Published:Updated:

ஷேர்லக் - அவசரப்பட வேண்டாம்!

ஷேர்லக் - அவசரப்பட வேண்டாம்!

ஷேர்லக் - அவசரப்பட வேண்டாம்!

ஷேர்லக் - அவசரப்பட வேண்டாம்!

Published:Updated:
##~##

''அளவுக்கதிகமாக பில்டப் செய்தால் கடைசியில் இப்படித்தான் நடக்கும்!'' - வந்து உட்கார்ந்தவுடன் இப்படிச் சொன்னார் ஷேர்லக். வெறும் கால் சதவிகிதம் அளவுக்கு மட்டுமே ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தைக் குறைத்தது பற்றிதான் அவர் பேசுகிறார் என்று புரிந்தது!

''வட்டி விகிதம் மற்றும் ரொக்க கையிருப்பு விகிதம் ( சி.ஆர்.ஆர்.) போன்றவற்றை கணிசமான அளவுக்கு ஆர்.பி.ஐ. குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பினால் கடந்த இரு வாரங்களாக பங்குச் சந்தை குறிப்பாக, வங்கி மற்றும் வாகனத் துறை பங்குகளின் விலை வேகமாக அதிகரித்து வந்தன. ஆனால், வட்டி விகிதத்தை மட்டும் 0.25% ஆர்.பி.ஐ. குறைத்ததால் வெள்ளிக்கிழமை அன்று சந்தை இறங்க ஆரம்பித்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் கணிசமான அளவு இறங்கின. அதேநேரத்தில், இன்ஃபோசிஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ, ஆர்.பி.எல்., சன் பார்மா, எல் அண்ட் டி பங்குகளின் விலை ஏறியதால் சந்தை பெரிய அளவில் இறங்காமல் தப்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் - அவசரப்பட வேண்டாம்!

என்றாலும், வரும் வாரங்களில் சந்தை இன்னும் இறங்கவே வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் என் மும்பை நண்பர்கள். இதற்கு பல காரணங்களை சொல்கிறார்கள். முதலாவது காரணம், வட்டி விகிதம் தந்த ஏமாற்றம்; அடுத்து, இன்னும் சில மாதங்களில் புரமோட்டர்கள் 75 சதவிகிதத்திற்கு மேல்  பங்குகளை வைத்திருக்கக்கூடாது என்பதால் பல நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்கப் போகிறது. கிட்டத்தட்ட 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பங்குகள் விற்பனைக்கு வருவதால், நல்ல அடிப்படை உள்ள நிறுவனங்களைத் தவிர, பல நிறுவனப் பங்குகளின் விலை குறைய வாய்ப்புண்டு. தவிர, வரும் திங்களன்று கோப்ரா போஸ்ட் இணையதளத்தினர், வங்கிகள் எப்படி எல்லாம் பிராடு வேலைகளைச் செய்கின்றன என மீடியாக்களிடம் சொல்லப் போகிறார்களாம். இதனாலும் வங்கிப் பங்குகள் விலை ஆட்டம் காண வாய்ப்பிருக்கிறது.

எனவே, முதலீட்டாளர்கள் இப்போதைக்கு அவசரப்பட்டு அத்தனை பணத்தையும் பங்குகளில் போடாமல், சந்தை இறங்க இறங்க கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது நல்லது!'' - என நீண்ட விளக்கம் தந்து பேசினார் ஷேர்லக். அவருக்கு சில்லென்று ரோஸ் மில்க் தந்தோம்.  

''ஒரே மாதத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கு இரண்டு மடங்காகிவிட்டது. இந்த அளவுக்கு இல்லை என்றாலும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கு கொஞ்சம் வேகமாக உயர வாய்ப்பு இருக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று சந்தை சரிந்தபோதிலும் இந்தப் பங்கு சரியவில்லை. ரிலையன்ஸ் கேப்பிட்டல் வசம் பல பிஸினஸ்கள் இருக்கிறது. இதில் ஒரு பிஸினஸை முகேஷ் வாங்கப் போவதாக ஒரு பேச்சு. மேலும், மற்ற பிஸினஸ்களில் வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகச் செய்தி. வங்கி லைசென்ஸ் இந்த நிறுவனத்துக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது கூடுதல் தகவல். இந்தப் பங்கின் மீது ஒரு கண் வைத்து கவனிப்பது நல்லது. இரண்டு மூன்று வருட காலத்தில் நல்ல வருமானத்தைக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது'' என்றபடி, ரோஸ் மில்க்கை குடித்து முடித்தார்.

''கனரா பேங்க் மற்றும் ஐ.ஓ.பி. நிகர லாபம்  வீழ்ச்சி அடைந்திருக்கிறதே..?'' என்றோம்.

''வாராக் கடனுக்கு அதிக தொகையை ஒதுக்கீடு செய்ததே காரணம். நடப்பு காலாண்டில் வாராக் கடனை கணிசமாக குறைக்க இவ்விரு பொதுத் துறை வங்கிகளும் திட்டமிட்டிருப்பதால் நிகர லாபம் மீண்டும் அதிகரிக்க அதிக வாய்ப்புண்டு''  என்றார்.

''அண்மையில் ஐ.பி.ஓ. வந்த ஸ்காட்ஸ் கார்மென்ட்ஸ் நிறுவனம் திணறிவிட்டதே?'' என்று கேட்டோம். .

''கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து ஐ.பி.ஓ. வந்தும் போதிய அளவுக்கு ஆதரவு இல்லை. இதைப் பார்த்த அந்நிறுவனம் முதலில் ஐ.பி.ஓ. முடியும் தேதியைத் தள்ளிவைத்தும், விலைப்பட்டையைக் குறைத்தும் பார்த்தது. ஆனாலும், போதிய அளவுக்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வரவில்லை. வெறும் 0.27 மடங்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இப்போதுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் ஐ.பி.ஓ.வில் சுத்தமாக ஆர்வம் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத மத்திய அரசாங்கம் விரைவில் சுமார் 30 பொதுத் துறை நிறுவனங்களின், சுமார் 10% பங்குகளை விற்கும் முயற்சியில் இறங்கப் போவதாக தகவல். ஏற்கெனவே அதிக பணத்தைக் கையில் வைத்திருக்கும் அரசு பொதுத் துறை நிறுவனங்கள், இந்தப் பங்குகளை

ஷேர்லக் - அவசரப்பட வேண்டாம்!

வாங்க அரசு ஐடியா தந்திருக்கிறது. இதற்கான நடைமுறைகளை ஆராய செயில் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் எஸ்.கே. ரூங்தா தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் கடந்த ஏப்ரல் 23-ல் நடந்திருக்கிறது.

நாட்டிலுள்ள 260 பொதுத் துறை நிறுவனங்களில் 50 கம்பெனிகள் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் சுமார் 100 பொதுத் துறை நிறுவனங்கள் கடந்த மூன்றாண்டுகளாக லாபம் ஈட்டி வருகின்றன. மேலும், பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில் பொதுமக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் 25% இருக்க வேண்டும் என்கிற செபியின் விதிமுறையைப் பின்பற்ற பல நிறுவனங்கள் பங்கு விற்பனையில் இறங்க இருக்கின்றன. இதனால் நல்ல நிறுவனங்களின் பங்குகள் மலிவான விலையில் கிடைக்க வாய்ப்புண்டு. இப்போதே பணத்தைத் தயாராக வைத்து காத்திருங்கள்!''

''ஹெச்.யூ.எல். பங்கு பைபேக் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறதே?'' என்றோம்.

''கடந்த வாரம் சந்தையை அசத்தியதே ஹெச்.யூ.எல். பங்குதான். இந்த நிறுவனம் ஓபன் ஆஃபர் கொடுத்ததன் காரணமாக 477 ரூபாயில் வர்த்தகமான பங்கு வெள்ளிக்கிழமை மாலை 572 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. ஹெச்.யூ.எல். நிறுவனம் 600 ரூபாய்க்கு வாங்குவதாகச் சொல்லி இருந்தாலும், இந்த நிலையில் முதலீட்டாளர்கள் அந்தப் பங்கில் முதலீடு செய்வது லாபமாக இருக்காது. யாராவது வைத்திருந்தால் அந்தப் பங்கினை ஓபன் ஆஃபரில் தள்ளிவிடுவது நல்லது. இப்போது பி.இ. உள்ளிட்ட விகிதங்கள் அதிகமாக இருப்பதாகவே தோன்றுகிறது'' என்றவர், புறப்படத் தயாரானார்.

''இந்த வாரமும் ஷேர் டிப்ஸ் இல்லையா?'' என்று கேட்டோம்.

''இல்லை. சந்தை இறங்க ஆரம்பித்தால், பெரிதாக இறங்க வாய்ப்புண்டு என்பதால் இந்த வாரமும் டிப்ஸ் வேண்டாம். ஆனால், அக்னி வெயில் மண்டையைப் பிளப்பதால், வோல்டாஸ், ஹிட்டாச்சி உள்ளிட்ட ஏ.சி. நிறுவனங்களின் பங்கு விலையில் ஒரு ஜெர்க் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நான் அடுத்த வாரக் கடைசியில் கொடைக்கானலுக்குப் போய்விடுவதால், மெயிலில்தான் மேட்டர் அனுப்புவேன்'' என்று சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism