பரேட் சுற்றுலா !

வா.கார்த்திகேயன்.

Published:Updated:

சில வருடங்களுக்கு முன்பு வரை, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள  சம்பள உயர்வு மட்டுமே போதுமான ஆயுதமாக இருந்தது பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு. இப்போது சம்பள உயர்வோடு, வேறு சில சலுகைகளை ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால், பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பல விஷயங்களைச் செய்கின்றன.

தமிழகத்தில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை எங்கு சுற்றுலா அழைத்து செல்கின்றன?, ஊழியர்கள் எந்த ஊருக்கு சுற்றுலாச் செல்வதை விரும்புகிறார்கள்?, இதற்கு எவ்வளவு செலவாகும்? என்பது உள்ளிட்ட பல விஷயங்களை கிராஸ்வுட்ஸ் நிறுவனத்தின் சுற்றுலாப் பிரிவு தலைவர் பாரத்நேசனிடம் கேட்டோம். பல விஷயங்களை எடுத்துச் சொன்னார் அவர்.

''கார்ப்பரேட் ஊழியர்களால் அதிகபட்சம் 2 இரவு, 3 பகல் என்ற அளவில் மட்டுமே வெளியில் தங்கமுடியும். அதனால், வட இந்தியாவுக்கு சுற்றுலாச் செல்வதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் விரும்புவது தென் மாநிலங்களைத்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்பெல்லாம் சுற்றுலாச் சென்றால் நகரின் மையமாக இருக்கும் ஓட்டல்களில் தங்கி, அங்கிருக்கும் முக்கிய இடங்களைச் சுற்றிப்பார்த்து விட்டு, திரும்பிவிடுவார்கள். ஆனால், இப்போது சுற்றுலாச் செல்பவர்கள் சத்தமே இல்லாத புறநகரில் இருக்கும் ரிசார்ட்களில் தங்குவதையே அதிகம் விரும்புகிறார்கள். அதனால்தான் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை தொடர்ச்சியாக பல ரிசார்ட்கள் இருக்கின்றன. மனதை வருடும் கடல் காற்று, பீச் மணலில் பேஸ்கெட் பால் ஆட்டம் என ரம்மியமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள்.

களைப்பைப் போக்கும் கார்ப்பரேட் சுற்றுலா !

அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் அட்வெஞ்சரையும் எதிர்பார்க்கிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்கள். மலை ஏறுதல், ஆறுகளைக் கடத்தல், டிரெக்கிங் உள்ளிட்ட திரில்லிங்கான விஷயங்கள் எங்கு கிடைக்கிறதோ, அங்கு செல்வதையே விரும்புகிறார்கள்.

சென்னையில் இருந்து ஆந்திரா பக்கம்தான் என்றாலும், அங்கு கார்ப்பரேட்கள் சுற்றுலாச் செல்ல விரும்புவதில்லை. திருப்பதி, காளஹஸ்தி, சிவசைலம் உள்ளிட்ட ஆன்மிக இடங்கள்தான் இருக்கிறது. இருந்தாலும் தடா, விசாகப்பட்டினம் அருகே இருக்கும் அரக்குவேலி ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்கள்.

கேரளா:

கேரளாவில் கார்ப்பரேட் ஊழியர்கள் பார்த்து ரசிக்க விரும்பும் இடங்கள் பல இருக்கின்றன. மூணாறுக்கு மேலே காந்தளூர் என்று ஓர் இடம் இருக்கிறது. இங்கு ஆப்பிள் தோட்டம் இருக்கிறது. மேலும், டாப் ஸ்டேஷன், கொழுக்கு மலை (இங்கு அதிக உயரத்தில் ஒரு தேயிலை தொழிற்சாலை இருக்கிறது), தென் இந்தியாவின் சிகரமான ஆனைமுடி உச்சியும் இருக்கிறது.

களைப்பைப் போக்கும் கார்ப்பரேட் சுற்றுலா !

தேக்கடியில் கவி (Gavi) என்ற பகுதி இருக்கிறது. வாகமன் (Vagamon)மலைப்பகுதி முழுக்க புல்வெளியாகவே இருக்கும். இங்கு ஆண்டுதோறும் பாராகிளைடிங் வீரர்கள் வருவார்கள். இந்த இடத்துக்கு ஜீப்களில் மட்டுமே செல்ல முடியும். ஆலப்புழையில் மராரி (Marari)கடற்கரை பார்க்கவேண்டிய ஒன்று. திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் பூவார் தீவு இருக்கிறது.

* வயநாடு மலைப்பிரதேசமாக இருந்தாலும் அங்கு இருக்கும் நீர்நிலைகளில் குருவா தீவு (Kuruva island) இருக்கிறது. அங்கு படகில்தான் செல்லவேண்டும். அது புது அனுபவமாக இருக்கும். பாலக்காட்டுக்கு அருகே சைலன்ட் வேலி என்று ஓர் இடம் இருக்கிறது. மக்கள் அதிகம் செல்லாத காடுகள் இங்கு இருக்கிறது.

கர்நாடகா!

கர்நாடகாவிலும் தங்கி, இருந்து அனுபவிக்க பல இடங்களைத் தேர்வு செய்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். கூர்க் - இங்கு காபித் தோட்டங்கள் நிறைய இருக்கிறது. அதேபோல, தலைக்காவிரியைப் போய் பார்க்கலாம். தவிர, நிறைய நீர்விழ்ச்சிகளும் இருக்கிறது.  ஷிமோகாவில் அகுமா என்ற காட்டுப் பகுதியில் நிறைய பாம்புகள் இருக்கிறது. ஜோக் அருவி மற்றும் வேறு அருவிகளும் இருக்கிறது. மைசூர், சிக்மகளூர் உள்ளிட்ட நிறைய இடங்களும் இருக்கிறது.

தமிழ்நாடு:

தமிழகத்தின் சிம்லாவான ஊட்டியில் அனைவரும் பார்க்கும் இடங்களைத் தவிர, அவலாஞ்ச், முக்கூர்த்தி போன்ற இடங்களுக்குச் செல்லலாம்.

களைப்பைப் போக்கும் கார்ப்பரேட் சுற்றுலா !

வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் இருக்கும் பாதை மிகவும் திரில்லாக இருக்கும். வால்பாறையில் மானம்பள்ளி காடுகள், அக்காமலை புல்வெளி மலை (இங்கு முன் அனுமதி இருந்தால் மட்டுமே செல்ல முடியும்) உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லலாம்.

இவை தவிர, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, மசினங்குடி, டாப் ஸ்லிப் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லலாம்.

எவ்வளவு செலவாகும்?

பல சமயங்களில் மொத்த செலவையும் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களே ஏற்றுக்கொள்கின்றன. சில சமயம் நிறுவனங்கள் பாதியும், பணியாளர்கள் பாதியும் ஏற்றுக் கொள்கிறார்கள். சராசரியாக 2 பகல், 1  இரவு சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் வரை செலவாகும் (10 பேர் இருக்கும் குழுவுக்கு). சென்னையிலிருந்து ரயில் மூலமாகச் சென்று, அடிப்படை வசதி இருக்கும் ஓட்டல்களில் தங்கி சாப்பிடுவது வரை அனைத்து செலவுகளும் இதில் அடங்கும். சௌகர்யங்கள் அதிகம் எதிர்பார்த்தால்,  செலவுகளும் அதிகரிக்கும்.

ஆண்டு முழுக்க அலுவலகத்தில் பல வேலை களில் சிக்கி சோர்ந்து போகிற ஊழியர்கள் இது மாதிரியான சுற்றுலாக்களுக்கு ஒரு சில தினங்கள் வந்துபோனாலே தெம்பாகி விடுகிறார்கள் என்பதால் கார்ப்பரேட்டுகள் செலவு என்று பார்க்காமல், ஊழியர்களை இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறையாவது எங்காவது ஓர் இடத் திற்கு அழைத்துச் செல்கிறது'' என்றார் பாரத்.

கார்ப்பரேட் ஊழியர்கள் இனி ஒவ்வொரு வருஷமும் டூர் போகலாமே!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism