Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

பானுமதி அருணாசலம்.

Published:Updated:

வர்த்தகம்

##~##

இந்த வாரம் தங்கத்தின் நிலவரம் குறித்து விளக்கமாக கூறுகிறார் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் கமாடிட்டி கிளஸ்டர் ஹெட் சிவக்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கம்!

''அமெரிக்காவின் ஜி.டி.பி. வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்கள் செலவிடும் விகிதம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் மீது முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. அமெரிக்காவின் ஜி.டி.பி. வளர்ச்சி முதல் காலாண்டில் 3 சதவிகிதமாக இருக்குமென 86 பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்ததற்கு மாறாக 2.5 சதவிகிதமாக வந்துள்ளது. மேலும், அமெரிக்க கன்ஸ்யூமர் சென்டிமென்ட் இண்டெக்ஸும் குறைந்துள்ளது. கோல்டு இ.டி.எஃப்.-ல் முதலீடும் 2294.5 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. இது 2011 அக்டோபர் மாதத்திற்கு பிறகான குறைந்த அளவாகும்.

இந்த வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை 15 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. மத்திய வங்கிகள் தங்கத்தை விற்றதும், அமெரிக்காவின் மானிட்டரி பாலிசி குறித்த பயமும் தங்கத்தின் மீது முதலீடு செய்வதைத் தடுத்தன. உலகின் மிகப் பெரிய இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். நிறுவனத்தில் தங்கம் 0.68 சதவிகிதம் குறைந்து 1097.19 டன்னாக உள்ளது. இது 2009 அக்டோபர் மாதத்திற்கு பின் உள்ள குறைவான நிலையாகும்.

கமாடிட்டி - (மெட்டல் -  ஆயில்)
கமாடிட்டி - (மெட்டல் -  ஆயில்)

இந்தியாவில் இந்த மாதத்தில் தங்க இறக்குமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தைப் பொறுத்தவரை, சர்வதேச தங்கம் விலை 1,450 - 1,550 டாலராக இருக்குமென ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்த வாரத்தில் தங்கம் 26,184 -27,264 ரூபாய் என்ற ரீதியில் வர்த்தகமாகும். இதிலிருந்து 27,450 என்ற நிலையைத் தாண்டி பிரேக் ஆனால் 29,767 ரூபாய் இலக்கு விலையாகக்கொள்ளலாம். அதுவே 26,360 ரூபாய் நிலையை உடைத்து கீழே சென்றால் 25,100 வரை இறங்கலாம்.''

வெள்ளி!

சென்ற வாரத்தில் எம்.சி.எக்ஸ். சந்தையில் வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமானது. சென்ற வெள்ளிக்கிழமையன்று ஏப்ரல் கான்ட்ராக்ட் 44,500 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஏப்ரல் 25-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உலகின் மிகப் பெரிய சில்வர் இ.டி.எஃப். நிறுவனமான ஐ-ஷேர்ஸ் நிறுவனத்தில் வெள்ளி முதலீடு அதிகரித்து 10,366.89 டன்னாக இருந்துள்ளது. எம்.சி.எக்ஸ். சந்தையில் 46,300 ரூபாயைத் தாண்டாதவரை, விலை இறக்கத்தில் இருக்கும்.

கமாடிட்டி - (மெட்டல் -  ஆயில்)

கச்சா எண்ணெய்!

அமெரிக்காவில் வேலையில்லாததால் உதவித்தொகை பெறும் நபர்களின் எண்ணிக்கை சென்ற வாரத்தில் குறைந்ததை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது. இது, பொருளாதார நிலவரங்கள் அங்கு முன்னேறி வருவதைக் காட்டுவதாக முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். மேலும், மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக சப்ளை பாதிக்கப்படும் என்ற தகவலும் கச்சா எண்ணெய் விலையில் பிரதிபலித்தது. அமெரிக்காவின் ஜி.டி.பி. வளர்ச்சி மற்றும் ஜப்பான் நாட்டின் மானிட்டரி பாலிசி உள்ளிட்டவைகள் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்கும் காரணிகளாக அமையும் என கூறப்படுகிறது.

கமாடிட்டி - (மெட்டல் -  ஆயில்)

இயற்கை எரிவாயு!

எதிர்பார்த்ததைவிட இன்வென்ட்டரி குறைந்ததால் சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயு விலை அதிகரித்து வர்த்தகமானது. அமெரிக்காவின் எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ள தகவலின் படி, 30 பில்லியன் கியூபிக் ஃபீட் ஸ்டோரேஜ் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குளிர் குறைந்து வெப்பமான சூழ்நிலை உருவாகி உள்ளதால் இயற்கை எரிவாயுக்கான டிமாண்ட் குறையும். அதனால், இந்த வாரத்தில் இயற்கை எரிவாயு விலை குறைந்து வர்த்தகமாகும்.

அடிப்படை உலோகங்கள்!

கமாடிட்டி - (மெட்டல் -  ஆயில்)

சீனாவில் தொழிற்சாலைத் தேவைகள் அதிகரித்து வருவதால் சென்ற வாரத்தில் காப்பரின் விலை அதிகரித்து வர்த்தகமானது. மேலும், ஐரோப்பாவின் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் மற்றும் சீனாவின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்கள் காப்பரின் இந்த விலை அதிகரிப்பிற்கு காரணம். இதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் வேலையில்லாத நபர்களுக்கு உதவித் தொகை வழங்குவது குறைந்துள்ளதும் அடிப்படை உலோகத்தின் விலை அதிகரிப்பிற்கு காரணம். அமெரிக்காவின் ஜி.டி.பி. அதிகரிப்பு மற்றும் சீனாவின் டிமாண்ட் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த வாரத்திலும் அடிப்படை உலோகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

கமாடிட்டி - (மெட்டல் -  ஆயில்)
கமாடிட்டி - (மெட்டல் -  ஆயில்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism