Published:Updated:

தங்கம் தந்த லாபம்!

சி.சரவணன், பானுமதி அருணாசலம்.

தங்கம் தந்த லாபம்!

சி.சரவணன், பானுமதி அருணாசலம்.

Published:Updated:

வரலாறு!

##~##

தங்கத்துக்கும் தமிழர்களுக்குமான நெருக்கம் அளவிட முடியாதது. பெண்களுக்கு இதன் மீது அளவில்லா ஆவல் வரக் காரணம், அதைப் போட்டு அழகு பார்ப்பதோடு, அவசர நேரத்தில் பணம் புரட்ட உதவியாக இருக்கும் என்பதால்தான். கூடவே, தங்கத்தின் விலையும் கணிசமாக அதிகரித்து வருவதால் அது சிறந்த முதலீட்டு சாதனமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை விளக்கிச் சொன்னார், கமாடிட்டி நிபுணர் ஷ்யாம் சுந்தர்.

''1962-ம் ஆண்டு வரை உலக நாடுகளில் இந்தியா ஒரு மிகப் பெரிய தங்க வர்த்தக நாடாகவும், அதில் மும்பை வணிக மையமாகவும் இருந்தது. இந்தச் சமயத்தில் இந்திய - சீன போர் மூண்டதால், நமது நாட்டின் தங்கக் கையிருப்பு குறைந்தது. இந்திய அரசு, தங்கக் கட்டுப்பாட்டு சட்டத்தைக் (நிஷீறீபீ சிஷீஸீtக்ஷீஷீறீ கிநீt) கொண்டு வந்தது. இதன்படி, இந்தியக் குடிமக்கள்,  தங்கத்தை கட்டிகளாகவோ,

தங்கம் தந்த லாபம்!

நாணயங்களாகவோ  வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூறியது. அப்படி வைத்திருந்தால், அதைக் கட்டாயமாக ஆபரணத் தங்கமாக மாற்றிக்கொள்ளும்படி ஆணை பிறப்பித்தது. தங்கக் கட்டிகளையும், தங்க நாணயங்களையும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே வைத்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சட்டத்தால் அரசாங்கத்திற்கு தெரியாமல் தங்கச் சந்தை நடக்க ஆரம்பித்தது. இதன்காரணமாக, தங்கக் கடத்தல் அதிகரித்தது.

1971-ல் வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சன் தங்கத்தை டாலருடன் இணைக்க நினைத்தார். ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டாலருக்கு என நிர்ணயிக்கப்பட்டது. இதன்பிறகு தங்கத்தின் விலை அதிகரிக்கத் துவங்கியது. அதன்பிறகு கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு, உலக பணவீக்கத்தை அதிகரித்தது. இது அமெரிக்க பணவீக்கத்தை 11 சதவிகிதமாக அதிகரிக்க வழிவகை செய்தது. இதனால், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. பங்குகள் மற்றும் மற்ற முதலீடுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தங்கம் நல்ல வருமானம் கொடுத்தது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகாரணமாக தங்கம் ஒரு அவுன்ஸ் 850 டாலரைத் தொட்டது. பிறகு அமெரிக்க பொருளாதாரம் முன்னேற துவங்கியதும் 1981-1982-ல் தங்கத்தில் முதலீடு குறைய துவங்கியது. தென் ஆப்பிரிக்க நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் சில சட்டங்களைக் கொண்டு வந்தன. இதன் காரணமாக, தென் ஆப்பிரிக்காவிலிருந்து தங்கத்தை ஏற்றுமதி செய்வது 1986-ம் ஆண்டில் தடை செய்யப் பட்டது.

தங்கம் தந்த லாபம்!

இதனால் ஜூலை முதல் அக்டோபர் மாதத்தில் 23 சதவிகிதம் தங்கத்தின் விலை அதிகரித்தது. பிறகு அமெரிக்காவில் பணவீக்கம் மிகவும் அதிகரித்ததால் ஒரு அவுன்ஸ் தங்கம் 500 டாலருக்குக் கீழேபோனது.

இதன்பிறகு மீண்டும் மெள்ள அதிகரிக்கத் தொடங்கியது தங்கத்தின் விலை. 1996 முதல் 1999 வரை சர்வதேச நிதியம் வளரும் நாடுகளின் கடனைத் தீர்க்க ஐந்து மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை விற்க தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து சுவிஸ் மத்திய வங்கி 1,400 டன் தங்கத்தையும், பிரிட்டன் அரசு 400 டன் தங்கத்தையும் விற்றது. 1999-ம் ஆண்டு தங்கத்திற்கு மிக மோசமான காலமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 252.80 டாலராக கீழே போனது. அதன்பிறகு ஆகஸ்ட் 2005-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், பணவீக்கமும் அதிகரிக்கத் துவங்கியது. இதன் தாக்கமாக தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்தது. 2005 டிசம்பர் மாதத்தில் கடந்த 24 வருடங்களில் இல்லாத அளவிற்கு 536.50 டாலரைத் தொட்டது. டாலரின் மதிப்பு குறைந்ததாலும் 2006-ம் வருடம் வரை இந்த விலை அதிகரிப்பு நீடித்தது.

தங்கம் தந்த லாபம்!

பிறகு உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாக கருதியதால் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்தே வந்தது. டாலரின் மதிப்பு குறைவும் தங்கத்தின் விலையைத் தக்க வைத்துக்கொண்டே வந்தன. 2011-2012-ல் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,889 டாலரைத் தொட, புதிய உச்சத்தைத் தொட்டதும் தங்கத்தின் விலை இனி குறைய வாய்ப்பே இல்லை என அனைவரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால், இந்த ஆண்டில் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு கிட்டத்தட்ட 500 டாலர் வரை இறங்கவே செய்தது. இப்படி உலக நடப்புகளுக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தைப் பிரதிபலித்து வரவே செய்கிறது. குறுகியகால அடிப்படையில் தங்கம் விலை இறங்கினால், நீண்டகால அடிப்படையில் அதன் விலை உயரும் என்பதில் சந்தேகமே இல்லை'' என்று முடித்தார் ஷ்யாம் சுந்தர்.

தங்கத்தின் வரலாற்றை அலசிப்பார்க்கிறவர்கள் அதன் விலை எப்போதும் ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வந்திருப்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். மேலும், சர்வதேச அளவில் பங்குச் சந்தை சரியில்லாத போதும், பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும் தங்கத்தின் விலை உயர்ந்தே வந்திருக்கிறது. உதாரணத்துக்கு, 2007, அக்டோபர் முதல் 2009, மார்ச் வரையில் பங்குச் சந்தை தந்த வருமானம் -59 சதவிகிதமாக இருக்க, இதேகாலத்தில் தங்கம் தந்த லாபம் சுமார் 16%.  

மேலும், பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த காலகட்டத்திலும் தங்கம் தந்த வருமானம் அதிகமாகவே இருந்திருக்கிறது. 2000 முதல் 2010 வரையில் தங்கத்தின் விலை சுமார் 320 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 32% வருமானத்தைத் தந்திருக்கிறது.  (பார்க்க 22 காரட் தங்கம் விலை!)

தங்கம் தந்த லாபம்!
தங்கம் தந்த லாபம்!

கடந்த 20 ஆண்டுகளில் (1993 ஏப்ரல் முதல் 2013 ஏப்ரல் வரை) தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், பங்குச் சந்தை (சென்செக்ஸ்) வருமானத்தை ஒப்பிட்டால் தங்கம் தந்த லாபம் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம், பங்குச் சந்தை ரிஸ்க் உடன் கூடிய வருமானமாக ஆண்டுக்கு சராசரியாக 11.79% வருமானம் தந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் சராசரியாக 9% வருமானம் தந்துள்ளது. ஆனால், தங்கம் அதிக ரிஸ்க் இல்லாமல் சுமார் 9.98% வருமானம் தந்திருக்கிறது. இடையில் தடாலடியாக தங்கத்தின் விலை குறையவில்லை என்றால், தங்கம்தான் அனைத்து முதலீடுகளைவிடவும் கடந்த 20 ஆண்டுகளில் அதிக லாபத்தைத் தந்திருக்கும் என்பதை அட்டவணையைப் பார்த்தால் புரியும்.  

தங்கம் விலை அதிகரித்துகொண்டே போகிறது என்பதற்காக மொத்தமாக தங்கத்தை வாங்காமல் இடையிடையே விலை குறையும்போது வாங்கிச் சேர்த்தால், அதிக லாபம் பார்க்கலாம். மேலும், நீண்டகாலத்தில் தங்கம் நல்ல லாபகரமான முதலீடாகவே இருக்கும். உங்களின் போர்ட்ஃபோலியோவில் உங்கள் தேவையைப் பொறுத்து சுமார் 15 முதல் 20 சதவிகிதம் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism