நடவடிக்கை
##~## |
தங்கம் விலை தொடர்ந்து உயரக் காரணம், கறுப்புப் பணம் தங்கமாக மாறுவதினாலா என்கிற சந்தேகம் மத்திய அரசுக்கு வந்துவிட்டது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனால்தான் தங்கத்தில் கறுப்புப் பணம் நுழைவதைத் தடுக்கும்வகையில் 50,000 ரூபாய்க்கு மேல் தங்க நகை வாங்கினால் கே.ஒய்.சி. (KYC & Know Your Customer)படிவம் நிரப்பித் தருவதோடு, முகவரி மற்றும் அடையாள ஆவணத்தையும் தரவேண்டும் எனச் சொல்லி இருக்கிறது மத்திய அரசாங்கம்.
தவிர, ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கினால், முகவரியுடன் பான் நம்பரும் குறிப்பிடவேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது.
120 கோடிக்கு மேல் மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான மக்களே பான் கார்டு வைத்துள்ளனர். விவசாயிகள் உள்பட இந்தியாவில் இருக்கும் மற்ற 95 சதவிகித மக்கள், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கும்போது, பான் எண் கொடுங்கள் என்று கேட்டால், அவர்களால் அதைத் தரமுடியாது. இல்லாத ஓர் ஆவணத்தைத் தாருங்கள்; அப்போதுதான் தங்கம் வாங்க அனுமதிப்போம் என்று சொல்வது நியாயமில்லை. காரணம், 20 பவுன் நகையின் விலையே 5 லட்சம் ரூபாயைத் தாண்டிவிடும். இன்றையச் சூழ்நிலையில் திருமணத்துக்காக இதைவிட குறைவான நகையை வாங்கமுடியாது.


தவிர, பான் கார்டு உள்ளவர்கள் தங்களது எண்ணை ரகசியமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். இல்லை என்றால், உங்கள் பான் எண் மற்றும் பெயரைக் குறிப்பிட்டு யாராவது லட்சக் கணக்கான தொகைக்கு நகை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டால், பின்னர் வருமான வரித் துறையின் விசாரணைக்கு உட்படப் போவது நீங்கள்தான்.
அரசாங்கம் கறுப்புப் பணத்தின் புழக்கத்தைத் தடுக்க நினைப்பது சரிதான். அதற்காக தங்கத்தை வாங்கவிடாமல் தடுத்தால் நியாயமா?