Published:Updated:

மோசடி சீட்டு நிறுவனங்கள்... இனி செபியின் பிடியில்!

- வா.கார்த்திகேயன்.

மோசடி சீட்டு நிறுவனங்கள்... இனி செபியின் பிடியில்!

- வா.கார்த்திகேயன்.

Published:Updated:

 ஃபாலோ அப்...

##~##

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாரதா குழுமம் நடத்திய மோசடி குறித்து அதிர்ச்சி அடைந்த நிதி அமைச்சகம், நிதி மோசடியைக் கையாள செபிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு கருத்தரங்கில், ''அனைத்து முதலீடுகளுக்கும் ஒரே ரெகுலேட்டர் தேவை. இதற்கேற்ப சட்டத்தை மாற்றவேண்டும். நடவடிக்கை எடுப்பது, சொத்துகளைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் தேவை. இது சிட் ஃபண்ட், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என அனைத்து முதலீட்டுத் திட்டங்களுக்கும் தேவை'' என்று சொன்னார் செபியின் தலைவர் சின்ஹா.

மோசடி சீட்டு நிறுவனங்கள்... இனி செபியின் பிடியில்!

சிட் ஃபண்டுகளும் இதில் அடக்கம் என்பதால், ஸ்ரீமதி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராஜாராமனிடம் பேசினோம். ''ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சிட் ஃபண்ட் விதிமுறை இருக்கிறது. தமிழ்நாட்டில் சிட் ஃபண்ட் நிறுவனம் எனில், சீட்டு மட்டுமே நடத்தவேண்டும்.  ஆனால், மற்ற மாநிலங்களில் சிட் ஃபண்ட் என்ற பெயரில் பணத்தை வசூலித்து, வேறு வேலைகளைச் செய்யலாம். மேலும், சிட் ஃபண்டுகளை கண்காணிக்கவேண்டிய பொறுப்பு பதிவாளருக்கே இருப்பதாக சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இதை எல்லாம் மாற்றமுடியுமா என்று தெரியவில்லை'' என்று முடித்தார்.

இதுகுறித்து முக்கியமான நிதி ஆலோசகர் ஒருவரிடம் பேசினோம். ''ஏற்கெனவே மொத்த முதலீட்டுத் திட்டங்கள் (collective investment scheme) அனைத்தும் செபியின் கீழ்தான் வருகிறது. இப்போது அதில் இருக்கும் விதிமுறைகளை இன்னும் பலப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். காரணம், இதில் இருக்கும் சில விதிவிலக்குகளை பயன்படுத்தி சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார்கள். உதாரணத்துக்கு ஈமு கோழி. இதை மொத்த முதலீடு என்று சொல்லக்கூடாது.  பிஸினஸ் என்றே சொல்லவேண்டும் என்கிறார்கள். நாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறோம். ஃபண்ட் மேனேஜர் முதலீடு செய்யும்போது, எது நம் பணம் என்று தெரியாது. ஆனால், ஈமு கோழியில் கட்டிய பணத்துக்கு கோழி

மோசடி சீட்டு நிறுவனங்கள்... இனி செபியின் பிடியில்!

கிடைத்து விடுவதினால் அதை பிஸினஸ் என்கிறார்கள். இப்போதுள்ள விதிமுறையை மாற்றுவதால் மோசமாக செயல்பட்டுவரும் சீட்டு நிறுவனங்கள் உள்பட பலரும் மாட்டவே செய்வார்கள்'' என்றார் அவர்.

இதுகுறித்து இன்னும் சில அனலிஸ்ட்களிடம் பேசியபோது, அவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருந்தது. ''முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்,  எல்லா நிதி அமைப்புகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முடியுமா என்பது சந்தேகமே. காரணம், ஒவ்வொரு நிதி அமைப்பின் பிஸினஸ் மாடலும் வேறு வேறாக இருக்கும்போது எப்படி இது சாத்தியம்?'' என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, முதலீட்டாளர் களும் பொறுப்புடன் இருப்பது அவசியம். எதில் முதலீடு செய்கிறோம், இவ்வளவு வருமானம் சாத்தியமா? என்கிற கேள்விகளை சர்ட்டிஃபைட் ஃபைனான்ஷியல் ப்ளானர்களிடம் கேட்டு, அதற்கு தகுந்த பதில் கிடைத்தால் மட்டுமே முதலீடு செய்யவேண்டும். முதலீட்டாளர்கள் உஷாராக இருந்தால், ஏமாறுவதற்கு வழியில்லையே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism